‘லைகன்கள்’ என்பது பாசிகள் மற்றும் பூஞ்சையுடன் ஏற்படும் ஒரு கூட்டு வாழ்வு அமைப்பாகும். இதில் பாசி உறுப்பினர் பாசி உயிரி என்றும், பூஞ்சை உறுப்பினர் பூஞ்சை உயிரி என்றும் அழைக்கப்படுகிறது. பாசி உயிரி பூஞ்சைக்கு ஊட்டத்தை தருகிறது. பூஞ்சை உயிரி பாசிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் அதை தளப்பொருள் மீது நிலைப்படுத்த ரைசினே என்ற அமைப்பை ஏற்படுத்த உதவுகிறது.
லைகன்களின் வகைகள்:
1. கார்ட்டி கோலஸ்: மரப்பட்டை மீது காணப்படுபவை.
2. லிக்னி கோலஸ்: கட்டை மீது வாழ்பவை.
3. சாக்ஸி கோலஸ்: பாறை மீது வாழ்பவை.
4. டெர்ரி கோலஸ்: நிலத்தில் வாழ்பவை.
5. கடல் வகை: கடலில் உள்ள சிலிக்கா பாறை மீது வாழ்பவை.
6. நன்னீர் வகை: நன்னீரில் உள்ள சிலிக்கா பாறை மீது வாழ்பவை.
லைகன்களின் பொருளாதார முக்கியத்துவம்:
1. லைகன்கள் கணிசமான பொருளாதார மதிப்பை கொண்டுள்ளன என்பதும் அவை பல்வேறு வழிகளில் சுற்றுச்சூழலுக்கு முக்கியமானவை என்பதும், பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2. பல சந்தர்ப்பங்களில் லைகன்கள் பாறைகளை மண்ணாக மாற்றியமைக்க காரணமாகின்றன. மேலும், அவை மண்ணின் உருவாக்கம், மேம்பாடு மற்றும் மண்ணின் தாவர வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் தாவர வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
3. நைட்ரஜன் சுழற்சியில் லைகன்களும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. வளி மண்டலத்தில் இருந்து நைட்ரஜனை உறிஞ்சி தங்கள் திசுக்களில் சேர்க்கின்றன.
4. உலகெங்கிலும் உள்ள மக்கள் உணவுக்காக லைகன்களை நம்பி உள்ளனர். மேலும், அவை ஊட்டச்சத்துக்கான முக்கிய ஆதாரம் ஆகும். ஐஸ்லாந்து பாசியானது வடக்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டங்களின் குறிப்பிட்ட பிரிவுகளில் உணவின் முக்கிய ஆதாரமாக உள்ளது.
5. பெட்ரோலஜிஸ்டுகள் மற்றும் புவியியலாளர்கள் இந்த லைகன்களின் அளவை பொறுத்து பாறைகளின் வயது, பிற பண்புகள் மற்றும் அவற்றின் மேற்பரப்புகளை ஆராய்ந்து தீர்மானிக்க முடியும்.
6. ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் லிட்மஸ் சோதனை, PH காட்டி மற்றும் பிற வண்ணங்களை உற்பத்தி செய்யும் லைகன்கள் பல்வேறு இனங்களில் இருந்து அறுவடை செய்யப்படுகின்றன.
7. பாலியஸ்டர், ஈயம், தாமிரம்,, ரேடியன்யூக்லைட்கள் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிற கதிரியக்க கூறுகள் போன்ற அசுத்தங்களை சிதைக்கும் ஒரு மக்கும் முகவராகவும் லைகன்கள் செயல்படுகின்றன.
8. அழகு சாதனப் பிரிவுகள், பல்வேறு சருமப் பிரச்னைகள் மற்றும், தடிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க இயற்கை மருந்தாகவும் லைகன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
9. தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களில் சில கடுமையான தொற்று நோய்களுக்கு காரணமான நோய் கிருமிகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் நீர் தேக்கங்களின் சிதைவில் சில வகையான லைகன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
10. லைகன்கள் பல்வேறு நீர்வாழ் உயிரினங்களுக்கான மதிப்புமிக்க உணவாகவும் இருக்கின்றன. மேலும், அவை பொதுவாக மருத்துவ துறையில் நோய் எதிர்ப்பு முகவர்களாகப் பயன்படுத்தப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மைக்ரோ பாக்டீரியல் எதிர்ப்பிகள், வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களை உருவாக்குகின்றன.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம்: உலகெங்கிலும் உள்ள பல சுற்றுச்சூழல் அமைப்புகளில் லைகன்கள் ஒரு முக்கிய இனமாகும். மான்கள், பறவைகள், எலிகள், போன்ற பல உயிரினங்கள் லைகன்களை உணவாகவும், வாழ்விடமாகவும் பயன்படுத்துகின்றன. மழை, காற்று மற்றும் பனி போன்ற தீவிர வானிலை நிலைகளிலிருந்து மரங்கள் மற்றும் பாறைகளை பாதுகாக்கின்றன. சில பூச்சிகள் அவற்றின் தோற்றத்தை லைகன்களைப் போல மாற்றியுள்ளன. அவை அவற்றின் இயற்கை சூழலில் குறிப்பிடத்தக்க பகுதியை உருவாக்குகின்றன.