ஹார்னெட் VS குளவிகள்: இரண்டுமே ஒன்றல்ல..! விஷயம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

Wasp vs Hornet
Wasp vs Hornet
Published on

சோமு: அண்ணே.. இந்தக் குளவினாலே மனுஷங்களுக்கு ஆபத்து தானா..?

இராமு: தம்பி.. குளவி இயற்கைக்கு பல நல்ல விஷயம் செய்து. இருந்தாலும் ஒரு சில நேரங்கள்ல குளவி கொட்டும்போது மனுஷனுக்கு அது ஆபத்தா மாறுது..!

சோமு: குளவிகள்ல என்னென்ன வகைகள் இருக்குது.. அத பத்தி சொல்லணுண்ணே..

இராமு: குளவிகள்ல பல வகை இருக்குதுடா..! நம்ம ஊரு காட்டுக்குள்ள இருக்கிற குளவிகள நாம கதண்டுகள்ன்னு சொல்லுவோம்.. அதே மாதிரி கொஞ்சம் பெருசா இருக்கிற குழவிய ஹார்னென்ட்-ன்னு சொல்லுவோம்..!

சோமு:  ஹார்னெட் குழவினா அது என்ன, எப்படி இருக்கும்..?

இராமு: டேய்.. மஞ்சள் நிறத்திலையும் கருப்பு நிறத்திலையும் மேல கோடு கோடா இருந்தா அது கதண்டு.. அதே மாதிரி செம்பழுப்பு நிறத்தில, அடர் கருப்பு, ஆரஞ்சு மஞ்சள் கலந்த நிறத்தில கதண்ட விட கொஞ்சம் அளவுல பெருசா இருந்தா அது ஹார்னெட்..! ஓகேவா, ஆனா பொதுவா இது எல்லாமே குளவி தான்.. ஒரு சில வேறுபாடுகள்ல இது வேறுபட்டு காணப்படுது..!

சோமு: அப்படி என்னென்ன வேறுபாடு அத சொல்லு.. பாப்போம். 

இராமு: கதண்டுகள் பாக்குறதுக்கு ஒல்லியா இருக்கும் கண்ணுக்கு பக்கத்துல இருக்குற உணர்திறன் கொம்பு சின்னதா இருக்கும் ஆனா, ஹார்னெட் குளவிகள் கொஞ்சம் குண்டா தடித்தும் உடல் அளவிலும், உறுதியிலும் மேலோங்கி இருக்கும். அதேபோல உணர்திறன் கொண்டு சற்று நீண்டு காணப்படும். இதுக்கு இன்னொரு பேரு கூட இருக்கு மலைக் குளவின்னு சொல்லுவாங்க..

ஆனா இந்த ரெண்டு வகை குளவிகள் மனுசன கொட்டும் போது தான் அது ஆபத்தா மாறுது. மரத்திலையோ, பாழடைஞ்ச கட்டடங்களிலோ, எதிர்பாராத விதமா நம்ம வீட்டிலயும் கூட இந்த குளவிகள் கூடுகளை கட்டுது. இந்தக் கூட்டை பாக்குறதுக்கு கரையான் புற்று போல சாம்பல் நிறத்தில்ல ஒரு பந்து போல பெருசா கட்டியா இருக்கும்..!

பொதுவாவே இந்த மாதிரி குளவிகள் எல்லாம் காட்டுல தான் அதிகமா வாழும்.. இப்ப இருக்கிற காடழிப்பு போன்ற பல பிரச்சனையால இப்ப மனுஷ குடியிருப்புகளுக்கு வரத் தொடங்கிருச்சு. தேனிக்கள் மாறி இந்த குளவிகளும் கூட்டமா தான் வாழும்..! ஆனா கதண்டு கடிய விட ஹார்னெட் கடி ரொம்ப வலிய தரும்..!

சோமு: அண்ணே இப்ப ரீசன்ட் டைம்ல கூட கதண்டு கடிச்சு ரொம்ப பேரு இறக்கிறதா நியூஸ் வந்துச்சுல அது எப்படிண்ணே..!

