விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மும்பையில் அதிகரித்து வரும் சமூக வேளாண் முறை!

Community Farming
Community FarmingImg Credit: Freepik

விவசாயம் அழிந்து வரும் தொழில்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. விலை நிலங்களினுடைய பரப்பும் இந்தியாவில் பெருமளவில் குறைந்திருக்கிறது. அதோடு பருவநிலை மாற்றம், தொழில் மையம், தொழில்நுட்ப மேம்பாடு, எண்ணற்ற எதிர்பார்ப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய கிராமங்களின் பிரதான தொழிலாக இருந்த விவசாயம் தற்போது அழிவின் விளிம்பை நோக்கி தனது பயணத்தை தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில் படித்த பட்டதாரிகளும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர்களும், ஆரோக்கிய நிறைந்த உணவுகளை உண்ண விரும்புவர்கள் இணைந்து மும்பையில் ஏற்படுத்தி இருக்கக்கூடிய அமைப்பு ட்ரீம் ப்ரோ. இந்த அமைப்பின் நோக்கம் தாங்களே உணவுப் பொருள்களை விளைவித்து, அறுவடை செய்து பயன்படுத்திக் கொள்வதை முதன்மையாகக் கொண்டது. அழிந்து வரும் விவசாயத்தால் உணவு பொருட்களின் விலை ஏற்றம், ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் சமாளிக்கும் நோக்கத்திலும் விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மண்வளத்தை பெருக்கவும், மும்பையைச் சேர்ந்த பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து 2018 ஆம் ஆண்டு இந்த அமைப்பை ஏற்படுத்தினர். இந்த அமைப்பின் மூலம் வீட்டின் தோட்டம், மொட்டை மாடி மற்றும் பல்வேறு தனியார் இடங்களில் மக்கள் குழுவாக இணைந்து விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இந்த செயல்பாடு சமூக வேளாண் முறை என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மாமிச கழிவில் தயாரிக்கப்படும் இயற்கை உரம்!
Community Farming

இதன் மூலம் தங்கள் வீடுகளில் வீணாகும் உணவுப் பொருட்களை உரங்களாக பயன்படுத்தி பயிரிட்டு சாகுபடி மேற்கொள்கின்றனர். பிறகு தாங்கள் விளைவித்த உணவு பொருட்களை தாங்களே அறுவடை செய்து, தங்கள் வீட்டின் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் மூலம் பழங்கள், காய்கறிகள், பூக்கள் ஆகியவை கிடைப்பதாகவும் இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, சமையலுக்காக ஆகும் செலவு குறைவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் குறைந்த நேரத்தை இதற்காக செலவிடுவதால் உடல் ஆரோக்கியம், மன நிறைவு ஆகியவை ஏற்படுவதாகவும் சமூக வேளாண் பணியில் ஈடுபடும் நபர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com