சுத்தமான காற்று... சொர்க்கமான இயற்கை! உலகின் டாப் 10 தூய்மையான நாடுகள் இதோ!

Top 10 cleanest countries
Top 10 cleanest countries
Published on

சுற்றுச்சூழல், காற்று, நீர் ஆகியவற்றிலும், வீடுகள் முதல் சாலைகள் வரை ஜொலிக்கும், அதிகளவு தூய்மையைக் கடைப்பிடிக்கும் முதல் 10 நாடுகள் எவை என்று பார்ப்போம்.

டென்மார்க் (67.9) மதிப்பெண்

இங்குள்ள அனைத்து வீடுகளும் மரப்பலகையால் கட்டப்பட்டுள்ளன. இது ஒரு கச்சிதமான திட்டத்தை வகுத்து இயற்கையை ஏற்பாடு செய்ததுபோல் உள்ளது. டென்மார்க்கில் அட்டமான நீர் மற்றும் காற்று புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போட்ட திட்டங்களுக்கும் மிகவும் பிரபலமானது.

பிரிட்டன் (இங்கிலாந்து) (72.7) மதிப்பெண்

பசுமை போர்த்திய இயற்கை, சுத்தமான காற்று, நன்கு திட்டமிடப்பட்ட கழிவு மேலாண்மை ஆகியவற்றில் உலகத்தரம் வாய்ந்த நற்பெயரை பெற்றுள்ளது.

பின்லாந்து (73.7) மதிப்பெண்

சுற்றுச்சூழலில் அதிக கவனம் செலுத்தும் நாடுகளில் ஒன்று பின்லாந்து. வன பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு தண்ணீர் மற்றும் காற்றின் தரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இது விளங்குகிறது.

ஸ்வீடன் (70.5)

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஸ்வீடன் உலக அளவில் முன்னணியில் உள்ளது. ஸ்வீடன் குடிமக்கள் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள். ஸ்வீடனின் கலாச்சாரம், இயற்கை அதன் அழகு இதனால் அந்நாடு சுத்தத்தில் மிகவும் பிரபலமானது.

லக்சம்பர்க் (மதிப்பெண் - 75.0)

இந்த நாடு சிறியது. ஆனால் வலிமையானது. இந்த நாட்டில் 55% க்கும் அதிகமான நிலம். பாதுகாக்கப்பட்டுள்ளது. இங்கு சரியான சுகாதாரம் மற்றும் குடிநீர் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த ஊரில் பெண் குழந்தை பிறந்தால், அதன் பெயரில் ஒரு மரத்தை நடுகிறார்கள்!
Top 10 cleanest countries

ஜெர்மனி - (74-6) மதிப்பெண்

பசுமை, சுற்றுச்சூழலில் ஜெர்மனி 3 வது இடத்தில் உள்ளது. இங்கு நகர்ப்புற கழிவு நீரை 100% திறமையாக சுத்திகரித்து பல்லுயிர் பெருக்கத்தில், புதுமை, பாதுகாப்பில் சிறந்து விளங்குகிறது.

நார்வே ( 70.0) மதிப்பெண்

நார்வே நாடு அதன் கடல் பரப்புகளுக்கு பிரபலமானது. இங்கு 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரம், உலோக மேலாண்மையிலும், நிலையான எரிசக்தி பயன்பாட்டிற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஆஸ்திரியா. (69.0 ) மதிப்பெண்

கடுமையான மாசுபாட்டு தரத்திற்குபெயர் பெற்ற நாடு ஆஸ்திரியா. சுத்தமான காற்று, நீர் மற்றும் கழிவு மேலாண்மையை உறுதி செய்கிறது. நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு காடுகள் மற்றும் புல்வெளிகளால் சூழப்பட்டுள்ளது. இது மிகவும் தூய்மையான ஒன்றார மட்டுமல்லாமல் அழகிய சுற்றுச்சூழலில் ஒன்றாகவும் விளங்குகிறது.

சுவிட்சர்லாந்து (68.0) மதிப்பெண்

சுவிட்சர்லாந்தில் புகழுக்கு அதன் அழகிய நிலப்பரப்பு, தெளிவான ஏரிகள், அழகிய ஆல்ப்ஸ் மலைகள், குடிநீர் மற்றும் சுகாதாரத்தில் சரியான மதிப்பெண்கள் சுற்றுச்சூழல் பராமரிப்பு, பொது சுகாதாரம் அனைத்தையும் குறிக்கிறது. மேலும் நல்ல அழகிய வனவிலங்கு வாழ்விடம், மற்றும் வலுவான மாசு கட்டுப்பாடு , உலகின் தூய்மையானஆல்பைன் காடுகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் இந்த ஒரு மலைதான் உலகிற்கே மருந்து தருகிறது!
Top 10 cleanest countries

எஸ்டோனியா - (75.3) மதிப்பெண்கள். (ஐரோப்பா)

எஸ்டோனியா தூய்மையிலும், மிகவும் சுற்றுச் சூழலுக்கு உகந்த நாடுகளில் இது ஒன்றாக உள்ளது. புதுப்பித்தக்க எரிசக்தி, நிலையான வனவியல், கார்பன், பொது போக்குவரத்திலும் சிறந்து விளங்குகிறது.

உயர்தர காற்றின் தரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, ஆரோக்கிய ஸ்மார்ட் திட்டமிடல் என அனைத்திலும் சுத்தமாக எஸ்தோனியா நாடு நிரூபிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com