கடல் ஆழத்தில் மறைந்திருக்கும் பிரம்மாண்ட ரகசியங்கள்!

Deep sea
Deep sea
Published on

டல் - நம்மைச் சூழ்ந்து அலைபாயும் இந்த அளப்பரிய நீர் உலகம் எத்தனை ஆச்சரியங்களை தன்னுள் மறைத்து வைத்திருக்கிறது! இது ஒரு பிரம்மாண்ட நூலகம் போல, அதன் ஆழங்களில் ஆயிரக்கணக்கான மீட்டர் கீழே அறியப்படாத உயிர்கள், சிக்கலான நீரோட்டங்கள், பூமியின் காலநிலையை கட்டுப்படுத்தும் மறைந்த சக்திகளைக் கொண்டிருக்கிறது. நாம் பார்க்கும் கடல் மேற்பரப்பு அலைகளுக்கு அப்பால், ஒரு மறைந்த உலகம் உள்ளது.

இது நமது கற்பனையை மீறி நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டிருக்கிறது. இப்போது, அட்லாண்டிக் கடலில் ஒரு குளிர் பகுதி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ‘AMOC என்றால் என்ன? ஏன் கடல் உயிர்களுக்கு சரியான ஆழம், வெப்பநிலை, உப்பு அளவு அவசியம்? இவ்வளவு பெரிய கடலில் இதை அளவிட முடியுமா?’ என்று நீங்கள் யோசிக்கலாம். வாங்க, கடலுக்குள் ஒரு ஆழ டைவ் அடித்துப் பார்ப்போம்!

இதையும் படியுங்கள்:
நவீன வர்த்தகத்தின் அச்சாணி: ரோட்டர்டாம் துறைமுகத்தின் தனித்துவங்கள்!
Deep sea

AMOC என்றால் என்ன? இது எப்படி இயங்குகிறது?

AMOC என்பது அட்லாண்டிக் மெரிடியனல் ஓவர்டர்னிங் சர்க்யூலேஷன் (Atlantic Meridional Overturning Circulation) என்று அழைக்கப்படுகிறது. இது கடல் நீரின் ஒரு பிரம்மாண்ட சக்கரம் போல உள்ளது. வெப்பமான, உப்பு நிரம்பிய நீரை தெற்கு கடல்களிலிருந்து வட அட்லாண்டிக்குக் கொண்டு செல்கிறது. அங்கு நீர் குளிர்ந்து கீழே ஊர்ந்து, மறுபடி தெற்காகத் திரும்புகிறது. இந்த சுற்று நமது பூமியின் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கிறது.

குறிப்பாக, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் காலநிலையை. ஆனால், இந்த சக்கரம் மெதுவாகினால், வெப்பம் குறைவாகவே வடக்கு நோக்கி செல்கிறது. இதனால் வட அட்லாண்டிக்கில் ஒரு குளிர் பகுதி உருவாகிறது. இதை அறிவியலாளர்கள் ‘North Atlantic Warming Hole’ (NAWH) என்று அழைக்கின்றனர். ஆனால், இப்போது இது ‘குளிர் புள்ளி’ ஆக மாறிவிட்டது.

இதையும் படியுங்கள்:
ஆச்சரியமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட ஓர்கா திமிங்கலங்கள்!
Deep sea

கடல் உயிர்களுக்கு ஏன் சரியான ஆழம், வெப்பநிலை, உப்பு அளவு தேவை?

கடலில் வாழும் உயிர்களான மீன்கள், சிப்பி மற்றும் பல்வேறு உயிரினங்களுக்கு தங்கள் வாழ்க்கைக்கு ஒரு சிறப்பு சூழல் தேவைப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு மீன் இனம் 15°C முதல் 20°C வரை வெப்பநிலையில் நன்றாக வளரும். உப்பு அளவு மாறினால், அவை சுவாசிக்கவோ, உணவு தேடவோ அவதிப்படும். ஆழமும் முக்கியம். சில உயிரினங்கள் ஆழத்தில் ஒளியில்லாத சூழலில் வாழ்கின்றன. மற்றவை மேற்பரப்பில் சூரிய ஒளியைப் பயன்படுத்துகின்றன. AMOC மெதுவானால், நீர் குளிர்ந்து உப்பு குறையும். இதனால் உயிரினங்கள் இடம் பெயர்ந்து, மீன் பிடி மற்றும் கடல் உணவு சங்கிலி பாதிக்கப்படலாம். இந்த சமநிலை அவர்களது வாழ்க்கைக்கு அத்தியாவசியம்.

இவ்வளவு பெரிய கடலில் இதை அளவிட முடியுமா?

அட்லாண்டிக் கடல் லட்சக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களை உள்ளடக்கியது. இதை அளப்பது ஒரு பெரிய சவால்தான். ஆனால், அறிவியலாளர்கள் வெய் லியூ மற்றும் கை-யுவான் லி தலைமையில் 100 வருட தரவைப் பயன்படுத்தி இதைச் சாதித்திருக்கிறார்கள். அவர்கள் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, உப்பு அளவு போன்றவற்றை அளக்க சிறப்புக் கருவிகள் மற்றும் 94 காலநிலை மாதிரிகளை சோதித்துப் பார்த்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆச்சரியமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட ஓர்கா திமிங்கலங்கள்!
Deep sea

3000 மீட்டர் ஆழத்திலும் குளிர்ச்சியை கண்டுபிடித்திருப்பது ஒரு பெரிய சாதனையாகும். ஆனால், கடல் முழுவதையும் அளப்பது இன்னும் சவாலானது. அதற்கு மேலும் ஆராய்ச்சி தேவை.

குளிர் பகுதியால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

இந்தக் குளிர் பகுதி வட அட்லாண்டிக்கில் (40°N முதல் 65°N) அமைந்துள்ளது. இது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை பாதிக்கும். AMOC மெதுவாகினால், குளிர்ந்த குளிர்காலம், அதிக புயல்கள், கடல் மட்டம் உயருதல் போன்ற வானிலை மாற்றங்கள் நிகழலாம். கடல் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, மீன்பிடி சரிந்து பொருளாதாரம் பாதிக்கப்படலாம். கை-யுவான் லி கூறியபடி, ‘நேரடி கண்காணிப்பு இல்லை. ஆனால், தரவு கடந்த காலத்தை புரிய வைக்கிறது.’

ஒரு எச்சரிக்கை சின்னம்: கடலின் இந்த குளிர் பகுதி ஒரு எச்சரிக்கை சின்னம். AMOC மெதுவாகினால், வானிலை, கடல் உயிர்கள் மற்றும் நமது வாழ்க்கை அனைத்தும் பாதிக்கப்படும். இதற்கு அறிவியலாளர்கள் தீர்வு காண முயல்கிறார்கள். நாமும் கடலை காப்பாற்றி, இந்த மாற்றங்களுக்கு தயாராக வேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com