

உலகில் காற்று மாசுபாடுகள் நிறைந்த நகரங்கள் அதிகரித்துவிட்ட நிலையில், சுத்தமான காற்று நிலவும் முன்மாதிரியான நகரங்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள் எதனால் சுத்தமான காற்றை சுவாசிக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டு, நாம் வசிக்கும் நகரத்தினை காற்று மாசுபாடு இல்லாத நகரமாக்கவும், சுற்றுச்சுழல் சீர்கேடு இல்லாத பகுதியாகவும் வைத்திருக்க வேண்டும். உலகளவில் சுத்தமான காற்று கொண்ட முதல் 5 நகரங்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.
1. ஒஸ்லோ - நார்வே: உலகளவில் தூய்மையான காற்றைக் கொண்ட நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ நகரமாகும். 2025 அக்டோபர் 24 தரவுகளின்படி, ஒஸ்லோவின் காற்றுத் தர குறியீடு (AQI)-1 என பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலிய எரிபொருட்களை குறைக்கும் அரசின் முயற்சிகள்தான் இதற்கான முக்கியக் காரணமாக உள்ளது. 2024 இறுதிக்குள், ஒஸ்லோவில் விற்கப்பட்ட தனிநபர் வாகனங்களில் சுமார் 89 சதவிகிதம் மின்சார வாகனங்களாக இருந்தது.
மேலும், 2028ம் ஆண்டிற்குள் ஒஸ்லோ நகர பேருந்துகள், டிராம்கள் மற்றும் படகுகள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கும் வகையில் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.நீண்ட காலமாக ஆட்டோமொபைல் தொழில்துறையின் மையமாக இருந்ததால் இந்த நகரம் அதிக மாசுபாடு அடைந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அங்கு அதிகம் மாசுபாடு ஏற்படுத்தும் திடக்கழிவு எரிப்பு நிலையத்தை 2019ல் மூட முடிவு செய்யப்பட்டது. இதனால் நகரத்தின் மாசுபாடு பெருமளவில் குறைந்து துய்மையாக மாறியுள்ளது.
2. டெட்ராய்ட் - அமெரிக்கா: 2025 அக்டோபர் 24 தரவுகளின்படி, டெட்ராய்ட் நகரத்தின் காற்றின் தர மதிப்பீடு 8 ஆகும். இந்த காற்றின் தரம் ஒரு நாளில் எடுக்கப்பட்ட அளவுதான். டெட்ராய்ட் நகரின் வரலாறுகளை எல்லாம் ஆய்வு செய்யவில்லை. இங்கு காற்றின் தரம் மாறக் கூடியதாக இருக்கின்றது. 2021 முதல் 2023 வரை கிடைத்த தரவுகள் மற்றும் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், அமெரிக்க நுரையீரல் சங்கத்தின் 2025ம் ஆண்டு ‘காற்றின் நிலை’ அறிக்கையில் டெட்ராய்ட் நகரம் அமெரிக்காவின் அதிகம் மாசுபட்ட நகரங்களில் 6ம் இடத்தில் இருந்தது.
3. அல்ஜியர்ஸ் - அல்ஜீரியா: அல்ஜியர்ஸின் காற்று தரம் அடிக்கடி மாறுபட்ட நிலையில் உள்ளது. இங்கு அடர்த்தியான வாகனப் போக்குவரத்து, தொழில்துறை உற்பத்திகள் மற்றும் ஆகியவை தொடர்ச்சியாக நகரத்தின் மாசுபாட்டை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒருசில நாட்களில் இந்த நகரத்தில் காற்று மாசுபாடுகள் அதிகமாக இருந்தாலும், ஒருசில நாட்களில் காற்றின் மாசுபாடு குறைந்து கொண்டும் வருகிறது. இங்கும் காற்று தரநிலை ஒரு நிலையாக இல்லாவிட்டாலும், தற்போது மோசமான கட்டத்தில் இல்லை. 2025 அக்டோபர் 24 அன்றைய தரவுகளின்படி, அல்ஜியர்ஸ் காற்றின் தர நிலை (AQI) 11 ஆக பதிவாகியுள்ளது.
4. டொராண்டோ - கனடா: 2025 அக்டோபர் 24 அன்று பதிவான காற்றுத் தரநிலையின்படி டொராண்டோவில் (AQI) 11ஆக பதிவானது. டொராண்டோ சுத்தமான காற்று தர நிலையில் 4 இடத்தில் உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் மோசமான காற்று மாசுபாடு மிக்க நகரமாகவும் வாய்ப்பு இருக்கிறது. இது சுத்தமான காற்றை சுவாசிக்கும் நகரங்களில் முன்னணியில் இருந்தாலும், வாகனம் மற்றும் தொழிற்சாலைகள் மூலமாக ஏற்படும் மாசுபாடு காரணமாக காற்றுத் தரம் குறைகிறது. இங்கு அடிக்கடி காட்டுத் தீ பரவி, புகையினால் ஏற்படும் மாசுபாடுகளுக்கு டொராண்டோ நகரம் எளிதில் பலியாகிறது.
5. சிட்னி - ஆஸ்திரேலியா: உலகளாவிய மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, சிட்னி ஒரு நிலையான குறைந்த மாசு அளவைக் கொண்டுள்ளது. 2025 அக்டோபர் 24, அன்றைய தரவுகளின்படி அதன் காற்றுத்தரம் (AQI) - 16ஆக பதிவானது. சிட்னி நகரம் கடற்கரைக்கு அருகில் இருப்பதால், அதன் மாசுபாடுகள் குறைவாக இருக்கிறது. ஆயினும், தொழில்துறை வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை பெருக்கம் நகரின் மாசுபாடுகளை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்.