இராமு: ஆமாடா சோமு இந்த கதண்டுகளும், பெரிய குளவியான ஹார்னெட்டும் மனுசன கடிக்கும் போது அந்தக் குளவிகள் கிட்ட இருக்கிற ரசாயனங்கள் நம்ம உடம்புக்குள்ள போகும்போது, ஒரு சில நேரம் ஒவ்வாமை காரணமா மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறப்பு வரக்கூட போகக்கூடும். முக்கியமா இந்த குளவி கொட்டும் போது அதோட கொடுக்கு உடையறது இல்ல.

அதனால, பல தடவ மனுஷங்கள அதனால கொட்ட முடியுது. அதனால தான் இந்த குளவிகள் கிட்ட நாம ஜாக்கிரதையா இருக்கணும்..! சாதாரண குளவிகள விட ஹார்னெட் குளவியோட கடி ரெண்டு மடங்கு அதிக வலியையும், எரிச்சலையும் தரக்கூடியது. அதேபோல கடிச்ச இடத்துல செவந்து போயிடும். 

இதையும் படியுங்கள்:
குளவி வீட்டில் கூடு கட்டினால், குழந்தை பேறு உண்டாகுமா?
Wasp vs Hornet

சோமு: அப்போ இந்த மாதிரி குளவிகள் கிட்ட இருந்து நம்மளை எப்படிண்ணே  பாதுகாத்துக்கிறது..?

இராமு: இந்தக் குளவிகளோட கூட்ட பாக்கும்போது நாம ஒதுங்கி போயிரனும். டிஸ்டர்ப் பண்ண கூடாது. நாமலே கூட்ட அகற்ற நினைக்கக் கூடாது. வீட்ல உள்ள குழந்தைகள அந்த கூட்டு பக்கத்துல விளையாட வைக்க கூடாது. கைதேர்ந்த ஆள் இல்லாட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கணும்.

சோமு: அண்ணே கடைசியா ஒரு கேள்வி.. இந்த குளவி கடிச்சா கண்டிப்பா நம்ம செத்துருவோமா..?

இராமு: டேய் தம்பி.. இந்த மாதிரி குளவிகள் கடிச்சா நாமெல்லாம் சாக மாட்டோம்.. முறையான விழிப்புணர்வும், எச்சரிக்கையும் இருந்தா கடிச்ச உடனே நாம அருகில் இருக்கிற மருத்துவமனைக்கு உடனே போயிரணும். நம்மளே ஏதாவது சுண்ணாம்பு தடவுறது போன்ற எந்த ஒரு  வைத்தியமும் பாக்கவே கூடாது. கடிச்ச உடனே அந்த இடத்தை குளிர்ந்த நீரால கழுவிட்டு உடனே ஹாஸ்பிடல் போயிடனும் அதான் பெஸ்ட்..!

இதையும் படியுங்கள்:
உனக்கு நான்; எனக்கு நீ... கண்ணே!
Wasp vs Hornet

அதுக்கப்புறம் நம்மளுக்கு ஒண்ணுமே ஆகாது..! இப்பயாவது உனக்கு புரிஞ்சுச்சா இந்த கதண்டுகள்ன்னா என்ன ஹார்னெட்ன்னா என்னன்னு..! முக்கியமா இந்த ரெண்டு குழவிகள் கிட்டயும் நாம ரொம்ப பாதுகாப்பாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்கணும்..! 

சோமு: புரிஞ்சிச்சுண்ணே, இதுக்கப்புறம் இந்தக் கூட்ட பாத்தா கல்ல எடுத்து எரிய மாட்டேன்..!

இராமு: ம்.. சரிடா.. பாத்தியா பேசிகிட்டே வீட்டுக்கு வந்தாச்சு..! இந்தா சோமு இந்த கட்டப்பைய அம்மாகிட்ட போய் கொடு..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com