இந்த ஊரில் பெண் குழந்தை பிறந்தால், அதன் பெயரில் ஒரு மரத்தை நடுகிறார்கள்!

girl-child-tree-planting
girl-child-tree-planting
Published on

மூக வலைத்தளங்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கும் வீடியோ ஒன்று உள்ளது. அது ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிப்லாந்த்ரி என்ற கிராமத்தின் பின்னணி வரலாற்றைக் கொண்டது. வீடியோ தொடங்கும்போது, தென்னிந்திய முகச்சாயலைக் கொண்ட ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவர் பேருந்தில் பயணம் செய்கிறார். அப்போது ஒரு அவரச அழைப்பை பெறுகிறார், அந்த அழைப்பில் அவரது மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவவலியில் துடிப்பதாக செய்தி அறிகிறார். போனில் பிரசவ அறையை தயார் செய்ய சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு விரைகிறார்.

பிரசவம் முடிந்ததும், தன் அறையில் பெண் மருத்துவர் அமர்ந்துள்ளார். அப்போது அவரது அறைக்கு வெளியே ஏதோ ஒரு பரபரப்பு நிலவுவதாக உணர்கிறார். புதிதாக பிறந்த அந்தப் பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு குழந்தையின் அப்பா வெளியில் வருகிறார். அந்த வராண்டா முழுக்க கைகளில் அரிவாள், கம்பு, தோள்களில் மண்வெட்டி, மண் கொத்தி ஆகிய ஆயுதங்களுடன் மனிதர்கள் அங்கே நிற்கின்றனர்.

இதைப் பார்த்த பெண் மருத்துவர் பதறிப் போகிறார். இங்கே என்ன நடக்கிறது என்று குழந்தையின் அப்பாவிடம் வினவுகிறார். அந்த மனிதர் எந்த பதிலும் சொல்லாமல் நிற்கிறார். அப்போது ஊர் பெரியவர் கம்பீரமாக உள்ளே நுழைகிறார். பெண் குழந்தை அவர் கைகளில் கொடுக்கப்படுகிறது. அவர் குழந்தையுடன் ஆயுதம் தாங்கிய விவசாயிடம் செல்ல மருத்துவரோ பதறியடித்து அருகில் செல்கிறார். முன்பு இந்தியாவில் சில மாநிலங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் அதை கொல்லும் வழக்கம் இருந்தது. அவரது பதற்றம் அந்த மனிதர்கள் ஆயுதங்களினால் அந்த குழந்தையை கொன்று விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக இருந்தது.

கிராமப் பெரியவர் விவசாயிடம் குழந்தையை காட்ட, அவரோ கையில் இருக்கும் ஒரு செடியை பெண் குழந்தையின் காலில் வைத்து எடுக்கிறார். பெண் குழந்தையை "பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஓவியத்தில் இருப்பதைப் போல" தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து கொண்டாடுகிறார். இப்போது பெண் மருத்துவரிடம் தலைவர் பேசுகிறார். பிப்லாந்த்ரி கிராமத்தில் எந்த பெண் குழந்தை பிறந்தாலும், அதைக் கொண்டாடும் வகையில் 111 செடிகள் நடுவதை கிராமத்தார் கடமையாக வைத்திருப்பதாக கூறுகிறார். பெண் குழந்தைகள் வளரும்போது அந்த செடிகளும் வளரும், அந்த செடியை வளர்த்து பராமரிப்பது அந்த குடும்பத்தின் கடமையாகும்.

இதையும் படியுங்கள்:
ரத்தத்தை உறைய வைக்கும் கண்ணாடி விரியன்... ராஜநாகத்தையே மிஞ்சும் ஆபத்து!
girl-child-tree-planting

பெண் குழந்தையை கொண்டாடும் பின்னணி:

பிப்லாந்த்ரி கிராமத்தில் ஷ்யாம் சுந்தர் பலிவால் என்பவரின் மகளான கிரண் நீர்சத்து குறைபாட்டால் இளம்வயதில் மறைந்து விடுகிறாள். கிரணின் நினைவாக நீர் ஆதாரங்களை பாதுகாக்க, சுற்றுசூழலை பராமரிக்க வேண்டுமென்பதால், அவரது தந்தை மரம் நட ஆரம்பித்தார். பாலைவன கிராமமான பிப்லாந்த்ரியில் அவரது தொடர் முயற்சியில், ஏராளமான மரங்கள் நடப்பபட்டு பராமரிக்கப்படுகின்றன.

2006 ஆம் ஆண்டு, ஷ்யாம் சுந்தர் கிராமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து பெண் குழந்தைகளின் பிறப்பைக் கொண்டாடவும், சுற்றுச் சூழலை பாதுகாக்க மரம் நடுவதையும் கட்டாயமாக்கினார். மரங்களின் தண்ணீர் தேவைக்காக 13 கிமீ தூரம் வரை குழாய்களின் மூலம் தண்ணீர் இணைப்பையும் அவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதன் விளைவாக இந்த பாலைவன கிராமத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்டு பசுமை வனப்பகுதியாக மாற்றியுள்ளார்.

இவரது முயற்சிகள் பெண் குழந்தைகளின் பிறப்பை ஊக்குவிப்பதுடன், உரிய அங்கீகாரம், சமூகத்தில் மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இங்கு பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ₹31,000 கிராம மக்களிடம் மற்றும் பெற்றோரிடமிருந்து பெறப்பட்டு வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்படுகிறது. இந்த தொகை அந்த பெண்ணின் கல்வி மற்றும் எதிர்காலத் தேவைக்கு ஒரு ஆதரவைத் தரும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் 'ஸ்ட்ராபெரி பழங்களின் கேப்பிடல்' எது தெரியுமா?
girl-child-tree-planting

பெண் குழந்தையின் பிறப்பை, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைத்த அவரது முயற்சி பாராட்டுக்குரியது. வளரும் பெண்கள் தங்களை பெருமைப்படுத்த நட்ட மரங்களை பராமரித்து மகிழ்வார்கள். ஷ்யாம் சுந்தரின் கனவுகள் அந்த கிராமத்தை இந்தியாவின் மிகச்சிறந்த கிராமமாக மாற்றியது. 2021 ஆம் ஆண்டு ஷ்யாம் சுந்தர் பலிவாலின் சேவைகளை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com