ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்ற காய்கறி சாகுபடி லிஸ்ட் இதோ!

Horticulture Crops
Vegetables
Published on

விவசாயம் என்றுமே காலநிலையுடன் தொடர்புடையது. இதனை விவசாயிகள் பலரும் அறிவர். அதனால் தான் 'பருவத்தே பயிர் செய்' மற்றும் 'ஆடிப்பட்டம் தேடி விதை' போன்ற பழமொழிகள் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ப பயிர்களை மாற்றி விவசாயம் செய்தால், நல்ல பலன் கிடைப்பதோடு, மண் வளமும் பெருகும். அவ்வகையில், ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த காய்கறிகளை பயிரிட்டால், நல்ல மகசூல் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

தானியங்கள் முதல் காய்கறிகள் வரை ஒவ்வொன்றிற்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. ஒவ்வொரு காலநிலையையும் எதிர்கொண்டு நன்முறையில் வளரும் பயிர்களைத் தேர்வு செய்வதில், விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் தொடர்ச்சியாக ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், அவ்வப்போது பயிர் சுழற்சி முறையில் பயிர்களை மாற்ற வேண்டும். இதன் மூலம் முந்தைய பயிர்களின் கழிவுகள், தற்போதைய பயிர்களுக்கு உரமாகவும் உதவும்.

நமக்கு சரிவிகித உணவை அளிப்பதில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் உயிர் சத்துக்களை அளிக்கும் காய்கறிகளை மாதத்திற்கு ஏற்றவாறு விதைப்பது இலாபத்தை அதிகரிக்கும் வழியாகும். எந்த மாதத்தில் எந்த காய்கறி நன்றாக வளரும், கோடையில் வறட்சியைத் தாங்கும் காய்கறிகள் எவை, புயல் காற்றில் சாயாத காய்கறிகள் எவை என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப காய்கறிகளை நடவு செய்ய வேண்டும். மேலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தை மதிப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது மாதத்திற்கு ஏற்றவாறு சாகுபடி செய்ய வேண்டிய காய்கறிகளின் பட்டியலைக் காண்போம்.

ஜனவரி (மார்கழி ~ தை): தக்காளி, மிளகாய், கத்தரிக்காய், சுரைக்காய், முள்ளங்கி, பூசணிக்காய் மற்றும் கீரைகள்.

பிப்ரவரி (தை ~ மாசி): வெண்டைக்காய், கொத்தவரைக்காய், பீர்க்கங்காய், கோவைக்காய், தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் மற்றும் கீரைகள்.

மார்ச் (மாசி ~ பங்குனி): கொத்தவரைக்காய், பீர்க்கங்காய், கோவைக்காய், தக்காளி மற்றும் கோவைக்காய்.

ஏப்ரல் (பங்குனி ~ சித்திரை): வெண்டைக்காய் மற்றும் கொத்தவரைக்காய்.

மே (சித்திரை ~ வைகாசி): தக்காளி, கத்தரிக்காய் மற்றும் கொத்தவரைக்காய்.

ஜூன் (வைகாசி ~ ஆனி): பூசணிக்காய், வெண்டைக்காய், செடி முருங்கை, தக்காளி, கோவைக்காய், கத்தரிக்காய் மற்றும் கீரைகள்.

இதையும் படியுங்கள்:
தோட்டக்கலைப் பிரியரா நீங்கள்? இந்த 5 குறிப்புகள் உங்களுக்குத் தான்!
Horticulture Crops

ஜூலை (ஆனி ~ ஆடி): முள்ளங்கி, மிளகாய், தக்காளி, பீர்க்கங்காய், பூசணிக்காய், சுரைக்காய், கொத்தவரைக்காய் மற்றும் வெண்டைக்காய்.

ஆகஸ்ட் (ஆடி ~ ஆவணி): பாகல், பீர்க்கங்காய், முள்ளங்கி, சுரைக்காய், வெண்டைக்காய் மற்றும் மிளகாய்.

செப்டம்பர் (ஆவணி ~ புரட்டாசி): பூசணிக்காய், முள்ளங்கி, கத்தரிக்காய், பீர்க்கங்காய் மற்றும் கீரைகள்.

அக்டோபர் (புரட்டாசி ~ ஐப்பசி): முள்ளங்கி மற்றும் கத்தரிக்காய்.

நவம்பர் (ஐப்பசி ~ கார்த்திகை): முள்ளங்கி, செடி முருங்கை, தக்காளி, பூசணிக்காய் மற்றும் கத்தரிக்காய்.

டிசம்பர் (கார்த்திகை ~ மார்கழி): தக்காளி மற்றும் கத்தரிக்காய்.

மேற்கண்ட பட்டியலின் படி காய்கறிகளை விதைத்தால் விவசாயிகளால் நல்ல பலனைக் காண முடியும். அதோடு மாடித்தோட்டத்தில் காய்கறிகளை அறுவடை செய்பவர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com