
தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டியின் புவி இயற்பியலாளர் கி வோன் சியோ தலைமையிலான குழு, பருவநிலை மாற்றத்தால் பூமியில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி ஒரு ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில் சில அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
2016- லிருந்து நாசாவும் பூமியின் சுழற்சி பற்றிய ஆய்வுகளை தொடர்ந்து நடத்துகிறது. கடந்த இரு தசாப்தங்களில் பூமி தனது அச்சிலிருந்து 80 செ.மீ கிழக்கு நோக்கி சாய்ந்துள்ளது!!
பூமியின் அச்சின் சாய்வு குறித்து அறிவியல் உலகம் கவலை கொண்டுள்ளது. நிலத்தடி நீர் மேற்பரப்பில் உறிஞ்சப்படுவதால் பூமியின் உள்புற எடை குறைகிறது. இதே நேரம் கடல்நீர் மட்டம் உயர்வதால் மேற்புறத்தில் எடை அதிகரித்து இந்த சாய்வு நடந்துள்ளது.
நிலத்தடி நீரின் பெரும்பகுதி தொழில்துறை பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும், குடிநீருக்கும், மற்றும் பிற பயன்பாட்டிற்காகவும் உறிஞ்சப்படுகிறது. இது பூமியின் அச்சின் சாய்வு சுழற்சியில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பூமி எப்போதுமே அதன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்திருக்கும். அதனால்தான் நமக்குப் பருவங்கள் மற்றும் பகல் இரவு நேரங்கள் உள்ளது. தரவுகளின் படி, 1993 முதல் 2010 வரையில் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, பூமியின் ஆச்சில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவதே இதற்குக் காரணம். நிலத்தடி நீர் பல்வேறு பகுதிகளில் இருந்து உறிஞ்சப்பட்டு இறுதியில் கழிவு நீராக கடல்களில் கலக்கிறது. பெருகி வரும் கடல் நீர், அதன் மட்டத்தை வெகுவாக உயர்த்துகிறது, கடல் மட்டம் 0.24 அங்குலம் உயர்ந்துள்ளது. இதனால் பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் அது எவ்வாறு பூமியின் சுழற்சியை பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது தான் இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். இந்த ஆய்வின் மூலம் நிலத்தடி நீரை தொடர்ந்து அதிகமாக உறிஞ்சுதல், நீண்ட கால காலநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலைப்படுகின்றனர். கடல்களில் இந்த நீர் கலப்பதால் கடல் மட்டம் உயர்வது மற்றும் பனிக்கட்டிகள் உருகுவது போன்றவற்றால் கடந்த இரு தசாப்தங்களில் பூமி தனது அச்சிலிருந்து 80 செ.மீ கிழக்கு நோக்கி சாய்ந்துள்ளது!!
கடல்நீர் மட்ட உயர்வு குறித்தும் ஆய்வு அறிக்கை விளக்குகிறது. பெருங்கடல்களின் வெப்ப விரிவாக்கம் ஆகியவற்றுடன், பூமியின் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் கடல் மட்ட உயர்வுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நிலத்தடி நீரின் பயன்பாடு தொடர்ந்து அதிகமாக இருந்தால், எதிர்காலத்தில் இது விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். பூமியின் சாய்வில் ஏற்படும் பாதிப்புகள் நமக்கு தினசரி நேரங்களிலும் பல விளைவுகளை உண்டாக்கும். ஒரு நாளின் நேரத்திலும், இரவு பகல் நாள் முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். பனி, வெயில், மழை காலத்தையும் மாற்றி அமைக்கும்.