
அதிக மனித உயிர்களை கொல்லும் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலை சர்வதேச உயிரின பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுவது பல்வேறு வழிகளில் இன்றும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இவை அனைவரும் அறிந்ததே, அதேசமயம் விலங்குகளும் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டுதான் இருக்கின்றது. விலங்குகளால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் கொள்ளப்படுகின்றனர் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை. அதே சமயம் இப்படி வேட்டையாடும் விலங்குகள் மிகப்பெரிய ஆக்ரோஷமான, ராட்சச, காட்டு விலங்குகள் மட்டும் அல்ல என்பது நிதர்சனமான உண்மை.
ஆம், இப்படி மக்களோடு இணைந்து வாழும் பல்வேறு வகையான விலங்கினங்கள் மூலமும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றது. இப்படி அதிக மனிதர்களை கொள்ளும் விலங்குகளின் பட்டியலில் பூச்சி இனமே முதலிடத்தில் இருக்கிறது. அந்த பூச்சி வேறொன்று மில்லை, கொசுதான் அது. பல்வேறு வகையான காய்ச்சல்கள், நோய்களை ஏற்படுத்தி உலக முழுவதும் 7.25 லட்சம் மக்கள் கொலை செய்கிறது.
2வது இடத்தில் உள்ளது பாம்பு. பாம்பு கடித்து 1.38 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர். இந்தியாவில் குறிப்பாக விவசாயிகள் அதிகம் உயிரிழக்கின்றனர்.
3வது இடம் வகிப்பது நாய். நாய் கடித்து 59 ஆயிரம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். நாய் கடித்து ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கத்தால் இந்த உயிரிழப்பு ஏற்படுகிறது.
4வது இடத்தில் அசாஸின் பஸ் எனப்படும் காட்டு பூச்சி வகை உள்ளது. இந்த பூச்சி கடிப்பதன் மூலம் ஒட்டுண்ணி நோய் ஏற்பட்டு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பேர் இறக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் இந்த பூச்சியினால் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது.
5வது இடத்தில் உள்ளது தேள். தேள் கடித்து ஒவ்வொரு ஆண்டும் 3,300 நபர்கள் உயிரிழக்கின்றனர். உலகம் முழுவதும் 2,600 தேள் இனங்கள் இருக்கிறது என்றாலும் அதில் 25 இனங்கள் மட்டும் விஷம் தன்மை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த இடங்களில் முதலை, யானை, நீர்யானை, சிங்கம் ஆகியவை உள்ளன என்று சர்வதேச உயிரின பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.