உலகில் காணப்படும் மிகப் பழமையான நான்கு மரங்கள்!

Four oldest trees
Four oldest trees
Published on

இந்தப் பூமியில் மனிதர்களோடு சேர்த்து பல உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதில் மனிதர்கள் 100 வயதிற்கு மேல் வாழ்வது என்பது அதிசயத்திலும் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. மற்றொரு உயிரினமான மரங்களோ சர்வசாதாரணமாக ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் என்று காலங்களைத் தாண்டி நிலைத்திருக்கின்றன. அவை என்னென்ன மற்றும் அவற்றின் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

Methuselah Bristlecone Pine
Methuselah Bristlecone Pine

Methuselah (பிரிஸ்டில்கோன் பைன்) (Bristlecone Pine):

கலிபோர்னியாவின் வெள்ளை மலைகளில் காணப்படும் இந்தப் பழங்கால பிரிஸ்டில்கோன் பைன், 1957இல் ஆய்வு செய்தபோது 4,789 ஆண்டுகள் பழமையானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது விதைக்கப்பட்ட ஆண்டோ கி.மு 2833இல் என்று மதிப்பிட்டனர். குறிப்பிடத்தக்க வகையில், பல யுகங்களை மீறி Methuselah (உலகின் மிகப் பழமையான மரம்) இன்று வரை நிலைத்திருக்கிறது. அதற்கு எந்த தீங்கும் வராமல் இருக்க அதன் பாதுகாப்பு கருதி அந்த மரம் இருக்கும் இடம் இன்றுவரை ரகசியமாகவே உள்ளது.

Sarv-e Abarqu Zoroastrian Sarv
Sarv-e Abarqu Zoroastrian Sarv

Sarv-e Abarqu (Zoroastrian Sarv):

ஈரானின் Yazd மாகாணத்தில் Sarv-e Abarqu உள்ளது, குறைந்தது 4,000 ஆண்டுகள் பழமையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சைப்ரஸ் மரம் மனித நாகரிகத்தின் விடியலைக் கண்டது என்று கூறலாம். இது ஈரானிய தேசிய நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது. இது ஆசியாவிலேயே மிகவும் பழமையான உயிரின வகையாக இருக்கலாம் என்றும் கூட கருதப்படுகிறது.

Llangernyw Yew
Llangernyw YewImg Credit: Wikipedia

லாங்கர்னிவ் யூ (Llangernyw Yew):

நார்த் வேல்ஸில் உள்ள லாங்கர்னிவ் கிராமத்தில்(Llangernyw village), உள்ள செயின்ட் டைகெய்ன்ஸ்(St. Dygain’s) தேவாலயத்தில் அமைந்துள்ள லாங்கர்னிவ் யூ சுமார் 4,000 ஆண்டுகளை தாண்டி செழித்து வளர்ந்துள்ளது. வரலாற்றுக்கு முந்தைய (prehistoric Bronze Age) யுகத்தில் நடப்பட்ட இது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

Alerce Fitzroya cupressoides
Alerce Fitzroya cupressoides

Alerce (Fitzroya cupressoides):

இந்த வகை உயரமான மரங்கள், ஆண்டிஸ் மலைகளை(Andes mountains) பூர்வீகமாகக் கொண்டவை. தொடர்ச்சியாக இந்த வகை மரங்கள் வெட்டப்படுவதால், இதன் சரியான வயதை கணக்கிடுவதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது. இருப்பினும், அறியப்பட்ட சில மிகப் பழமையான விஷயங்களை வைத்து குறைந்தபட்சம் இது 3,000 ஆண்டுகள் பழமையாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
விலங்குகள் இயற்கை சீற்றத்தை முன்கூட்டியே உணர்த்துமா? இந்தப் பேரிடர் பாதுகாவலன் பற்றி தெரியுமா?
Four oldest trees

இந்த மரங்கள் எப்படி பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கின்றன?

மெதுவான வளர்ச்சி: பழங்கால மரங்கள் நத்தை வேகத்தில் வளரும். இவற்றின் இந்தப் படிப்படியான வளர்ச்சி, அதற்குத் தேவையான வளங்களை திறமையாக எடுத்துக்கொள்ளவும், சுற்றுச்சூழல் அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு, விரைவாக வயதாவதை தவிர்க்கவும் அனுமதிக்கிறது.

வாஸ்குலர் திசுக்கள்(Regeneration of Vascular Tissue): தீவிர வெப்பநிலை, வறட்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளைச் சமாளிக்க, இந்த மரங்கள் வாஸ்குலர் திசுக்களை மீண்டும் உருவாக்குகின்றன. இந்தத் திசுக்கள் தாவரம் முழுவதும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செல்ல உதவுகின்றன. இம்மரங்கள் கடினமான சூழ்நிலைகளைத் தாங்க இந்தத் திறன் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
காலநிலை நெருக்கடி: அவசர நிலையை புரிந்துகொள்வோம்!
Four oldest trees

பயன்கள் மற்றும் அதன் தனித்துவங்கள்:

கலாச்சார முக்கியத்துவம்: இந்தப் பழமையான மரங்கள் கலாச்சார மற்றும் வரலாற்று மதிப்பைக் கொண்டுள்ளன. நாகரிகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை இவை சந்தித்திருக்கும். இதனால் இவை நமது கடந்த காலத்துடனான உயிருள்ள தொடர்பை வழங்குகின்றன.

பல்லுயிர் முக்கிய இடங்கள்(Biodiversity Hotspots): பழங்கால மரங்கள் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கின்றன. வயது ஆக ஆக அவற்றில் வரும் ஓட்டைகள் மற்றும் பிளவுகள் பூச்சிகள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்களின் வாழ்விடமாகின்றன.

மீள்தன்மை(Resilience): குறுகிய கால இனங்கள் போலல்லாமல், பழங்கால மரங்கள் மாறிவரும் காலநிலை மற்றும் இடையூறுகளுக்கு ஏற்றவாறு வளர்வதால் மீள்வதற்கான தன்மை மற்றும் செயலை நமக்கு உணர்த்துகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com