பனிப் பிரதேசத்தில் வாழும் புலிகள்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா?

Amazing facts about wild animals
Tigers

புவியியல், கால நிலைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உலகில் வாழும் முக்கிய பெரிய பூனை இனங்களின் வளர்ச்சியும், ஆதிக்கமும் ஒவ்வொரு கண்டங்களுக்கும், பிரதேசங்களுக்கும் வேறுபடுகின்றன. உலகிலுள்ள பனி பிரதேசங்கள் தொடங்கி சதுப்பு நிலங்கள், வெப்பமண்டல காடுகள், புல்வெளிப் பிரதேசங்கள், மழைக்காடுகள், வறண்ட நிலப் பகுதிகள், ஊசியிலைக் காடுகள்வரை பெரிய பூனைகளின் புவியியல் பரவல்கள் பரந்தும், விரிந்தும் காணப்படுகின்றன. அப்படி ஒவ்வொரு பிரதேசங்களில் மிகப்பெரிய அளவில் காணப்படுகின்ற பெரிய பூனை இனங்களின் புவியியல் பரவல்களின் இடங்களையும், தன்மையையும் இப்பதிவில் பார்ப்போம்..!

1. சிங்கங்கள் 

Amazing facts about wild animals
சிங்கங்கள்

சிங்கங்களின் புவியியல் பரவல்கள் பெரும்பாலும் வெப்ப மண்டல காடுகள் மற்றும் புல் பிரதேசங்களை சுற்றியே அமைந்திருக்கும். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் சிங்கங்களின் எண்ணிக்கையானது அதிகமாக காணப்படுகிறது. ஆப்பிரிக்க சிங்கங்களின் துணைக் குடும்பமாகக் கருதப்படும் ஆசிய சிங்க இனமானது, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆசிய சிங்கங்களின் தாயகமாக இந்தியாவே பிரதானமாக காணப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையானது, 70.36% அதிகரித்துள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள கீர் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் ஆசிய சிங்கங்கள் காணப்படுகின்றன. இப்போதுவரை இந்தியாவில் மட்டும் 2025 கணக்கீட்டின்படி, 891 ஆசிய சிங்கங்கள் உள்ளன. ஆசிய சிங்கங்களை விட ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கையானது  தற்போது 40 சதவீதத்திற்கும் குறைந்து காணப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
‘ஆகாய தோட்டி’ என அழைக்கப்படும் காக்கையின் 5 அற்புத குணங்கள்!
Amazing facts about wild animals

2. புலிகள்

Amazing facts about wild animals
புலிகள்

புலிகள் பெரும்பாலும் சதுப்பு நிலக்காடுகள், புல்வெளிகள் மற்றும் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. புலிகளின் புவியியல் பரவாலானது. இந்திய துணைக்கண்டம், இந்தோசீன தீபகற்பம், சுமாத்திரா தீவுகள், உருசியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு சீனா ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. உலகளவில் புலிகளின் வாழ்விட பரவல்கள் இந்தியாவில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது.

இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்ற வெப்பமண்டல இலையுதிர் காடுகளே வங்காளப் புலிகளுக்கு உகந்த வாழ்விடமாக இருக்கிறது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, 2022 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 3,167 புலிகள் உள்ளன. இது கடந்த நான்கு ஆண்டுகளில் 6.7% அதிகரிப்பைக் காட்டுகிறது. அதேபோல் ஆமூர் புலிகள், சைபீரியன் புலிகள் பனிப் பிரதேசங்களிலும் வாழ்கின்றன.

3. சிறுத்தைகள் 

Amazing facts about wild animals
சிறுத்தைகள்

பெரிய பூனை குடும்பத்தில் நான்காவது பெரிய பூனையாக சிறுத்தைகள் அறியப்படுகிறது. சைபிரியா முதல் தென்னாப்பிரிக்கா வரையிலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளிலும் சிறுத்தைகளின் பரவல்கள் காணப்படுகின்றன. இப்போது வாழிட இழப்பு, வேட்டையாடுதல் போன்ற அச்சுறுத்தல்களால் இதன் எண்ணிக்கையானது தற்போது கணிசமாக குறைந்துகொண்டே வருகிறது.

சிறுத்தைகள் பிரதானமாக ஆப்பிரிக்க பிரதேசங்களில் அதிகமாக காணப்படுகின்றன. தற்போது பரவலாகவும், சிறிய எண்ணிக்கையிலும்; இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, சீனா, மலேசியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. மற்ற பூனைகளை விட வேகத்தில் மிகவேகமாக ஓடக்கூடியவை சிறுத்தைகள்தான். மேலே கூறிய நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கையானது அதிகமாக காணப்படுகிறது. அதேபோல் பனிச்சிறுத்தைகளின் பரவல்கள் இமயமலை மற்றும் ஆசியாவில் காணப்படுகின்ற பனிப் பிரதேசங்களில் காணப்படுகின்றன.

4. ஜாக்குவார்

Amazing facts about wild animals
ஜாக்குவார்

பூனை இனங்களில் மிகப்பெரிய மூன்றாவது இனமாக ஜாக்குவார் அறியப்படுகிறது. இந்தப் பூனை இனங்களின் பூர்வீகமானது அமெரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களை கொண்டுள்ளது. சிறுத்தைகளைவிட வலிமையிலும் எடையிலும் அதிகமாக காணப் படுபவைதான் இந்த ஜாக்குவார் பூனைகள். இந்தப் பூனைகளை தென் அமெரிக்கா சிறுத்தைகள் என்றும் கூறுவார்கள். இரண்டு விதமான ஜாக்குவார் காணப்படுகின்றன. ஒன்று உடல் முழுவதும் கருப்பாக காணப்படும். மற்றொன்று சிறுத்தைகளுக்கு இருக்கின்ற கரும்புள்ளிகள் கொஞ்சம் தடித்தும் விரிந்தும் காணப்படும்.

தற்போது இதன் வாழ்விடமானது, அமெரிக்காவின் மெக்சிகோவிலிருந்து பராகுவேவிற்குத் தெற்குப் பகுதி மற்றும் வடக்கு அர்ஜென்டினா வரையிலும் காணப்படுகின்றது. இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் சதுப்பு நிலக்காடுகளிலும், மழை காடுகளிலும் ஜாக்குவார் பூனைகள் காணப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com