சவால்கள் நிறைந்த சூழலில் வாழ ஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட 8 விலங்கினங்கள்!

Animals with more than one heart
Animals with more than one heart
Published on

யிர் வாழ அவசியம் தேவை என்ற காரணத்திற்காக சில விலங்கினங்கள் பிறப்பிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் உள்ளவைகளாகப் படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் உடலியல் இயக்கங்கள் சரிவர நடைபெறத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு ஏற்றவாறு வேறுபட்ட இரத்த நாளங்களின் அமைப்பும், ஒன்றிற்கு மேற்பட்ட இதயமும் கொண்டு அவை தனித்துவம் கொண்ட உயிரினங்களாக வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு தனித்துவம் கொண்ட எட்டு  விலங்கினங்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

1. ஆக்டோபஸ்: ஆக்டோபஸ் மூன்று இதயம் கொண்டு இயங்கி வருகிறது. இதன் உள்ளுறுப்புகள் ஆக்ஸிஜன் பெற இதனுடைய இரண்டு செவுள்கள் இரண்டு இதயங்கள் போல் செயல்பட்டு வெளிக்காற்றிலிருந்து ஆக்ஸிஜனை உள்ளிழுக்கின்றன. இந்த ஆக்ஸிஜன் வழக்கமாக இயங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது இதயத்தின் வழியாக இரத்தத்தில் கலக்கப்பட்டு பிற உறுப்புகளைச் சென்றடைகின்றன. ஆக்டோபஸின் இரத்த வகை, காப்பர் அதிகமாகவும் பிசுபிசுப்புத்தன்மை கொண்டும் உள்ளதால் அதற்குத் தேவையான அழுத்தத்தை மூன்றாவது இதயம் வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
பீச்சுக்கு போறீங்களா? இந்த விஷயங்களை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!
Animals with more than one heart

2. ஸ்குயிட் (Squid): ஆக்டோபஸுக்கு உள்ளது போலவே இரண்டு செவுள்கள் மற்றும் மூன்றாவது  இதயத்துடன்  ஸ்குயிடின் இரத்த ஓட்ட செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

3. கட்டில் ஃபிஷ் (Cuttle Fish): செவுள்கள் வழியே இரண்டு மற்றும் வழக்கமான ஒன்று என மூன்று இதயங்களுடன் கட்டில் ஃபிஷ்ஷின் உடல் முழுவதுக்கும் இரத்த ஓட்டம் சிறப்பாகப் பாய்கிறது.

4. ஹேக் ஃபிஷ் (Hag fish): இதற்கு வழக்கமான முதன்மை இதயம் ஒன்றும், மூன்று துணை இதயங்களும் உள்ளன. இந்த நான்கும் உடல் முழுவதிற்கும் தேவையான இரத்தத்தை குறைவின்றி செலுத்தி வருகின்றன.

5. மண் புழு (Earthworm): இதற்கு அர்டிக் ஆர்ச் (Aortic Arch) எனப்படும் ஐந்து பெருந்தமனி வளைவுகள் உள்ளன. இவை ஐந்தும் இரத்தத்தை பம்ப் செய்யும் உறுப்புகளாக செயல்பட்டு, பிரிவுகளாக அமைந்துள்ள மண் புழுவின் உடல் முழுவதிற்கும் இரத்தம் செல்ல உதவி புரிகின்றன.

6. கரப்பான் பூச்சி (Cockroach): கரப்பான் பூச்சியின் முதன்மையான இதயம் அதன் தலைப் பகுதியில் உள்ளது. மேலும், பல இதயங்கள் அதன் உடல் முழுவதும் ஆங்காங்கே பரவலாக அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
கடலுக்கடியில் மறைந்த பூம்புகார்: தொல்லியல் ஆய்வுகள் சொல்லும் உண்மைகள்!
Animals with more than one heart

7. ஹார்ஸ் ஷூ நண்டு (Horseshoe Crab): இதற்கு ஒரு முதன்மை இதயம் மற்றும் ஐந்து ஜோடி கார்டியாக் ஸைனசஸ் எனப்படும் 'சினோட்ரியல் நோடு' (Sinoatrial node)கள் உள்ளன. இவை ஹீமோலிம்ப் (குருதி நிணம்)களை உடலுக்குள் எடுத்துச் சென்று உடல் முழுவதும் ஊட்டச் சத்துக்களும் ஆக்ஸிஜனும் பெற உதவி புரிகின்றன.

8. அட்டை (Leech): ஒன்றுக்கும் மேற்பட்ட பல ஜோடி இதயங்கள் அட்டைக்கு உள்ளன. குருதிச் சுற்று முறைமையில் (Circulatory system) உடலுக்கு ஊட்டச் சத்துக்கள் வழங்கப்படும்போது இரத்தத்தை பம்ப் செய்ய இந்த இதயங்கள் உதவி புரிகின்றன.

சவால்கள் நிறைந்த குறிப்பிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் வாழ நேரும்போது அதற்கேற்றவாறு தனது உடலைப் பழக்கப்படுத்திக் கொள்ளவே இம்மாதிரியான உயிரினங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இதய அமைப்புகள் இயற்கையாக அமைந்துள்ளன எனலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com