அரச மரம் வழங்கும் மருத்துவ நன்மைகளை அறிவோம்!

அரச மரம்
அரச மரம்https://www.ulavaranand.in

‘மரங்களின் அரசன்’ அரச மரம். இதனை இந்துக்களும், பெளத்தவர்களும் புனிதமான மரமாக வணங்கி வருகின்றனர். இந்து கடவுள்கள் பலர் இந்த மரத்தடியில்தான் அருள்பாலித்து வருகிறார்கள். பல ஆலயங்களின் தல விருட்சம் அரச மரம்தான். புத்தர் ஞானம் பெற்றது கூட ஓர் அரச மரத்தடியில்தான்.

அரச மரத்தை வலம் வந்தால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக நம்பப்படுகிறது. அரசு மற்றும் வேம்பு மரத்தின் இலைகளின் நுனி நிலத்தை நோக்கியே இருக்கும். காரணம் அந்த மரங்களிலிருந்து வெளிவரும் ஆக்ஸிஜனில் சக்தி வாய்ந்த ஓசோன் கலந்திருக்கும். இந்த காற்று கருப்பையில் உள்ள குறைகளை நீக்க வல்லது. இதனால்தான் அரச மரத்தை சுற்றினால் மலட்டுத்தன்மை நீங்கும் என்ற நம்பிக்கை நாடெங்கிலும் உள்ளது.

நன்றாக வளர்ந்த அரச மரம், தினமும் 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி, 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மேலும், இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டுகிறதாம். அரச மரத்தை சுற்றி வருவதற்கும் இதுதான் காரணம்.

அரச மரத்திலிருந்து வெளிப்படும் காற்றில், பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அரச மரத்தை சுற்றினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மனிதன் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனை அரச மரம் அதிகம் வழங்குகிறது. அரச மரம் இலை, பட்டை, வேர் என அனைத்தும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளில் முதன்மை மருந்தாகப் பயன்படுகிறது.

இது வறட்சியை தாங்கி வளரும் மரம். 500 மி.மீ. மழைக்கும் குறைவான இடங்களில் கூட வளரும் மனித இனத்திற்கு நன்மை தரும் மரம். பறவைகளுக்கு புகலிடமாக இருக்கும் மரம். குளிர் பிரதேசங்களில் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வளரும் மரம். கோடைக் காலங்களின் ஆரம்பத்தில் இலைகளை உதிர்த்து, பின்னர் துளிர்க்கும் மரம். அரச மரம் நல்ல நிழல் தருவதுடன் காற்று மாசுபாடுகளையும் தவிர்க்க உதவுகிறது.

‘அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்’ என்று சொல்வார்கள். இதற்குக் காரணம், சூலகத்தில் உண்டான நோய்களை நீக்குவதுடன், இந்த அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளையும் போக்கும் தன்மையுடையது என்பதால்தான்.

அரச மரத்தின் பட்டை, வேர், விதை போன்றவற்றை பாலில் கொதிக்கவைத்து, ஆறிய பிறகு தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே தாது விருத்தியடையும் என்பார்கள். இந்த மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, மாதவிலக்கு நேரத்திலும் கஷாயம் போல செய்து குடித்தால், மாதவிலக்கில் ஏற்படும் பிரச்னைகள் தீரும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னையும் சரியாகும்.

இந்த மரத்தின் இலையை அரைத்து வெறும் வயிற்றில் ஒரு உருண்டை சாப்பிட்டு வந்தாலும் குழந்தைப் பேறு உண்டாகும் என்பார்கள். ஆனால், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, மருந்தாக இதனைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த மர இலைகளில் கூடுதலாக புரோட்டீன் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்கிறதாம். வட இந்தியாவில் இதன் இலைகள் பட்டுப்பூச்சிகளுக்கு உணவாகவே பயன்படுகின்றன.

இந்த மரத்தின் குச்சிகளை, வெட்டி மருந்தாக சாப்பிடும்போது இரத்தத்திலுள்ள பித்தம் தீருகிறது. இந்த மரத்திலிருந்து வரும் பால், காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு மருந்தாகிறது. அரச மரத்தின் இலையை எரித்து, தேங்காய் எண்ணெய்யில் குழைத்து உடலில் தடவினால், தீப்புண் தழும்புகளும் மறைந்துவிடும். உடலில் தோன்றும் கட்டிகளையும் குணமாக்கும்.

இதையும் படியுங்கள்:
ஜப்பானிய சமுதாயத்தில் மோசமானவைகளாகக் கருதப்படும் 11 விஷயங்கள்!
அரச மரம்

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இந்த இலைகளின் சாறு குடித்தாலே போதும். மஞ்சள் காமாலை நோய் அறிகுறி தென்பட்டாலும், இந்த இலைச்சாறுடன், பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் 3 முறை குடித்தாலே பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

இம்மரத்தின் குச்சிகளிலிருந்து வெளிவரும் புகையானது, சுவாசிப்பவர்களின் சளி, மூச்சுத்திணறல் பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கது. அதிக களைப்பு இருந்தாலும் அதை நீக்கி, உடல் தசைகளை வலுவேற்றக் கூடியது.

இம்மர விதைகளை பொடியாக்கி, சிறிதளவு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். இந்த மரத்தின் பட்டையை நீரில் சுடவைத்து, வாய் கொப்பளித்து வந்தால், வாய்ப்புண்கள் ஆறிவிடும். அதேபோல, இந்தப் பட்டையை தூளாக்கி, நீரில் கொதிக்க குடித்து வந்தால் சரும வியாதிகளும் குணமடையும். இவ்வளவு நன்மைகளையும் தருவதால்தான், மரங்களின் அரசனாக இந்த அரச மரம் இன்றுவரை திகழ்ந்து கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com