கொரோனாவுக்கு அடுத்ததாக உலகில் பரவவுள்ள ஜாம்பி வைரஸ்.. ஜாக்கிரதை மக்களே! 

zombie virus
zombie virus

என்னதான் கொரோனாவின் தாக்கம் தற்போது பெருமளவு குறைந்து விட்டாலும் அந்தத் தொற்று இன்னும் முழுமையாக இந்த உலகை விட்டு நீங்கவில்லை. இந்நிலையில் புதிதாக தொற்றுநோய் ஒன்று வரவுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

ஆர்டிக் பகுதியில் உருகும் பனிப்பாறைகளுக்கு மத்தியில் மனிதர்களை பாதிக்கக்கூடிய பண்டைய கால வைரஸ் இருப்பதாகவும், அது விரைவில் வெளிவந்து மனிதர்களை பாதிக்கும் என்றும் கூறுகின்றனர். இந்த வைரஸ் தாக்கத்தினால் மனிதர்கள் ஜாம்பி போல மாறக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். 

இந்த ஜாம்பி வைரஸ்களை பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள Methselah வைரஸ் என்றும் அழைக்கின்றனர். எனவே இந்த செய்தி உலக அளவில் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் இருந்து வரும் நோய்களின் சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள விஞ்ஞானிகள் பல முன்னெடுப்புகளை எடுத்தாலும், இந்த பண்டைய கால நுண்ணுயிரிகளால் ஏற்படும் நிகழ்வு தவிர்க்க முடியாதது என்கின்றனர் விஞ்ஞானிகள். இருப்பினும் இதை தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. 

இந்த வைரஸ்களால் தாக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை விட்டு மற்ற இடங்களுக்கு வெளியேறாதவாறு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்க முடியும். இந்நிலையில் இந்த நோயின் தீவிரத்தை இப்போதே பகுப்பாய்வு செய்து, மனிதர்களுக்கு பரவுவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மனிதர்களை பாதித்து புதிய நோயை உருவாக்கும் திறன் படைத்த கிருமிகள் பனி பிரதேசங்களில் இருப்பதால், அங்கு கூடுதல் பாதுகாப்பை நாம் வழங்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
நாளை Wolf Moon தினம்.. வானில் நிகழ்வுள்ள அதிசயம். எல்லோரும் தயாரா இருங்க! 
zombie virus

இத்தகைய வைரஸ்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக உறை பனிக்கும் குறைந்த வெப்ப நிலையில் உறைந்து கிடக்கிறது. இதில் சில பழமையான வைரஸ்கள் சுமார் 7 லட்சம் ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சமீபத்திய ஆய்வுகளின் படி இந்த வைரஸ்கள் மனிதர்களை பாதிக்கக்கூடும் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com