சுற்றுப்புறச் சூழலை பராமரிக்கும் துப்புரவாளர் பிணந்தின்னிக் கழுகுகள்!

பிணந்தின்னிக் கழுகு
பிணந்தின்னிக் கழுகுhttps://uyiri.wordpress.com
Published on

ழுகுகளை ஆங்கிலத்தில் ஈகிள் என்று அழைப்பார்கள். இது ஒரு வேட்டையாடி பறவையாகும். பருந்து என்பதை ஆங்கிலத்தில் kite என்பர். புராணத்தில் வரும் கருடன் இந்த வகையைச் சேர்ந்தது. வல்லூறு என்பதை ஆங்கிலத்தில் hawk என்பர். அதேபோல், கழுகுகளை தமிழில், ‘பாறு’ என்றும் அழைப்பார்கள். ஆனால், வழக்கு மொழியில் பிணந்தின்னிக் கழுகுகள் என்றே இவை அழைக்கப்படுகின்றன.

ரூபெல் எனப்படும் கழுகு மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு பெரும் பிணந்தின்னிக் கழுகாகும். இது மிகவும் அதிக உயரத்தில் கடல் மட்டத்திலிருந்து 11,000 மீட்டர் (36,000 அடி) உயரத்தில் பறக்கக் கூடியது. உலகில் 23 வகையான பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளன. அவற்றில் ஒன்பது வகையான கழுகுகள் இந்தியாவில் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக நான்கு வகையான கழுகுகள் தென்னிந்தியாவில் உள்ளன.

வனப்பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் வாழும் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கணக்கெடுப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது ஆரோக்கியமான விஷயம் அல்ல. பிணம் தின்னிக் கழுகுகளின் பங்குகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமாகிறது. நம் சுற்றுச்சூழலை துப்புரவாக பராமரிக்கும் துப்புரவாளர் இந்த பிணந்தினி கழுகுகள்தான்.

கழுத்தில் வெள்ளைத் திட்டு கொண்ட பருந்தைக் கண்டால், ‘கிருஷ்ணா’ என்று சொல்லி கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பழக்கம் நம்மிடம் உண்டு. ஆனால், பருந்தின் நெருங்கிய சொந்தமான பிணந்தின்னிக் கழுகுகள் நம் நாட்டில் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. இவை இரையைத் தேடி வேட்டையாடிக் கொல்வதில்லை. இறந்துபோன உயிரினங்களையே உண்கின்றன. மேலும், இறந்துபோன உயிரினங்களின் உடலில் ஆந்தராக்ஸ், காலரா, ராபிஸ் போன்ற நோய் தொற்றுகள் இருந்தால் அந்த உயிரினங்களை தின்பதன் மூலம் குறிப்பிட்ட நோய் கிருமிகளின் பரவலை இவை தடுக்கின்றன.

அந்த நோய்க் கிருமிகளை ஜீரணித்துக் கொள்வதற்கான கந்தக அமிலம் பிணந்தின்னிக் கழுகுகளின் வயிற்றில் சுரக்கிறது. மனிதர்களுக்கு செரிமானம் ஆவதற்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் பயன்படுவது போல் கழுகுகளுக்கு கந்தக அமிலம் பயன்படுகிறது. இவை அழுகிய இறந்து போன விலங்குகளின் உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் நோய் தொற்று ஏற்படாமல் செரிமானம் செய்வதற்கும், எதிரிகளை தாக்கவும், தன்னுடைய முட்டைகளை பாதுகாக்கவும், ஆபத்து நேரங்களில் உடலில் இருக்கிற கந்தக அமிலத்தை கழுகுகள் உமிழ்கின்றன.

இந்தக் கழுகுகளின் அழிவுக்குக் காரணம் நகரமயமாக்கல் மட்டுமல்ல, கால்நடைகளுக்கு தரப்படும், ‘டைக்ளோஃபினாக்’ எனும் வலி நிவாரணி மருந்தும்தான்.

இதையும் படியுங்கள்:
தேனுடன் சேர்த்து உண்ணக்கூடாத உணவுகள் எவை தெரியுமா?
பிணந்தின்னிக் கழுகு

இந்த மருந்தை உட்கொண்ட கால்நடைகள் இறந்த பிறகு பிணந்தின்னி கழுகுகள் அவற்றை உணவாக உட்கொள்கின்றன. அப்பொழுது அந்த உயிரினங்களின் உடலில் எச்சமாக தங்கியிருக்கும், ‘டைக்ளோஃபினாக்’ கழுகுகளின் உடலுக்குள் சென்று அவற்றின் சிறுநீரகங்கள் அவற்றை செயலிழக்க வைத்து விடுகின்றன. கழுகுகள் ஓரிடத்தில் தொடர்ந்து வட்டமடித்தால் ஒன்று அங்கு விலங்கின் இறந்த உடல் இருக்கும் அல்லது புலி இருக்கும். புலிகள் வேட்டையாடிய இரையை இரண்டு நாட்களுக்கு பாதுகாத்து உண்ணும். அப்படி வேட்டையாடப்பட்ட விலங்குகளின் உடலை கழுகுகளும் உண்ணும்.

கழுகுகளுக்கு உடலில் வியர்வை சுரப்பிகள் கிடையாது. அதனால் உடலில் உள்ள அழுக்குகளை தன்னுடைய கழிவின் மூலமாக அவை சுத்தப்படுத்திக் கொள்கின்றன. கால்நடைகளுக்கான, ‘டைக்ளோஃபினாக்’ வலி நிவாரண மருந்து இப்போது தடை செய்யப்பட்டு விட்டாலும் அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை நிலவுவதால் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. பல இடங்களில் சாதாரணமாகக் காணப்பட்ட பிணந்தின்னி கழுகுகள் இப்பொழுது அதிகம் தென்படுவதில்லை. இவற்றை பாதுகாக்க வேண்டிய உயிரினங்கள் பட்டியலில் ஆராய்ச்சியாளர்கள் சேர்த்துள்ளது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com