‘எடீமா’ எனப்படும் கால் வீக்கம் குணமாக எளிய இயற்கை வைத்தியம்!

Edema
எடீமா
Published on

டலின் பல்வேறு பகுதிகளில் திரவம் தேங்குவதால் ஏற்படும் வீக்கத்திற்கு மருத்துவத்தில், ‘எடீமா’ எனப் பெயர். இது சில சமயங்களில் தானாகவே மறைந்து விடும். அப்படி மறையாமல் நெடுநாட்கள் வரை வீக்கம் நீடித்திருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

ஏடீமா எனப்படும் வீக்கம் பொதுவாக கால்களை, குறிப்பாக பாதங்களை பாதிக்கும். அடிவயிறு, கைகள், கணுக்கால், ஏன் முகத்தில் கூட சில சமயம் வீக்கம் ஏற்படும். கடும் பாதிப்புகளின்போது தசைகள், குடல், நுரையீரல், கண்கள் மற்றும் மூளையையும் பாதிக்கலாம். குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த எடிமா பாதிப்பு ஏற்படுகிறது.

கால்களின் திசுக்கள் அல்லது இரத்த நாளங்களில் தேவைக்கு அதிகமான திரவம் சேரும்போது இப்படி நிகழ்கிறது. கால்களை அதிகமாகப் பயன்படுத்தினாலோ அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தாலோ இப்படி வீக்கங்கள் உண்டாகலாம். பிரசவ சமயத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதம் வீங்குவது இயல்பான ஒன்று. கர்ப்பிணிப் பெண்கள் வீக்கத்துடன் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஏடீமா வீக்கத்தை தடுக்கும் வழிகள்:

1. தண்ணீர் குடித்தால் வீக்கம் குறையும்: திரவம் தேங்குவதால் வீக்கம் ஏற்படுகிறது என்றாலும், தினமும் 10 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். போதிய அளவு நீர் குடிக்கத் தவறினால் உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்படும். 

2. கால்களை உயர்த்துவது: உட்காரும்போது கால்களை சற்று உயரமான ஸ்டூல் மீது வைத்து அமரலாம். படுக்கும் பொழுது கால் பகுதிக்கு இரண்டு தலையணைகளை வைத்து கால்களை உயர்த்தி வைப்பது வீக்கத்தை குறைக்கும்.

3. ஐஸ் பேக் மற்றும் கம்ப்ரெஷன் பேண்டேஜ்: கால் வீக்கம் மற்றும் வலிக்கு ஐஸ் ஒத்தடம் சிறந்தது. ஏனெனில் இவை இரத்த நாளங்களை சுருக்கி அந்தப் பகுதியில் இரத்த சுழற்சியை குறைக்கிறது.கம்ப்ரெஷன் பேண்டேஜ் எனப்படும் எலாஸ்டிக் பேண்டேஜின் லேசான அழுத்தம் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
கேன்சர் நோய்க்கு மிகச் சிறந்த தடுப்பு மருந்தாகும் கேக் பழம்!
Edema

4. வீக்கத்தைக் குறைக்க உதவும் உணவுகள்: உடலில் மக்னீசியம் குறைபாடு காரணமாகக் கூட வீக்கம் ஏற்படலாம். இதற்கு டோஃபூ, கீரை, பாதாம், டார்க் சாக்லேட், புரொக்கோலி போன்ற  மக்னீசியம் அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ளலாம். திராட்சை, செர்ரி பழங்கள், அவகோடா, சால்மன் மீன், ஆலிவ் போன்றவை வீக்கத்தை இயற்கையாகவே குறைக்க உதவும்.

5. கல் உப்பு நீர் - மசாஜ்: சூடான நீரில் ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து காலை அதில் வைத்து பத்து நிமிடங்கள் அமர்ந்திருக்க வீக்கம் மற்றும் வலி குறையும். மசாஜ் செய்வதும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.

6. தவிர்க்க வேண்டிய உணவுகள்: வீக்கத்தை குறைக்க பாக்கெட் உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கலாம். உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொண்டால் திரவம் தேங்குவது குறைந்து வீக்கமும் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com