பஞ்சுபோல் தோற்றமளிக்கும் 'பனி தேவதைகள்' - Snow Fairies

snow fairies birds in japan
snow fairies birds in japan
Published on

ஜப்பானை சேர்ந்த 'ஷிமா எனகா' என்ற பறவைகள் தான் 'பனி தேவதைகள்' என்று அழைக்கப்படுகின்றன.

இது பார்ப்பதற்கு பருத்தியின் வெள்ளை பஞ்சுபோல் தோற்றமளிக்கும். இதன் அழகிய தோற்றத்திற்காகவே இந்த பறவைகளுக்கு 'பனி தேவதைகள்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பறவை ஜப்பானின் இரண்டாவது பெரிய தீவான ஹோக்கைடோவில் தான் காணப்படுகிறது. ஜப்பானிய மொழியில் 'ஷிமா-எனகா' என அழைக்கப்படும் இந்த பறவைகள் சமீப காலமாக பிரபலமடைந்து வருகின்றன. ஹோக்கைடோ அதிக குளிர் நிறைந்த பகுதி, அங்கு பனிப்பொழிவுடன் 'ஷிமா எனகா' பறவைகளை பார்க்கும் போது வெண்மை நிற குட்டி தேவதைகள் போன்று காட்சியளிக்கும்.

அதுமட்டுமில்லாமல், இந்த பறவையின் கண்களுக்கு மேலே கருப்பு புருவங்களும் அமைந்து, ஒரு தனித்துவமான அழகைக்  கொடுக்கிறது. 'ஷிமா எனகா' பறவைகள் முதிர் வயதை அடையும் போது தனது புருவங்களை இழந்து, முற்றிலும் வெண்மையான முகத்துடன் தோற்றமளிக்கும். அதனாலும் இதை `பனி தேவதை' என்று அழைக்கின்றனர். மேலும் இந்த சிறிய பறவை, அதன் வெள்ளை இறகுகளை விரிக்கும்போது, அது பனியால் செய்யப்பட்ட பொம்மை போல தோற்றமளிக்கும்.

இந்த 'பனி தேவதைகள்' வெண்மை நிற பஞ்சுபோன்ற பந்து எப்படி இருக்குமோ, அதை போன்று வெண்மை நிறத்தில் உருண்டையாக இருக்கும். ஆனால் இவை 13 முதல் 15 செ.மீ நீளம் கொண்டவை. அவற்றின் மொத்த நீளத்தில் பாதிக்கு மேல் வால் அமைப்பு இருக்கும். இது அடர்த்தியான உடலமைப்பைக் கொண்டது. வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் கலந்த இறகுகளால், அதன் உடல் இருப்புறங்களிலும் மூடப்பட்டிருக்கும்.

'பனி தேவதைகள்' பெரும்பாலும் கூட்டமாகவே வாழ்கின்றன. ஒரு கூட்டத்தில் 20 முதல் 30 பறவைகள் வரை இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச் சிறிய முட்டை இடும் பறவை எது தெரியுமா?
snow fairies birds in japan

மிக சிறியதாக இருந்தாலும், இப்பறவை அதிக ஆற்றல் கொண்டது. இது அடிக்கடி சாப்பிடும் வழக்கத்தை கொண்டது. மேலும் இந்த பறவைகள் அவற்றின் இனப்பெருக்க காலத்தில் 7 முதல் 10 வரையிலான முட்டைகளை இட்டு, இரண்டு வாரங்கள் வரை அடைகாக்கின்றன. ஆண் மற்றும் பெண் பறவைகள் மாறி மாறி முட்டைகளை அடைகாக்கும். கூட்டத்தில் உள்ள மற்ற பறவைகள் அனைத்து குஞ்சுகளுக்கும் உணவளிக்க உதவியாக இருக்கும். இந்த பறவைகள் தங்கள் கூடுகளை கட்ட மூன்று வாரங்கள் வரை எடுக்கும். ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டும் ஒருங்கிணைந்து பாசி மற்றும் இறகுகள், விலங்குகளின் முடி மற்றும் செடி போன்ற மென்மையான பொருட்களை வைத்து தங்கள் கூட்டை வடிவமைக்கின்றன.

சிலந்திகள், பூச்சிகள், லார்வாக்கள், கம்பளிப்பூச்சிகள், பெர்ரி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை உணவாக உட்கொள்ளும். தனது வெள்ளை நிறத்தை வைத்தே, வெள்ளை பனியில் ஒளிந்து தந்திரமாக வேட்டையாடுபவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும். பல பறவை இனங்களைப் போலவே, இந்த பறவைகளும் வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் போன்ற அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படுகினறன. இந்த தந்திரப்பறவையின் ஆயுள்காலம் 2 முதல் 3 ஆண்டுகள் மட்டுமே ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com