ஹைபிரிட் பழங்கள் ஆரோக்கியமா? ஆபத்தா? அவசியம் அறிய வேண்டிய ரகசியம்!

Are hybrid fruits healthy? Are dangerous?
hybrid fruit
Published on

ழங்கள் இயற்கையின் மிகச் சிறந்த படைப்பு. ஒவ்வொரு பழமும் அதன் தனித்துவமான சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கு பெயர் போனவை. ஆனால், காலப்போக்கில் இவற்றில் Hybrid எனப்படும் கலப்பின பழங்களை மனிதர்கள் உருவாக்கினர். இவை இரண்டு வெவ்வேறு வகை பழங்களுக்கு இடையே குறுக்கு இனப்பெருக்கம் செய்வது மூலமாக உண்டாகும் புதிய வகை பழமாகும். இதனால் முற்றிலும் வித்தியாசமான சுவை மற்றும் குணாதிசயங்கள் கொண்ட பழங்கள் உருவாகின்றன.

கலப்பின பழங்களின் தொடக்கம்: கலப்பின பழங்கள் ஏதோ திடீரென உருவாக்கப்பட்டவை அல்ல. அவை பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆய்வுகள் மற்றும் விவசாய நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை. பழங்களின் கலப்பு என்பது வெவ்வேறு தாய் தாவரங்களின் பண்புகளை ஒன்றிணைத்து, மேம்படுத்தப்பட்ட சுவை, நோய் எதிர்ப்பு மற்றும் காலநிலைகளுக்கு ஏற்றவாறு புதிய வகையை உருவாக்கும் ஒரு வழிமுறையாகும். இது முழுக்க முழுக்க மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட செயற்கையான செயல்முறையாகும்.

இதையும் படியுங்கள்:
ஆழ்கடலில் உயிர்கள் பேசும் புதிய மொழி: சோனார் ஒலிக்குப் பதிலளித்த கணவாய் மீன்..!
Are hybrid fruits healthy? Are dangerous?

கலப்பின பழங்களின் நன்மைகள்: கலப்பின பழங்களில் முக்கியமான நன்மைகளில் ஒன்று அவற்றின் சிறந்த சுவை. சரியான தாவரங்களை தேர்ந்தெடுப்பதன் மூலமாக கலப்பின பழங்களின் சுவை, சராசரி பழங்களுடன் ஒப்பிடும்போது மிகுந்த சுவையை அளிக்கும். கலப்பின பழங்களுக்கு மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அவ்வளவு எளிதில் அவற்றை நோய்கள் தாக்குவதில்லை. இதனால் விவசாயிகளின் விருப்பமான தேர்வாக இவை அமைகின்றன.

கலப்பின பழங்கள் பெரும்பாலும் வெவ்வேறு கால நிலைக்கு ஏற்றவாறு விளையும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இதனால் இவற்றின் வளரும் பருவம் நீட்டிக்கப்பட்டு விவசாயிகள் எல்லா பகுதிகளிலும் இதை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது. சில கலப்பின பழ வகைகளில் வைட்டமின் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கும். இதனால் இதை உண்பவர்களுக்கு சிறந்த வரப்பிரசாதமாக இது அமைகிறது.

கலப்பின பழங்களில் உள்ள குறைபாடுகள்: கலப்பின பழங்கள் பிரபலமடைவதால் பாரம்பரிய பழ வகைகள் சில நேரங்களில் தம் கவனத்தை இழக்கலாம். மேலும், இவை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பழங்கள் என்பதால், இதை உண்பவர்களுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே ஒரு நாளைக்கு அதிகபட்சம் பால் கொடுக்கும் விலங்கு எது தெரியுமா?
Are hybrid fruits healthy? Are dangerous?

கலப்பின பழங்களுக்கு குறைவாகவே பூச்சிக்கொல்லிகள் தேவைப்படும்போது, இவை அதிகமான அளவில் உற்பத்தி செய்யப்படுவதால், அதிக நீர் பயன்பாடு மற்றும் இவற்றை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து வெளியேற்றங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கலாம்.

சில கலப்பின பழங்களில் விதைகள் இருப்பதில்லை. இதனால் அதை உற்பத்தி செய்வதில் கடினம் ஏற்படுகிறது. இது விதை சேமிப்பு மற்றும் பாரம்பரிய விவசாய நடைமுறைகளை சவாலானதாக மாற்றுகிறது. ஏனென்றால், விவசாயிகள் பெரும்பாலும் அவர்களுக்கு வேண்டியபோது விவசாயம் செய்ய விதைகளையே நம்பியுள்ளனர்.

கலப்பின பழங்கள் நமக்கு பலவிதமான சுவையையும் நன்மைகளையும் வழங்கி, அதிக நோய் எதிர்ப்பு மற்றும் நீட்டிக்கப்பட்ட வளரும் பருவங்களால் விவசாயிகளுக்கு உதவினாலும், இவற்றில் உள்ள பாதிப்புகளை ஏற்படுத்தும் குறைகளால், இதை உண்போரை பயம்கொள்ள வைக்கிறது. எனவே, இவற்றின் குறைகளை சமநிலைப்படுத்தி பாதுகாப்பானதாக மாற்றுவது அவசியமாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com