முணுமுணுக்கிறது பூமி! - சில சுவாரஸ்யமான உண்மைகள்!

சர்வதேச பூமி தினம் (22.04.2024)
The earth murmurs! - Some interesting facts!
The earth murmurs! - Some interesting facts!Pinkey Sharma Orchids

ர்வதேச பூமி தினம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது கிரகத்தை கௌரவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாள், 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ல் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் தனி கொடி இருக்கும். அதில் அந்தந்த நாட்டின் அருமை, பெருமைகளை பறைசாற்றும் அம்சங்கள் இடம் பெறும். அந்த வகையில் எல்லா நாடுகளையும் உள்ளடக்கிய நாம் வாழும் பூமிக்கும் தனிக்கொடி இருக்கிறது. நீல வண்ண கொடியில், வெள்ளை நிற வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி பினைந்தாற்போன்று இருப்பதுதான் நாம் வசிக்கும் பூமியின் கொடி. இதில் இருக்கும் நீல வண்ணம் மனிதன் உயிர் வாழ தேவையான நீரை குறிக்கிறது.

பூமி தினத்தை முன்னிட்டு, நாம் வாழும் இந்த கிரகத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைத் தெரிந்துகொள்வோம். பூமி தோராயமாக 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக உள்ள கோள் இது. முதலாவது மெர்க்குரி, இரண்டாவது வீனஸ். உயிர்கள் இருப்பதாக அறியப்பட்ட ஒரே கிரகம் பூமிதான்.

அனைத்து கிரகங்களும் கிரேக்க, ரோமானிய ஆண் மற்றும் பெண் கடவுளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. ஆனால் பூமிக்கு மட்டும் ‘எர்த்’ என்ற ஆங்கிலச் சொல் மட்டும் ஜெர்மன் மொழியின் ‘எர்டே’ என்பதிலிருந்து வந்தது. இதற்கு ‘நிலப்பகுதி’ என்று பெயர். நமது கிரகம் பொதுவாக ஒரு சரியான கோளமாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், பூமி ஒரு சரியான கோளம் அல்ல.

பூமி 73 சதவீதம், நைட்ரஜன் 21சதவீதம் ஆக்ஸிஜன், 1 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆர்கான் வாயுக்களால் நிறைந்தது. இவைதான் பூமியில் நிலவும் தட்பவெப்ப நிலையை சமன் செய்கிறது.

சூரியனின் அச்சில் மிக வேகமாக நகரும் கோள்களில் ஒன்று பூமி. இது நிமிடத்திற்கு 30 கிமீ வேகத்தில் நகருகிறது. சூரியனைச் சார்ந்து அது 23 டிகிரி சாய்ந்த கோணத்தில் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பூமியில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு காலநிலை காணப்படுகிறது. பூமியில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை கொண்ட இடம் அமெரிக்காவில் உள்ள டெத் வேலியில் உள்ளது. அங்கு 1913ம் ஆண்டு, ஜூலை 10ம் தேதி வெப்பம் 56.7C ஆக பதிவானது. மறுமுனையில் அன்டார்டிகா உள்ளது. வோஸ்டாக் நிலையத்தில் 31 ஜூலை 1983ல், வெப்பம் −89.2Cஆக குறைந்தது.

பூமியில் மரங்கள் நிறைந்த காடுகள், மலைகள் மற்றும் சமவெளி பகுதிகள் என இருப்பது 25 சதவீதம்தான். மீதி 75 சதவீதம் நீர் சூழ்ந்த பகுதிகள்தான். பூமியில் திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் நீர் உள்ளது. இது பனிப்பாறைகள், சதுப்பு நிலங்கள், ஏரிகள், ஆறுகள், கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் வடிவில் பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட முக்கால் பகுதியை உள்ளடக்கியுள்ளது. பூமியின் மொத்த நீரில் 97 சதவிகிதம் கடல்களில் உப்பு நீராக உள்ளது.

பூமிக்கு ஒரு பாதுகாப்பு கவசம் உள்ளது. ஆமாம், பூமியை சுற்றி 60,000 கிமீ வரை காந்தப்புலம் அதனை மற்ற கிரகங்களின் கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. பூமியின் காந்தப்புலம் சூரியனில் இருந்து வரும் உயர் ஆற்றல் துகள்களின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு எதிராக ஒரு கவசமாக செயல்படுகிறது. இந்த புலம் பூமியின் உள் மையத்திலிருந்து சூரியக் காற்றைச் சந்திக்கும் எல்லை வரை நீண்டுள்ளது.

பூகம்பங்கள், எரிமலைகள் என எவையும் சீற்றம் கொள்ளாமல் அமைதியாக இருக்கும்போதும் பூமி மெல்லிய முணுமுணுக்கும் ஓசையை வெளிப்படுத்துவதாக பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்திய பெருங்கடலின் பல அடிகள் ஆழத்தின் தரைப்பகுதியில் பூமி வெளியிட்ட மெல்லிய ஓசையை பதிவு செய்துள்ளனர்.

சீனாவில் உள்ளது உலகின் மிக பிரமாண்டமான ‘திரி கார்ஜீஸ்’அணை. இது பூமியின் சுழற்சிக்கு எதிராக செயல்படுவதாகவும், பூமியின் சுழற்சி வேகத்தையும் குறைப்பதாக ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்த விடும்போது அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் பூமியின் சுழற்சி வேகத்தில் சிறு மாற்றங்களை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பாலைவனத்தில் மட்டுமே வாழும் Sand Cats–ன் சுவாரசிய தகவல்கள்!
The earth murmurs! - Some interesting facts!

விண்வெளி, பூமியிலிருந்து 100 கிமீ க்கு மேலே தொடங்குகிறது வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லை கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ள கர்மான் கோடு என்று அழைக்கப்படுகிறது. 75 சதவிகிதம் வளிமண்டல பகுதி, கடலின் மேற்பரப்பில் இருந்து முதல் 11 கிமீ உயரத்தில் காணப்படுகிறது.

பூமி மூன்று அடுக்குகளை கொண்ட ஒரு கோள். பூமி சூரிய குடும்பத்தில் அடர்த்தியான மற்றும் ஐந்தாவது பெரிய கிரகமாகும். பூமியின் உள்பகுதி சுமார் 1,200கி.மீ. ஆரம் கொண்ட திடமான பந்தாக கருதப்படுகிறது. இது முக்கியமாக இரும்பினால் ஆனது. இதன் எடையில் 85 சதவிகிதம் இரும்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மையத்தில் 10 சதவீதம் நிக்கல் உள்ளது

பூமியின் மிகப்பெரிய உயிரின கட்டமைப்பு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் அமைந்துள்ள கிரேட் பேரியர் ரீஃப் ஆகும் பூமியில் வாழும் உயிரினங்களால் ஆன மிகப்பெரிய ஒற்றை அமைப்பாகும். விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே அமைப்பு இதுதான். 2,000 கிலோ மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட இந்த அமைப்பில், ஆயிரக்கணக்கான கடல் வாழ் இனங்கள் வாழ்கின்றன.1981ம் ஆண்டில், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பகுதியாக இது அறிவிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com