அடர் இருளில் உள்ள உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை!

Spider Nest
Spider Nest
Published on

அல்பேனியா மற்றும் கிரீஸ் இரு நாட்டின் எல்லையில் சல்ஃபர் குகை ஒன்று உள்ளது .இந்த குகையின் நுழைவாயிலில் 1140 சதுர அடி அளவிற்கு பரந்து விரிந்துள்ள ஒரு சிலந்தி வலையை 2022ம் ஆண்டு செக் குடியரசை சேர்ந்த குகை ஆய்வாளர்கள் முதல் முறையாக கண்டுபிடித்தனர். மேலும் சில ஆய்வுகளுக்கு பிறகு 2025 ஆம் ஆண்டு உலகிற்கு அதிகாரப்பூர்வமாக இந்த குகை பற்றி அறிவிக்கப்பட்டது.

இரு வேறு சிலந்தி இனங்கள்!

அடர் இருள் சல்ஃபர் குகையில் உள்ள சிலந்தி வலையில் 69000,Domestic house spider இனமும், 42,000 மேற்பட்ட Sheepy your spider இனமும் ஒரே குகையில் ஒரே வலையில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றன. இரண்டு வகையான சிலந்தி இனங்கள் ஒரே வலையில் வசிப்பதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கப்படுகிறது.

பெயர்க் காரணம்!

அடர் இருளில் குகையில் வாழும் இந்த இரண்டு சிலந்தி இனங்களும் குகையில் வாழ்வதற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன. இந்த குகை முழுவதும் சல்பர் வாயுக்கள் நிரம்பியுள்ளதால் சல்ஃபர் குகை என பெயர் பெற்றுள்ளது. பெரும்பாலான உயிரினங்களால் இந்த குகையில் சல்ஃபர் வாயுவின் காரணமாக வசிக்க முடியாது.

சிலந்தியின் உணவு!

ஆனால் சல்பரை ஆக்சிஜனேற்றம் செய்யும் பாக்டீரியா ஒன்று குகையில் வசிக்கிறது. இது சல்பரை ஆக்சிஜனேற்றம் செய்து உயிர் மென் படலத்தை உருவாக்கி ,குகையின் மேற்பரப்பு முழுவதும் பரப்புகிறது. இதை உணவாக உட்கொள்ள குகைக்கு வெளியில் இருந்து ஈ போன்ற பூச்சிகள் வருகின்றன. இந்த பூச்சிகள் சிலந்தி வலையில் மாட்டும்போது சிலந்திகள் அவற்றை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன.

சிலந்தி வலையின் வலிமை!

மேலும் சிலந்தி வலையில் வாழும் பாக்டீரியா ஹைட்ரஜனைப் பயன்படுத்தி பிசுபிசுப்பான ஒட்டக்கூடிய உயிர் மென்படலத்தை, அதாவது சிலந்தி பூச்சிகளை பிடிக்க பயன்படுத்துவது போன்ற திரவத்தை வெளிவிடுகிறது . இது வலை முழுவதும் படர்ந்து அதிக நாள் நீடித்து நிலைக்கக்கூடிய தன்மையையும் வலிமையையும் கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
'ஆரோக்கிய நட்பு பாக்டீரியா': அப்படீன்னா?
Spider Nest

பாக்டீரியாவின் உணவு!

இவ்வளவு நாட்களும் இவ்வளவு பெரிய சிலந்தி வலை திடமாக வலிமையாக இருப்பதற்கு பாக்டீரியா உருவாக்கும் உயிர் மென்படலமும் ஒரு காரணமாகும் .பாக்டீரியா உருவாக்கும் உயிர் மென்படலத்தை சாப்பிட வரும் உயிரினங்கள் வலைக்குள் மாட்டி சிலந்திக்கு உணவாகின்றன. சிலந்திகள் அந்த பூச்சிகளின் உறுப்புகளை உறிஞ்சி எடுத்து சக்கையை வெளியேற்றுகின்றன.

அந்த சக்கையை பாக்டீரியாக்கள் உண்டு உயிர் வாழ்கின்றன. மேலும் சிலந்திகள் சாப்பிட்டு வெளிவிடும் கழிவுகளும் பாக்டீரியாக்களுக்கு உணவாகின்றன.

மற்ற உயிரினங்கள் வாழவே முடியாத சல்பர் குகையில் பாக்டீரியாவும் சிலந்தியும் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கொன்று உதவும் உறவு முறையில் வாழ்ந்து வருவது இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com