நெல் விதைகளை எப்படி கடினப்படுத்த வேண்டும்? கடினப்படுத்துதலின் நன்மைகள் என்ன?

Seed Hardening
Seed Hardening

இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் விதைக் கடினப்படுத்துதலில் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். விதைகளைக் கடினப்படுத்துவதன் அவசியத்தை விவசாயிகள் உணர்ந்து கொண்டால், நிச்சயமாக விதைப்புக்கு முன் இதனைச் செய்வார்கள். அவ்வகையில் நெல் விதைகளை எப்படி கடினப்படுத்த வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.

விதைகள் தான் விவசாயத்திற்கு அடிப்படை ஆதாரமாய் இருக்கிறது. அறுவடையின் போது மகசூலை தீர்மானிப்பதில் விதைகளின் தரமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வீரியத் தன்மை, முளைப்புத் திறன் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டு விதையின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. கடைகளில் வாங்கும் விதைகள் அல்லது சேமித்து வைக்கப்பட்ட விதைகள் ஆகிய இரண்டில் எதுவாக இருந்தாலும் விதைகளைக் கடினப்படுத்துவதன் மூலம் விதைகளின் தரத்தை நம்மால் உயர்த்த முடியும். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் பல விவசாயிகள் விதைக் கடினப்படுத்துதலை செய்ய முன்வருவதில்லை.

நெல் விதைகளை விதைப்பதற்கு முன்னர் கடினப்படுத்தவதன் காரணமாக செல்களில் இருக்கும் மைட்டோகாண்டிரியாவின் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் செல்களின் சக்தியானது பலமடங்கு அதிகரிப்பதுடன், அவற்றின் தன்மையும் நன்முறையில் பாதுகாக்கப்படுகிறது. முதல்கட்ட முளைப்புத் திறன் மற்றும் கருப்பை விரிவடைதல் ஆகியவை விதைக்குள்ளேயே நடைபெறுவதால், குறைவான ஈரப்பதத்திலும் நன்றாக வளரும் நாற்றுகள் நமக்கு கிடைக்கும்.

நெல் விதைகளைக் கடினப்படுத்துதல்:

40 லிட்டர் தண்ணீர் மற்றும் 400 கிராம் பொட்டாசியம் குளோரைடு உப்பு கலந்த கரைசலில், ஒரு ஏக்கருக்குத் தேவையான 40 கிலோ நெல் விதைகளை ஏறக்குறைய 20 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் கரைசலில் இருந்து நெல் விதைகளை எடுத்து, ஊற வைப்பதற்கு முன்பிருந்த ஈரப்பதத்தை அடையும் வரை மிதமான சூரிய வெளிச்சத்திலோ அல்லது நிழலிலோ உலர்த்த வேண்டும். இந்த நெல் விதைகளை உடனடியாக விதைப்புக்குப் பயன்படுத்தலாம். இருப்பினும் ஏதேனும் சில காரணங்களால் உடனடியாக விதைக்க முடியாத சூழல் நேரிட்டால், அதிகபட்சம் 20 நாள்கள் வரை சேமித்து அதன்பின் விதைக்கலாம். ஆனால், 20 நாள்களுக்கும் மேல் நெல் விதைகளை சேமித்து வைத்தால் அதன் முளைப்புத் திறனும், வீரியத் தன்மையும் வெகுவாக பாதிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
அதிவேக காற்றால் பாதிக்கப்படும் தோட்டக்கலைப் பயிர்கள்: பாதுகாப்பது எப்படி?
Seed Hardening

விதைக் கடினப்படுத்துதலின் நன்மைகள் என்ன?

கடினப்படுத்தப்பட்ட விதைகளில் இருந்து வளரும் பயிர்கள், அதிக வறட்சியைப் தாங்கும் என்பதால் மற்ற பயிர்களைப் போல அதிக வெப்பநிலை மற்றும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் வாடாமல் இருக்கும்.

பூக்கள் வெளிவரும் கால அளவானது குறையும்.

நெல் விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை அதிகரிக்கும் என்பதால் மகசூல் உயரும்.

உவர் மண் மற்றும் வறட்சியான நிலங்களில் மண்ணின் தன்மையை நன்றாகத் தாங்கி வளரும் திறன் அதிகரிக்கும்.

அனைத்து விதமான காலநிலைகளையும் எதிர்கொண்டு வளரும் திறன் படைத்தவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com