
அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகவும் மனிதர்களுடன் நன்கு பழகக்கூடிய விலங்கினமாகவும் டால்பின்கள் இருக்கின்றன. கண்ட திட்டுகளிலும், ஆழம் குறைவான கடல் பகுதிகளிலும் இவற்றைக் காணலாம். அந்த வகையில், டால்பின்கள் இருக்கும் 7 இந்திய கடற்கரையோர இடங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கோவா: கோவாவில் உள்ள அரேபிய கடலோரப் பகுதிகள் இந்தியாவின் டால்பின்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாக இருக்கின்றன. டால்பின்களை சின்குவெரிம், மோர்ஜிம், பலோலெம் கடற்கரைகளில் இருந்து அதிகம் காணலாம். அக்டோபர் முதல் மார்ச் வரை படகில் சென்று கூட ஹம்பேக் டால்பின்கள், பாட்டில்நோஸ் டால்பின்களைப் பார்க்கலாம்.
2. வங்காள விரிகுடா: இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையே உள்ள வங்காள விரிகுடா பகுதி டால்பின்களுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது. கோடிட்ட டால்பின்கள் மற்றும் பாட்டில்நோஸ் டால்பின்களை தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் சென்று பார்க்கலாம்.
3. கோகர்னா: கர்நாடக மாநிலம், கோகர்னாவில் உள்ள ஓம் கடற்கரையில் அதிகம் டால்பின்களை பார்க்க முடியும். படகு சேவைகள் அதிகம் இருக்கும் அரேபிக் கடலோரமான இங்கு படகுகளில் சென்று பார்த்தால் ஹேம்ப் டால்பின்களை அதிக அளவில் அருகாமையில் பார்க்க முடியும்.
4. தர்கர்லி: மாசு குறைவாகவும் பவளப்பாறைகள் அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் உள்ள கோன்கடன் கடலோர பகுதியில் டால்பின்கள் படகுகளில் சென்றால் அதிக அளவில் அருகாமையில் காணலாம். ஸ்பின்னர் மற்றும் ஹேம்பேக் டால்பின்கள் இங்கு மிகுந்து காணப்படுகின்றன.
5. கட்ச் வளைகுடா: சதுப்பு நிலங்கள் மற்றும் பவளப்பாறைகள் டால்பின்களை ஈர்க்கும் என்பதால் குஜராத்தின் ஜாம்நகர், மிதாப்பூர் அல்லது நாராரா தீவுகளில் இருந்து சென்றால் டால்பின்களை பார்க்கலாம். பார்டில்நோஸ் மற்றும் ஹேம்பேக் டால்பின்கள் இங்கு அதிக அளவில் காணப்படுகின்றன.
6. மால்வன் கடலோரம்: மகாராஷ்டிரா மாநிலத்தின் தெற்கு பகுதியில் இருக்கும், மால்வன் கடற்கரையோரங்களில் டால்பின்கள் அதிகம் காணப்படும் இடங்களாக இருக்கின்றன.
7. திஹா கடற்கரை: மேற்கு வங்காளத்தில் உள்ள திஹா கடற்கரையில் டால்பின்களை அதிகளவில் காண முடியும். படகு மூலம் சந்தனேஸ்வரர் கோயில் அருகில் இருந்தோ அல்லது திஹா கடற்கரை ஓரத்திலோ நின்று இந்தோ பசிபிக் ஹேம்பக் டால்பின்களை ரசிக்கலாம்.
மேற்கூறிய கடற்கரை இடங்களில் டால்பின்களை கண்டு ரசித்து விளையாடி மகிழ்ச்சி அடையலாம்.