The Wood Frog: ஆறு மாதங்களுக்கு இதயத் துடிப்பு நின்றாலும் மீண்டும் உயிர்த்தெழும் தவளை!

The Wood Frog
The Wood Frog

The Wood Frog என்றழைக்கப்படும் Rana Sylvatica என்ற உயிரினம், உறைப்பனி சூழ்ந்த குளிர்காலங்களில் இதயத் துடிப்பு இல்லாமல் ஆறு மாத காலம் உயிர் வாழுமாம். ஆச்சர்யமாக உள்ளதா? வாருங்கள்! மேலும் இதனைப் பற்றிய சில சுவாரசிய தகவல்களைப் பார்ப்போம்.

வட அமெரிக்காவில் வாழும் இந்த The Wood Frog ஆறு மாத காலம் ‘Freeze Tolerance’ என்றழைக்கப்படும் இடை நிறுத்தப்பட்ட அனிமேஷன் நிலைக்குள் செல்கிறது. இதனால் இதயத் துடிப்பு தற்காலிகமாக நின்றுவிடுகிறது. அதேபோல் ரத்தமும் உறைந்துவிடுகிறது. குளிர்காலம் வந்து, வெப்பநிலை குறைந்தவுடன் Wood Frog தனது உடம்பில், அதிகப்படியான குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. உடலில் இயற்கையாக உருவாகும் இந்த குளுக்கோஸே குளிரிலிருந்து அதனைத் தற்காத்துக்கொள்ள உதவுகிறது.

Wood Frog ன் உடலிலுள்ள திசுக்கள், உறுப்புகள் ஆகியவற்றின்மேல் பனி உறைந்து படரும்போது, அந்த அனைத்தையுமே இந்த குளுக்கோஸ்தான் காப்பாற்றுகிறது.

பனி அதன்மேல் உறைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக இதயத் துடிப்பு நின்றுவிடும். பின் முழுவதுமாக இதயத் துடிப்பே இருக்காது. அந்த Wood Frog உயிருடன் இருந்தாலுமே, அதனால் சாப்பிட முடியாது, தூங்க முடியாது, கத்த முடியாது, நகர முடியாது, நீர் பருக முடியாது. ரத்தம் கூட உறைந்துவிடும்.

மீண்டும் குளிர்காலம் சென்று பனி உருகும் வரை, அதனால் எதுவுமே செய்ய முடியாது. அது எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி. சில சமயம், குளிர்காலம் செல்ல 7 அல்லது 8 மாதங்கள் கூட ஆகும். ஆனால், Wood Frog ஐ அதனுடைய குளுக்கோஸ் காப்பாற்றும்.

அதேபோல் பனி உறைய ஆரம்பிக்கும் காலங்களில் முட்டையிட்டது என்றால், அந்த முட்டையை உடைத்து வெளியே வரும் Wood Frog உடனே உறைந்துவிடும். ஆகையால், கண்களைத் திறப்பதற்கு முன்னரே இதயத் துடிப்பு நின்றுவிடும்.

இதையும் படியுங்கள்:
Armored catfish: பாலைவனத்திலும் வாழும் அபூர்வ மீன்!
The Wood Frog

கொஞ்சம் கொஞ்சமாக காலநிலை மாறி, வெப்பம் வரும்போது, Wood Frog உடம்பில் இருக்கும் பனிகள் உருக ஆரம்பித்துவிடும். முதலில் இதயத் துடிப்பு வரும். அதன்பின்னர் பனியுடன் சேர்த்து Wood Frog ரத்தமும் உருக ஆரம்பிக்கும். பிறகு முழு உடம்பும் மீண்டும் உயிர்ப்பெற்று அடுத்த இடத்தை நோக்கியும், உணவை நோக்கியும் செல்லும். அதேபோல் குட்டி Wood Frog பிறந்து ஆறு மாதம் கழித்துதான் முதன்முறையாக இந்த உலகத்தைப் பார்க்கும்.

இதுதான் ஆறு மாதம் ஓய்வு, ஆறு மாதம் சாப்பிடுவதோ? கும்பக்கர்ணனுக்கே டஃப் கொடுக்கும் குட்டி ஃப்ராக்ஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com