Brazilian Treehopper: மண்டை மேல கொண்டை வச்சிருக்கானே எவன்டா இவன்? 

Brazilian Treehopper Insect
Brazilian Treehopper

பிரேசிலின் மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் Brazilian Treehopper என அழைக்கப்படும் குறிப்பிடத்தக்க பூச்சியைக் காணலாம். அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் வித்தியாசமான நடத்தைகளால், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. இப்பதிவில் இந்த விசித்திரமான பூச்சி இனம் பற்றிய சில சுவாரசிய உண்மைகளைத் தெரிந்து கொள்வோம். 

விஞ்ஞானரீதியாக Bocydium Globulare என அழைக்கப்படும் இந்த பூச்சியினம், உலகில் உள்ள மற்ற பூச்சி வகைகளில் இருந்து முற்றிலும் தனித்துவமான உடல் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் தலையிலிருந்து நீண்டு காணப்படும் கொண்டை போன்ற அமைப்பைப் பயன்படுத்தி, மரத்தில் உள்ள ஒரு முள் அல்லது ஒரு சிறிய குச்சி போல தன்னை மறைத்துக் கொள்கிறது. இது வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. 

மிமிக்கிங் மன்னன்: Brazilian Treehopper அதன் தனித்துவமான தோற்றத்திற்கு மட்டுமின்றி, போலியாக தன்னை வெளிக்காட்டும் நடத்தைக்காகவும் அறியப்படுகிறது. இந்தப் பூச்சியால், தன்னை ஓர் மரத்தில் இருக்கும் பாகம் போலவே காட்டிக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்புத் திறனை இது வெளிப்படுத்துகிறது. இந்தத் திறமை, இதற்கான இரையை வேட்டையாடவும், தன்னை வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து மறைத்துக் கொள்ளவும் பெரிதளவில் உதவுகிறது.

தகவல் தொடர்பு:  இந்த பூச்சி இனத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அதன் குறிப்பிடத்தக்க தகவல் தொடர்பு அமைப்பாகும். இந்த பூச்சிகள் முற்றிலும் வித்தியாசமாக அதிர்வுகளைப் பயன்படுத்தி தொடர்பு கொள்கின்றன. இவற்றின் உடலில் உள்ள சிறப்பு கட்டமைப்புகளைப் பயன்படுத்தி, குறிப்பிடத்தக்க அதிர்வுகளை உருவாக்குகின்றன. இந்த அதிர்வை மற்ற பூச்சிகள் தெரிந்துகொண்டு, தகவல் பரிமாற்றம் நடக்கிறது. 

இதையும் படியுங்கள்:
Surrounded by Idiots புத்தகம் கற்றுத்தந்த வாழ்க்கை பாடங்கள்! 
Brazilian Treehopper Insect

இந்த தகவல் தொடர்பு முறை, இவற்றின் கூட்டம் ஒற்றுமையாக இருக்கவும், அச்சுறுத்தல்களை தெரிந்து கொள்ளவும், தன் இனத்தை அழியாமல் பார்த்துக் கொள்ளவும் உதவுகிறது. இந்த பூச்சிகள் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு செல்லும்போது, தன்னையும் அறியாமல் மகரந்தம் மற்றும் விதைகளை எடுத்துச் செல்வதால், பல்வேறு தாவர இனங்களின் இனப்பெருக்கத்திற்கு இவை உதவுகின்றன. இதனால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும் ஆரோக்கியத்துடன் இருப்பதில் இந்த பூச்சிகள் பெரும் பங்காற்றுகின்றன. 

இந்த பூச்சியைப் பார்க்கும்போது, போக்கிரி படத்தில் வடிவேலுவின் மண்டை மேல் இருக்கும் கொண்டே தான் ஞாபகத்திற்கு வருகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com