
மரங்கள் நன்மை தரக்கூடியவை என்றாலும் சிலவற்றை தள்ளி வைத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று எட்டி மரம். விஷத்தன்மை கொண்ட எட்டிக்காயிடமிருந்து எட்டியே இருக்க வேண்டுமே என்பதால் இதற்கு எட்டி மரம் என்று பெயர் வந்தது. இது மருத்துவ ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் இலைகள், வேர்கள், மற்றும் விதைகள் மருத்துவத்தில் பயன்படுகின்றன. இது அஸ்வினி நட்சத்திரக் காரர்களுக்கு உகந்த மரமாக கருதப்படுகிறது.
எட்டி மரத்தின் விதைகளிலிருந்து களிம்புகள் தயாரிக்கப்பட்டு முடக்கு வாதத்தைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர் கஷாயம் இதய நோயை குணப்படுத்துவதாக தெரிகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் வயிற்றுவலி, வாந்தி, குடல்புண், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு தரப்படுகிறது இது எட்டி மரத்தில் உள்ள ஆல்கலாய்டுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
உடம்பில் நரம்புகள் சேதமடையும்போது வலிகள் ஏற்படும். அத்தகைய நரம்பு வலியைத் தீர்க்க எட்டிக் காயைப் பயன்படுத்தலாம். எட்டி இலைகளை நீரில் கொதிக்கவைத்து அந்நீரில் குளித்தால் நரம்பு வலி குணமாகும்.
உடலில் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகளுக்கு எட்டி மரத்தின் இளந்தளிர்களைப் பறித்து அரைத்து பசுவெண்ணையில் சேரத்து கட்டிகள் மீது தடவி இவை குணமாகும்.
எட்டிப் பழத்தை லேசாக வதக்கி கொட்டைகளை நீக்கி சதைப்பகுதியை ஒரு துணியில் கட்டி சாறு பிழியவம். இந்த சாற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மாத்திரை தொழு நோயாளிக்கு அளிக்கப்படுகிறது.
எட்டிக் கொட்டையை பொடியாக்கி நீரில் கலந்து எடுத்துக் கொண்டால் நரம்பு நோய்கள் நீங்கும். ஆனால் மிக கவனமாக பயன்படுத்த வேண்டும்.
இதன் விதைகளிலிருந்து ஸ்டிரிக்னைன் பூரூசைன் பிரித்தெடுக்கிறார்கள். கேரளாவில் இதன் பட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பபடுகிறது. எட்டி மரத்தின் பட்டையை காய்ச்சி குழைத்து சொறி சிரங்குகளை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.
எட்டி மரத்திலிருந்து தயாரிக்கப்படும் தைலம் வாதநோய்கள், தோல் நோய்கள் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
எட்டிக் கொட்டையால் கருமேகம், குஷ்டம், கரப்பான் போன்ற பிரச்னைகள் தீரும். எட்டி மரம் நச்சுத்தன்மை உள்ளதால் இவற்றை பயன்படுத்துவதற்கு முன் சித்த மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிக அவசியம்.