அழகின் உச்சம்: நீல நிறக் கண்களைக் கொண்ட அசாதாரண 10 உயிரினங்கள்!

Creatures with blue eyes
Creatures with blue eyes
Published on

ணக்கிலடங்காத உயிரினங்கள் இந்த உலகில் வசிக்கின்றன. அவை ஒவ்வொன்றின் குணநலன்களும் ஒவ்வொரு மாதிரியாக விளங்குகின்றன. குணநலன்கள் மட்டுமில்லை, அவற்றின் உடல் அவயங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன. அந்த வகையில், நீல நிறத்தில் கண்களைக் கொண்ட சில வகை உயிரினங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

சைபீரியன் ஹஸ்கி: பளிச்சென்ற நீல நிறக் கண்களுடன் காணப்படும் இந்த நாய் இனம் சைபீரியாவில் காணப்படுகிறது. இதை குளிர் காலங்களில் அதிகமாகக் காணலாம்.

ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட்: இது அமெரிக்காவை சேர்ந்த நாய் இனம். இதன் உடல் நிறத்திற்கு நேர்மாறாக இவற்றின் கண்கள் நீல நிறத்தில் காணப்படும். இவற்றை கலிஃபோர்னியா பகுதியில் அதிகம் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
உயிர் காக்கும் களைச்செடி: கிணற்றுப்பாசான் மூலிகையின் அற்புதப் பயன்கள்!
Creatures with blue eyes

அலாஸ்கன் கிளே காய்: இது சிறிய வகை ஹஸ்கி நாய் இனம் போல் காணப்படும்.  நீல நிறத்தில் இவற்றின் கண்கள் காணப்படும். இவற்றை வளர்ப்பு நாயாக வீடுகளில் வளர்க்கலாம். இவ்வகை நாய்களை அலாஸ்கா பகுதியில் காணலாம்.

நீல நிற ஹாக் லெமூர்: இவற்றை மடகாஸ்கர் பகுதியில் அதிகம் காணலாம்.  அடர்த்தியான ப்ரௌன் உடலில் நீல நிறக் கண்கள் பளிச்சென்று இருக்கும். போட்டோ எடுக்க நன்றாக இருக்கும்.

நார்தர்ன் கானெட் (Northern Gannet): இவை கடலில் வாழும் பறவைகளாகும். இவை தனது வெள்ளை உடலுக்கு நேர்மாறாக பளிச்சென்ற நீல நிறக் கண்களைக் கொண்டிருக்கும். ஸ்காட்லாந்து, அயர்லாந்து பகுதிகளில் இவை காணப்படும்.

எல்லோ ரம்ப்ட் காசிக்வி (Yellow Rumped cacique): நல்ல கருப்பு நிற உடலைக் கொண்ட இப்பறவை, நீல நிறத்தில் கண்களைக் கொண்டிருக்கும். இதன் பின்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெரு, பொலிவியா மற்றும் பிரேசிலில் கூட்டமாக வாழும் இவற்றைக் காணலாம்.

இதையும் படியுங்கள்:
இயற்கைக் கொசு விரட்டி: இந்தத் தாவரங்களை வீட்டில் வளர்த்து கொசு கடியிலிருந்து தப்பிப்போம்!
Creatures with blue eyes

ஆர்க்டிக் ஓநாய்: இந்த ஓநாயின் கண்கள் இவற்றின் இள வயதில் நீல நிறமாக இருக்கும். பிறகு வயதாக ஆக மஞ்சள் நிறமாக மாறி விடும். கனடா மற்றும் க்ரீன்லாந்த் பகுதியில் இவற்றைக் காணலாம்.

நீல நிற லூசிஸ்டிக் பால் பைதன் (Blue eyed Leucistic ball python): இந்த வகை பாம்பிற்கு நீல நிறக் கண்கள் உண்டு. உடல் வெள்ளை நிறமாக  இருக்கும். ஆப்பிரிக்காவில் இதைக் காணலாம்.

அப்பலூசா குதிரைகள்: முகத்தில் வெள்ளை நிறத் திட்டுக்கள் இருக்கும் இந்த வகை குதிரைகளின் கண்கள் நீல நிறத்தில் இருக்கும். கண்ணைப் பறிக்கும் வகையில் காணப்படும் இந்த அப்பலூசா குதிரைகளை அர்ஜென்டைனா மற்றும் அமெரிக்காவில் காணலாம்.

ஆர்க்டிக் நரி: உடல் முழுவதும் வெள்ளை நிறத்தில் காணப்படும் இந்த நரி, நீல நிறக் கண்களைப் பெற்றிருக்கும். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அலாஸ்கா, சைபீரியா போன்ற பனிப் பிரதேசத்தில் இவை வாழும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com