
சமீபத்தில் ஸ்பெயினில் நீலநிற டிராகன் வருகையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவை பெரும்பாலும் டிராபிகல் காடுகளில் மட்டுமே காணப்படும். ஆனால் சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள சான்டா பார்பரா கடற்கரை மற்றும் ஃபமாரா கடற்கரை பகுதிகள் இந்த நீல நிற டிராகன் வருகையால் கடற்கரைக்குச் தடை போடப்பட்டன. இந்த உயிரினமானது 4.செ மீ அளவே உள்ளது ஆனால் இது கொட்டினால் மிகவும் விஷத்தன்மை நிறைந்ததாக இருக்கும்.
கோடைக்காலத்தில் இதன் வருகையால் டூரிசம் ஸ்பெயினில் பாதிப்படைந்ததாக தெரிகிறது. கோஸ்டா ப்ளாங்கா பகுதியில் மிகவும் புகழ்பெற்ற ப்ளேயாஸ் சென்ட்ரோ பீச்சும் மூடப்பட்டுவிட்டது. மல்லோர்கா பகுதியில் 300வருடங்களுக்குப் பிறகு இந்த நீலநிற டிராகன் வருகை தந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் மிக வருத்தம் அடைந்துள்ளார்கள்.
இந்த மாதிரியான உயிரினத்தை இதுவரை பார்த்ததில்லை என்று ஸ்பெயின் மேயர் கூறுகிறார். இந்த நீலநிற டிராகன் கடல் பகுதிகளில் தலைகீழான நிலையில் காணப்படும். இது இப்படி இருப்பதற்கு அது காற்று பபிளை (bubble) வயிற்றில் ஈர்ப்பதால்தான் என தெரியவருகிறது. இதன் நிறம் நீலநிறம் கடல் நீர்நிறத்தோடு ஒத்து இருப்பதால் இது தலைகீழாக திரிந்து தன்ன காத்துக் கொள்கிறது.
இவைகள் பெரும் பாலும் ஜெல்லி மீன்கள் மற்றும் விஷமுள்ள சைஃபனோஃபோர்ஸை ஆகாரமாக கொள்ளும். நீலநிற டிராகனின் நீலநிற விஷமானது ஜெல்லிமீன் விஷத்தை விட சக்தி வாய்ந்ததாகும். இது கடித்தால் சிவத்தல், வீக்கம் மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும். ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை.
இது ஏன் வந்தது?
சாதாரணமாக இந்த நீலநிற டிராகன்கள் சூடான பகுதிகளான பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்திய கடல் பகுதிகளிலும் காணப்படும். சமீபகாலமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவிலும் காணப்படுகிறது.
மெடிடெரேனிய கடல் பகுதிகளில் மிக அரிதாகவே முன்பு காணப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக மெடிடெரேனியன் பகுதிகளிலும் காணப்படுவதற்குக் காரணம் அதன் உணவுத்தேவைகள் இங்கு பூர்த்தியாவ தால் என்று தெரியவருகிறது.
மெடிடெரேனியன் கடல் பகுதியில் வெப்பநிலை 28டிகிரி செல்சியசாக உள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக இந்த டிராகன் பூச்சி இனம் அதிகமாக தென்படுவதாக காரணத்தை கூறுகிறார்கள்.