மஞ்சளின் மகத்துவம்: நிறம், சுவை, மருத்துவம் என பல மடங்கு பலன்கள்!

Benefits of turmeric
Turmeric
Published on

ஞ்சள், உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது 60 முதல் 90 சென்டி மீட்டர் உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகை செடியாகும். இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முனையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழைமையான நறுமணப் பொருள் ஆகும். இதனை தமிழர்கள் வீட்டுச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.

மஞ்சளில், ‘குர்குமின்’ என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன், மஞ்சளால் அடையக்கூடிய பல்வேறு பயன்களைத் தரும் பொருளாக இது விளங்குகிறது. மஞ்சளுக்கு 20°c அல்லது 30°cக்கு இடைப்பட்ட வெப்பநிலை தேவைப்படுகிறது. மேலும், கணிசமான அளவு நீர் பாசனமும் இதற்குத் தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் வேளாண்மைக்கும், சந்தைக்குப் பெயர் பெற்றுள்ளது.

மஞ்சள் வகைகள்: மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஆலப்புழை மஞ்சள் உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது. முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள் / பலா மஞ்சள், மர மஞ்சள் / ஆலப்புழா மஞ்சள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
சவால்கள் நிறைந்த சூழலில் வாழ ஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட 8 விலங்கினங்கள்!
Benefits of turmeric

முட்டா மஞ்சள் சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ பெண்கள் முகத்திற்குப் பூசுவார்கள். கஸ்தூரி மஞ்சள் வெள்ளை வெள்ளையாக தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது. இதனை பெண்கள் முகத்திற்குப் பூசுவார்கள். விரலி மஞ்சள் நீள வடிவில் இருக்கும். இதுதான் கரி மஞ்சள் எனப்படும்.

மஞ்சள் தூளை உணவில் சேர்ப்பதால் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு, மூளைக்கு கெடுதி தரும் கிருமிகள் குறைகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் தூளை திரவ வடிவத்தில் பயன்படுத்தி வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதாரண இயல்பு நிலையில் திரவ மஞ்சள் ஒரு மெல்லிய படலமாக இடப்பட்டால் ஒளியை உறிஞ்சி மிளிரும் தன்மை கொண்டது.

புதியதாக ஒரு வீட்டில் குடிபுகுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை கடவுள் படம் முன்பு வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சும் வழக்கம் உள்ளது. புதிய ஆடை அணியும் முன்பு மஞ்சளை நீரில் தேய்த்து அதை ஆடையில் வைத்துக் கொள்வர். பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவார்கள். மஞ்சள் தூளை நீரில் நனைத்து பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து பிள்ளையாராக வீடுகள், விழாக்களில் வழிபடுவார்கள். கிராமங்களில் திருவிழா காலங்களில் உறவினர்கள் மீது மஞ்சள் நீரைத் தெளிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
பீச்சுக்கு போறீங்களா? இந்த விஷயங்களை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!
Benefits of turmeric

உணவில் நிறம், சுவை, ஆரோக்கியம், அழகு என அனைத்தையும் கொடுக்கும் அற்புத மருத்துவ குணம் கொண்ட பொருள் மஞ்சள் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு பொருள் பல பயன் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மஞ்சள். இதை சிறந்த கிருமி நாசினி என்று சொல்லலாம். தேங்காய் எண்ணெயில் மஞ்சளை குழைத்து காலில் பூசினால் பாத வெடிப்புகள் நீங்கி பாதம் அழகாகும். பாலில் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வந்தால் தொடர் இருமல் சரியாகும்.

மஞ்சளுடன் குப்பைமேனி இலை சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, தேமல், போன்றவற்றின் மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும். உஷ்ணக் கட்டி மீது மஞ்சளை குழைத்து பற்று போல போட்டு வந்தால் கட்டி உடைந்து கிருமிகள் வெளியேறிவிடும். அம்மை நோய் உண்டானவர்களுக்கு மஞ்சளுடன் வேப்பிலையும் சேர்த்து அரைத்த விழுதை பூசி குளித்தால் கிருமிகள் வெளியேறும். புற்று நோய்  வராமல் தடுக்கவும், வேகமாக குணப்படுத்தும் ஆற்றலும் மஞ்சளுக்கு அதிகமாக உண்டு என்கிறது ஆராய்ச்சிகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com