'ஆரோக்கிய நட்பு பாக்டீரியா': அப்படீன்னா?

girl Eating food
healthy food
Published on

புரோபயாடிக்குகள் என்பது 'ஆரோக்கிய நட்பு பாக்டீரியா' என்று அழைக்கப்படுகிறது. நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த உணவுகள் புரோபயாடிக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தயிர், மோர், கெஃபிர், ஊறுகாய், டெம்பே போன்ற புளித்த உணவுகளில் காணப்படுகின்றன. புரோபயாடிக்குகள் செரிமான அமைப்பை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன.

1) தயிர்:

தயிரில் உள்ள ப்ரோபயாடிக்குகள் செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். நம் உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களை வழங்குகிறது. இதில் லாக்டோபாகிலஸ் போன்ற புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை வராமல் தடுக்க உதவும்.

2) கொம்புச்சா:

இது புளித்த தேநீர் பானமாகும். கருப்பு அல்லது பச்சை தேநீரில் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் சேர்ப்பதன் மூலம் கொம்புச்சா தயாரிக்கப்படுகிறது. இதன் விளைவாக கிடைக்கும் பானத்தில் அசிட்டிக் மற்றும் குளுக்கோணனிக் அமிலங்கள் நிறைந்துள்ளன. புளிப்பு சுவையுடைய கொம்புச்சாவின் புரோபயாடிக் நன்மைகள் இயற்கையாக நிகழும் நுண்ணுயிர்களின் பன்முகத்தன்மை காரணமாகும். இவை வைரஸ் தடுப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் விளைவுகளை வெளிப்படுத்துகிறது.

3) சவர்க்காரம் (Kimchi):

கொரியா புளித்த காய்கறி உணவிது. சார்க்ராட் என்பது முட்டைகோஸிலிருந்து தயாரிக்கப்படும் சத்தான புளித்த காய்கறி உணவாகும். நாபா முட்டைகோஸ், முள்ளங்கியுடன் இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள் போன்ற மசாலா பொருட்கள் சேர்த்து புளிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. இது புரோபயாடிக் பாக்டீரியாக்களின் இயற்கையான மூலமாகும். செரிமான அமைப்பிற்கு நல்லது. இது பல்வேறு கொரிய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

4) டெம்பே:

இது சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் புளித்த உணவாகும். இது கரையக்கூடிய நார் சத்துக்களை அதிக அளவில் கொண்டுள்ளது. சிறந்த புரோபயாடிக்குகளை வழங்கும் இவை குடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஒன்றாகும். சோயா பீன்ஸ் விதைகளை நொதிக்க வைத்து பன்னீர் கட்டிகளாக அல்லது சுண்டல், உப்புமா போன்ற பல வகைகளில் மாற்றிக் கொள்ள முடியும். இதனை நமக்கு பிடித்த வகையில் எளிதாக சமைத்துக் கொள்ள முடியும்.

5) ஊறுகாய்கள்:

முட்டைகோஸ், வெள்ளரிக்காய், முள்ளங்கி, கேரட் மற்றும் ஆலிவ் போன்ற பல வகையான காய்கறிகளை பாதுகாக்க பண்டைய காலங்களிலிருந்து லாக்டிக் நொதித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. இதனால் இவை ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. காய்கறிகளை பாதுகாப்பதற்கான இந்த வடிவம் அவற்றை புரோபயாடிக் நிறைந்த உணவுகளாக ஆக்குகிறது. சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்றது.

6) கெஃபிர்:

கெஃபிர் என்பது ஒரு புளித்த பால் தயாரிப்பாகும். இது கெஃபிர் தானியங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. தயிர் போன்றது ஆனால் மெல்லியதாகவும், புளிப்புச் சுவையுடனும் இருக்கும். இது லாக்டிக் அமில பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் மூலம் பாலை நொதிப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு சிறந்த புரோபயாடிக் நிறைந்த உணவாக கருதப்படுகிறது. இதில் ஆண்டிமைக்ரோபியல் செயல்பாடு மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. கெஃபிர் உட்கொள்வது செரிமானத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புரதச்சத்து நிறைந்தது. இதில் உள்ள கால்சியம் மற்றும் விட்டமின் கே 2 எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

7) சீஸ்:

மற்ற புளித்த பால் பொருட்களுடன் ஒப்பிடுகையில் பாலாடை கட்டி மனிதகுடலில் நுண்ணுயிர்களை வழங்க ஒரு சிறந்த பொருளாக செயல்படுகிறது. பாலாடை கட்டியின் அடர்த்தியான அமைப்பு நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை வெளிப்படுத்த உதவும். இதில் உள்ள கால்சியம் பற்களுக்கும், எலும்புகளுக்கும் தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. சீஸ் குடல் நுண்ணுயிரிகளை சமநிலைப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. குடல் திசுக்களை சரி செய்ய உதவுகிறது.

அவற்றின் நன்மைகள்:

புரோபயாடிக் உணவுகளை உட்கொள்வதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள அழற்சியை குறைத்து ஒவ்வாமைகளின் தீவிரத்தை குறைக்கவும் முடியும்.

புரோபயாடிக்குகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்வதால் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன.

புரோபயாடிக்குகள், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகின்றன.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com