
வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள் செடிக்கு தேவையான உரம் மிகவும் விலை மதிப்புள்ளது என்று நினைக்கின்றனர்.
அதற்காக அவர்கள் கடைகளில் அதிக விலை கொடுத்து உரங்களை வாங்கி செடிகளுக்கு போடுகின்றனர். ஆனால் உண்மையில் செடிகளுக்கான உரத்தை அதிக செலவு செய்து வாங்கி போடுவதை விட வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து செடிகளுக்கு உரத்தை போடலாம். அது என்னவென்று பார்ப்போம்.
வீட்டில் இருக்கும் செடிகளுக்கான உரங்கள்.
முட்டை ஓடுகள்
வீட்டில் முட்டைசாப்பிடுபவர்கள் அந்த ஓட்டை சேகரித்து வைத்து அதை செடிகளின் பள்ளங்களில் பொடி செய்து போட்டால் செடிகள் நன்கு செழிப்பாக வளரும்.
மாத்திரைகள்
நிறைய வீட்டில் மாத்திரைகள் வாங்கி வைத்திருப்பார்கள். நிறைய மாத்திரைகளில் ஒரு சில மாத்திரைகள் பயன்படுத்தும் தேதி முடிந்திருக்கும். அதை தூக்கி போடாமல் அதை பொடி செய்து செடிகளின் அடியில் போட்டால் செடிகள் நண்டு செழிப்பாக வளரும். ஏனெனில் அந்த மாத்திரைகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் செடிகளுக்கு ஆரோக்கியத்தை தந்து செழிப்புடன் வளர செய்யும்.
டீ இலைகள்
தினமும் காலை மற்றும் மாலையில் தவறாமல் வீட்டில் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். அவ்வாறு வீட்டில் டீ போட்டால் அதன் கலைகளை தூக்கி போட்டு விடுவோம் ஆனால் அதை தூக்கி போடாமல் அதனை செடிகளுக்கு போட்டால், செடிகள் நன்கு வளரும்.
முக்கியமாக அவ்வாறு தூக்கிப் போடும்போது அந்த இலைகளை ஆறவைத்து சூடாக இல்லாமல் ஆறிய பின் செடிகளில் பள்ளங்களில் போடவேண்டும். இதனால் செடிகள் நன்கு வளர்ந்து பூ பூக்கும்.
காய்கறிகளின் தோல்கள்
அனைத்து வீடுகளிலும் சமையலில் தினமும் காய்கறிகளை பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்திய காய்கறிகளின் தோல்களை தூக்கி போடாமல் அவற்றை செடிகளின் அடியில் போட்டால் அந்த தோலில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சி செடிகள் ஆரோக்கியமாக வளரும். இந்த காய்கறிகளின் தோல்கள் செடிகளுக்கு சிறந்த ஒரு வகையான கரிம உரமாகும்.
அரிசி தண்ணீர்
தினமும் சாதம் வடிக்க அரிசி கழுவிய தண்ணீரையும், காய்கறி கழுவிய நீர், வடித்த கஞ்சியையும் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் நன்கு செழித்து வளரும். இட்லி மாவு காலியான பாத்திரத்தில் உள்ள மாவுத் தண்ணீர், புளித்த மோரில் நிறைய தண்ணீர் கலந்தும் ஊற்றலாம்.
ரோஜா செடிக்கு
மஞ்சள் + அரிசித்தண்ணீர்
ஒரு லிட்டர் தண்ணீரில் ரெண்டு டேபிள் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் இந்த தண்ணீருடன் சாதம் வடித்த தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அந்த தண்ணீரை வாரம் ஒருமுறை 200 மில்லி, செடிக்கு கொடுக்கலாம். இந்த உரம் செடிக்கும் கொடுக்கும் தினத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதை பயன்படுத்தும்போது ரோஜா பூ செடியில் பூத்து கொத்தாக பூக்கத் தொடங்கும்.
வெந்தய பொடி + டீ தூள்
வெந்தயத்தை நைசாக அரைத்து அதனுடன் 1 பாக்கெட் டீ தூள் சேர்த்து கலக்கி மண்ணை நன்கு கிளறி 1 டேபிள் ஸ்பூன் பொடியை சேர்த்து மண்ணை கிளறிய இடத்தில் போட்டு விட்டு, வழக்கம் போல தண்ணீர் ஊற்றவேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்தால் செடி பூத்துக் குலுங்கும்.
இன்ஸ்டன்ட் உரம்
ஒரு பாத்திரத்தில் 4 வெங்காயத் தோல், 3 முட்டைத் தோல்கள், 3/4 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டவும். இதில் அரிசி கழவிய நீர், டீ போட்ட சக்கைதூள், தண்ணீர கலந்து இதனை வாரம் ஒருமுறை செடிகளுக்கு ஊற்றினால் பூக்கள் பூத்துக் குலுங்கும்.
மல்லிகை பூ பூக்க
புளித்த தயிருடன் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் மோராக அரைத்து பாட்டிலில் ஊற்றி, தேங்காய் துருவைலை மிக்ஸியில் அரைத்து மோர் ஊற்றிய பாட்டிலில் ஊற்றி சூரிய ஒளிபடாத இடத்தில் ஒரு வாரம் வைத்து பின், ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி 5 பங்கு நீர் ஊற்றி கலந்து செடி வேர்ப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஸ்ப்ரே செய்தால் மல்லிகை செடி துளிர்விட்டு பூக்கள் கொத்தாக பூக்கும்.