

தாழ்நிலக் கோடுகள் கொண்ட டென்ரெக் (Lowland Streaked Tenrec) என்பது ஒரு சிறிய டென்ரெக் ஆகும். இது ஹெமிசென்டெட்ஸ் செமிஸ்பினோசஸ் (Hemicentetes semispinosus) என்று அறிவியல் ரீதியாக அறியப்படுகிறது.
இவை மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறிய பாலூட்டியாகும். மடகாஸ்கரின் தாழ்நிலப் பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த விலங்கு சிறிய உடல் அளவுடன், பொதுவாக சுமார் 140 மி.மீ நீளம் மற்றும் 125 முதல் 280 கிராம் எடை இருக்கும். இந்த உயிரினம் அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் நடத்தை காரணமாக அறியப்படுகிறது.
நீளமான, கூர்மையான மூக்கு மற்றும் முதுகில் மஞ்சள் நிற கோடுகளுடன் கருப்பு நிறத்தில் காணப்படும். இதன் உடலில் கூர்மையான முட்கள் காணப்படும்.
தாழ்நிலக் கோடுடைய டென்ரெக்குகள் வடக்கு மற்றும் கிழக்கு மடகாஸ்கரின், கடல் மட்டத்திலிருந்து 0 முதல் 1,550 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பமண்டல தாழ்நில மழைக்காடுகளில் காணப்படுகின்றன.
வாழ்த்துக்கள்! நீங்கள் முதல் க்ளு உள்ள இடத்தை அடைந்துவிட்டீர்கள்.
இதோ உங்களுக்கான க்ளு - 'கண்ணீர் விடற'
அடுத்த க்ளுவை கண்டுபிடிக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
அவற்றின் வாழ்விடங்களில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வெப்பமண்டல காடுகள், புதர் நிலங்கள் மற்றும் விவசாயப் பகுதிகளும் அடங்கும்.
இவை துளையிடும் விலங்குகள். இனப்பெருக்க காலத்தில் அவை தங்குவதற்கு ஏற்ற சிக்கலான சுரங்கப்பாதை அமைப்புகளை உருவாக்குகின்றன.
இவற்றின் முதன்மை உணவாக மண்புழுக்களைக் கொண்டுள்ளன. மேலும், வண்டு, லார்வாக்கள் போன்ற பிற மென்மையான உடல் கொண்ட முதுகெலும்பற்ற விலங்குகளையும் வேட்டையாடும். அதோடு, சிறிய அளவு பழங்களையும் உணவாக உட்கொள்கின்றன.
இவற்றுக்கு மிகவும் மென்மையான தாடை எலும்புகளே உள்ளன. தாழ்நிலைக் கோடுடைய டென்ரெக்கின் மிக அற்புதமான அம்சங்களில் ஒன்று 'சத்தம் எழுப்புதல் (Stridulation)'. அவை தங்கள் முதுகில் சிறப்பு முட்களைக் கொண்டுள்ளன. அவற்றை ஒன்றோடு ஒன்று தேய்த்து சத்தம் எழுப்பும். இது பாலூட்டிகளுக்கு இடையேயான ஒரு தனித்துவமான தொடர்பு வடிவமாகும். மேலும், குழு உறுப்பினர்களுடன், குறிப்பாக பிரியும் போது தொடர்பு கொள்ள இது பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான டென்ரெக் இனங்களைப் போலல்லாமல், தாழ்நிலக் கோடுடைய டென்ரெக்குகள் குடும்பம் அல்லது குழுக்களாக வாழ்கின்றன.
அவை அச்சுறுத்தப்படும்போது, தங்கள் கழுத்து மற்றும் தலையில் உள்ள முட்களை உயர்த்தும், "புட்-புட்" அல்லது "க்ரஞ்ச்" ஒலிகளை எழுப்பும். மேலும் தங்கள் முன் பாதங்களால் தரையை மிதிக்கும்.
அவற்றின் உடல் வெப்பநிலை மிகவும் மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. சில மணி நேரங்களுக்குள் பரவலாக ஏற்ற இறக்கமாக இருக்கும். சில சமயங்களில் அவற்றின் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப கிட்டத்தட்ட குறைந்துவிடும்.
தாழ்நிலக் கோடுடைய டென்ரெக் தற்போது IUCN செம்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.