டைட்டானோபோவா: உலகிலேயே மிகப்பெரிய பாம்பு இதுதான்!

Titanoboa: This is the largest snake in the world!
Titanoboa: This is the largest snake in the world!

ரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் பூமி மிகவும் அற்புதமான மற்றும் நம் கற்பனை செய்ய முடியாத பல உயிரினங்களை சுமந்துள்ளது. இதில் பல ராட்சத மிருகங்களும் அடங்கும். அதிலும் டைட்டானோபோவா என்று குறிப்பிடப்படும் பாம்பு இனம் உங்களை பயத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும். அந்தக் காலத்தில் பசுமையான நிலப்பரப்புகளில் சுற்றித்திரிந்த இந்த பிரம்மாண்ட பாம்பு, வரலாற்றில் ஓர் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அதுதான் உலகிலேயே பிரம்மாண்ட பாம்பு என்ற பட்டம்.

உலகில் இந்தப் பாம்பு இருந்ததற்கான ஆதாரம் 2009ம் ஆண்டு கொலம்பியாவில் Cerrejón நிலக்கரி சுரங்கத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பழங்கால பாம்பின் புதைப்படிவ எச்சங்களைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போனார்கள். அவை சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேலியோசின் காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.

இதுவரை இவ்வளவு பெரிய பாம்பின் புதைப் படிமங்கள் எங்குமே கிடைத்ததில்லை. இந்தப் பாம்பின் அளவு 40 முதல் 50 அடி வரை நீளம் இருக்கலாம் எனவும், இதன் எடை சுமார் ஒரு டன் கொண்டதாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டபோது, அந்தக் காலத்தில் பாம்புகள் இப்போது இருப்பது போல்தான் இருந்திருக்கும் என்ற மக்களின் புரிதலை முற்றிலுமாக மாற்றியது.

அதன் பிறகு அவற்றை ஆய்வு செய்தபோது, அமெரிக்காவின் வெப்பமண்டலக் காடுகளில் அவை வசித்திருப்பது தெரிய வந்தது. மேலும், புதைப்படிவ சான்றுகளின் அடிப்படையில் டைட்டனோபோவா நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலங்களிலும், காடுகளிலும் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய பகுதிகளில் இருந்தால் மட்டுமே அவற்றால் இந்த அளவுக்கு செழித்து வளர்ந்திருக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அந்தக் காலத்தில் இந்தப் பாம்புகள் பெரிய வகை மீன்கள், முதலைகள் மற்றும் பல பாலூட்டி இனங்களை வேட்டையாடி, உணவுச் சங்கிலியின் மேல்நிலையில் இருந்திருக்கும் எனத் தெரிகிறது. டைட்டானோபோவா பாம்புகள் பற்றிய கண்டுபிடிப்புகள், பண்டைய காலத்தில் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என்ற தெளிவை நமக்குக் கொடுக்கிறது. மேலும், இதனால் பாம்புகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய விவாதங்களும் தூண்டப்பட்டது.

இதையும் படியுங்கள்:
உடல் முழுதும் ரத்தினங்கள்; இயற்கையின் அதிசய உயிரினம்!
Titanoboa: This is the largest snake in the world!

அந்தக் காலத்தில் நிலவிய தட்பவெட்ப நிலைக்கு ஏற்பவே உயிரினங்களின் அளவு இருந்தது என்பதை நமக்குத் தெரிய வருகிறது. மேலும், சுற்றுச்சூழல் காரணிகள் இத்தகைய பிரம்மாண்ட உயிரினங்களின் வளர்ச்சியை எப்படி எல்லாம் பாதித்திருக்கும் என்பதையும் நமக்கு வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இத்தகைய அசாதாரண உயிரினங்கள் பற்றி நாம் தெரிந்து கொள்வதால், எதிர்கால கண்டுபிடிப்புகளில் இதன் தரவுகளை வைத்து நிகழ்காலத்திற்கு ஏற்றது போன்ற விஷயங்களை நம்மால் உருவாக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com