

உறைய வைக்கும் குளிரிலும் உயிர் வாழும் திறன் கொண்ட 6 விலங்குகள்!பிள்ளைப்பூச்சி - பேச்சு வழக்கில் புள்ளப்பூச்சி. ஆங்கிலத்தில் மோல் கிரிக்கெட் (Mole Cricket). மண்புழுவைப் போல் இதுவும் மண்ணுக்குள் மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டே இருப்பதால், தாவரங்களின் வேர்களுக்கு ஒளியும், நீரும், காற்றும் கிடைப்பதற்கு உதவி செய்கிறது. நிலத்தை பண்படுத்துவதில் இதன் பங்கு முக்கியமானது. மண்ணுக்கடியில் வாழும் இந்தப் பூச்சி, மண்புழுக்களைப் போலவே விவசாயிகளின் தோழமைதான். புள்ளப்பூச்சியும் விவசாயிகளின் தோழர்கள்தான். இவை மண்ணுக்கு அடியில் வாழும். இவை இருக்கின்ற மண் வளமாக இருக்கும்.
பிள்ளைப்பூச்சி என்பது மண்ணிற்குள் விரைவாக துளைத்துச் செல்லும் ஒரு வகையான பூச்சியாகும். இந்தப் பூச்சி கடிக்கும் தாடை உடையது. செடிகளின் வேர்களை கடிக்கும் இந்தப் பூச்சிகள் மண்ணினுள் துளைத்து செல்வதற்கும், வேர்களை வெட்டுவதற்கும் ஏற்றவாறு முன்னங்கால்கள் அமைந்துள்ளன.
இது முதுகெலும்பு விலங்குகளிலே ஆர்த்தாப்டீரா என்னும் குடும்பத்தைச் சேர்ந்த சிறு பூச்சியாகும். இந்தக் குடும்பத்து பூச்சிகளுக்கு பின்னங்கால்கள் மிகவும் நீளமாக இருக்கும். அவற்றின் உதவியால் இவை துள்ளிப் பாய்ந்து இயங்கும் தன்மை உடையவை.
பிள்ளைப்பூச்சிகளுக்கு மிக மெல்லியதாகவும், நீளமாகவும் இரண்டு உணர்கொம்புகள் உள்ளன. ஒன்றிரண்டு அங்குலம் நீளம் இருக்கும். இவை நிலத்தினுள் வளை செய்து கொண்டு வாழும். கண்கள் சிறுத்தும், முன் இறகுகள் சிறியவையாகவும், பின் சிறகுகள் சற்று பெரியவையாகவும் காணப்படும். வீட்டு தோட்டங்களிலும், ஈரமான இருட்டிடங்களிலும் காணப்படும்.
பிள்ளைப்பூச்சிகள் மண்புழு, சிறு பூச்சிகள் மற்றும் பயிர்களின் வேர், கிழங்கைத் தின்னும் இயல்புடையவை. 200 முதல் 400 முட்டைகளிடும் தாய்ப்பூச்சிகள் முட்டைகளை அவை பொரிக்கும் வரையில் வளையின் அருகில் இருந்து காத்து வரும். முட்டையிலிருந்து வரும் இளம் பூச்சிகளுக்கு முதல் தோல் உரிக்கும் வரையில் உணவு கொடுத்து காப்பாற்றும்.
பிள்ளைப்பூச்சிகள் மண்ணை விட்டு இரவு நேரங்களில்தான் வெளியில் வரும். பகலில் அவ்வளவாக நடமாட்டம் இருக்காது. இவை பெரும்பாலும் ஆபத்தானது அல்ல. இவை கடித்தால் கடுமையான வலி அல்லது விஷத்தன்மையை ஏற்படுத்தாது. ஆனால் லேசான வலி, வீக்கம், அரிப்பு ஏற்படலாம். இதற்கு சின்ன வெங்காயச்சாறு தேய்த்து, குளிர்ந்த நீரில் ஒத்தடம் கொடுக்க சரியாகிவிடும்.
அப்பாவி இயல்பு கொண்டவர்களை பிள்ளைப்பூச்சி மாதிரி என்பார்கள். காரணம், பொதுவாக பெரும்பாலான உயிர்களுக்கும் அவற்றுக்கென்று தற்காப்பு உத்திகள் இருக்கும். ஆனால், பிள்ளைப்பூச்சிகளுக்கு அப்படி எந்த ஒரு தற்காப்பு யுக்தியும் கிடையாது.
அதனால்தான் எந்த ஒரு தற்காப்பு யுக்தியும் தெரியாத அப்பாவி குணம் கொண்டவர்களை, 'இவன் ஒரு பிள்ளைப்பூச்சிப்பா' என்று கூறுகிறார்கள். எதிரிகளிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்கு இந்தப் பூச்சியை பயன்படுத்துவார்களாம். ராணுவத்தினரிடம் அந்நிய நாட்டை சேர்ந்தவர்கள் சிக்கினால், அவர்களிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்கு அவர்களுடைய தொப்புளில் சில பூச்சிகளை விட்டு தேங்காய் சிரட்டையால் மூடி விடுவார்கள்.
அத்துடன் அவர்களுடைய கை, கால்களையும் கட்டிவிட, இந்த பிள்ளைப்பூச்சிகளோ அவர்களுடைய தொப்புளை குடைய ஆரம்பிக்கும். தொப்புளில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தவுடன், பூச்சி வயிற்றைக் குடைந்து உள்ளே போய்விடுமோ என்று பயந்து உண்மையை சொல்லி விடுவார்களாம்.