Surrounded by Idiots புத்தகம் கற்றுத்தந்த வாழ்க்கை பாடங்கள்! 

Surrounded by Idiots Author
Surrounded by Idiots

Surrounded by Idiots என்ற தாமஸ் எரிக்சன் எழுதிய சிந்தனையைத் தூண்டும் புத்தகம், மனித நடத்தைகள் குறித்து நமக்கு எடுத்துரைக்கும் புத்தகமாகும். இந்த புத்தகம் உங்களையும், உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் நன்றாகப் புரிந்து கொள்வதற்கான நல்ல புரிதலை ஏற்படுத்தும். இப்பதிவில், நமது உறவுகள் மற்றும் சுய முன்னேற்றத்தை மேம்படுத்த Surrounded by Idiots புத்தகம் கற்றுத்தரும் வாழ்க்கை பாடங்கள் பற்றி பார்க்கலாம். 

இந்த புத்தகம் நாம் எல்லா இடங்களிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எடுத்துரைக்கிறது. குறிப்பாக இதில் கூறப்பட்டிருக்கும் DISC என்கிற கோட்பாடு, மக்களுடன் எப்படி நம் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற வழிகளை அடையாளம் காண உதவும். 

பல்வேறு விதமான தகவல் தொடர்பு பாணிகளை நாம் கற்றுக் கொள்வதன் மூலம், நமது ஆளுமையில் பன்முகத்தன்மை இருக்கும். இது எல்லாவிதமான நபர்களுடன் அனுசரித்து வேலை செய்ய உதவுவதாக சொல்லப்படுகிறது. 

குறிப்பாக இப்புத்தகத்தில், தெளிவான மற்றும் நேரடியான தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். நமக்கு தேவையானதை சரியாக வெளிப்படுத்துவதன் மூலம், மற்றும் பிறரது தேவையை கவனிப்பதன் மூலமாக உறவுகளுக்கு மத்தியில் தவறான புரிதல்கள் குறைந்து, ஒருவருக்கொருவர் நல்ல தொடர்பைக் கொண்டிருக்க முடியும். 

இப்புத்தகம் நாம் நம் மீது காட்டவேண்டிய அக்கறையை ஊக்குவிக்கிறது. அதுவும் பல விஷயங்களை முயற்சித்துப் பார்த்து நம்முடைய உண்மையான திறனை நாம் கண்டுபிடிக்க நேரத்தை செலவிட வேண்டும் என அறிவுறுத்துகிறது. 

பிறரைப் பற்றி நன்றாக புரிந்து கொள்வதால், இருவருக்கு மத்தியில் நடக்கும் மோதலை எளிதாகத் தீர்க்கலாம். எனவே மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும், பேச வேண்டும் என்பதை உணர்ந்து, நமது அணுகுமுறையை மாற்றி அமைப்பதால், மோதல் சூழலையும் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

நீங்கள் ஓர் சிறந்த நபராக மாற, உங்களை சிறப்பானதொரு குழுவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலமாக உங்களது வெற்றி விகிதம் அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Surrounded by Idiots Author

இப்புத்தகத்தில் பல இடங்களில் தனிப்பட்ட வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றி ஆழமாக குறிப்பிடப்பட்டிருக்கும். உங்களது கம்போர்ட் சோனில் இருந்து வெளியே வந்து, தைரியமாக சில முடிவுகளை எடுத்து செயல்படுவதால், வாழ்க்கையில் வெற்றி அடையலாம் என்ற கருத்தை இப்புத்தகம் தாங்கி நிற்கிறது. 

Surrounded by Idiots புத்தகம், தொடர்ச்சியாக நாம் கற்க வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தும். மேலும் மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டு நாம் அறிவை வளர்த்துக் கொள்வதால், புதிய நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, இந்த அறிவு பேருதவியாக இருக்கும் என்பதையும் நமக்கு தெரியப்படுத்துகிறது. 

மேலும், பல கருத்துக்களை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் இப்புத்தகத்தை, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும். இதுபோன்ற புத்தகங்களைப் படிப்பது மூலமாகத்தான், நம்முடைய வாழ்க்கை வளமாகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com