இயற்கையின் அற்புதம் இந்த வண்டுகள்! 

Dung Beetles
Dung Beetles
Published on

நாம் அன்றாடம் காணும் சாதாரண பூச்சி வகைகளில் ஒன்றுதான் சாண வண்டு. இவை உடலளவில் சிறியதாக இருந்தாலும், கடின உழைப்பாளிகள். இவை இயற்கைக்கு மிக முக்கியமான பணியைச் செய்கின்றன. இதன் காரணமாகவே இவற்றை சுற்றுச்சூழலின் பொறியாளர்கள் என்கின்றனர். இந்தப் பதிவில் சாண வண்டுகள் பற்றிய சுவாரசிய தகவல்களைத் தெரிந்து கொள்வோம். 

சாண வண்டுகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றின் உடல் தலை, மார்பு வயிறு என மூன்று பகுதிகளாக இருக்கும். தலையில் கண்கள் மற்றும் உணர் கொம்புகள் இருக்கும். மார்பு பகுதியில் பறக்கும் தன்மை கொண்ட இறகுகளும், ஆறு கால்களும் உள்ளன. வயிறு உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. இவற்றின் முன் பகுதி மண்வெட்டி போன்ற அமைப்புடன் காணப்படும். இது சாணத்தை உருட்ட உதவுகிறது. இவற்றின் முன்னங்கால்கள் குட்டையாகவும், பின்னங்கால்கள் நீளமாகவும் காணப்படும். மேலும், இவை கருப்பு, பழுப்பு என பல வண்ணங்களில் காணப்படும். 

சாண வண்டுகள் பொதுவாக இலைத்தழைகளை உண்ணும் விலங்குகளின் சாணத்தை விரும்பி உண்ணும். இவை சாணத்தை ஒரு பந்தாக உருட்டி, தனது குகைக்கு கொண்டு சென்று அதில் முட்டையிடும். முட்டைகள் பொறிந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் இந்த சாணத்தை உண்டு அவை வளரும். 

சாண வண்டுகளின் முக்கியத்துவம்: 

சாணம் வண்டுகள் இயற்கைக்கு மிக முக்கியமான பணியை செய்கின்றன. இவை சாணத்தை மண்ணுக்குள் புதைப்பதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. சாணத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மண்ணுக்கு கிடைப்பதால் பயிர்கள் நன்றாக வளர உதவுகிறது. 

சாணம் வெளியில் கிடக்கும்போது பல வகையான பாக்டீரியாக்கள் பூச்சிகள் அதில் உற்பத்தியாகும். இது பல வகையான தொற்று நோய்களைப் பரப்பும். சாண வண்டுகள் சாணத்தை மண்ணுக்குள் புதைப்பதன் மூலம் இந்த பிரச்சனை தவிர்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
பூச்சி மேலாண்மைக்கு உதவும் முத்தான மூன்று கரைசல்கள்!
Dung Beetles

சாணத்தில் பல வகையான பூச்சிகள் உற்பத்தியாகும். எனவே, சாண வண்டுகள் விரைவாக சாணத்தை அகற்றுவதால், இந்தப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இந்த வண்டுகள் இல்லை என்றால் சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசுபடும். இதனால், பலவகையான உயிரினங்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே, சாண வண்டுகள் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

சாண வண்டுகள் இயற்கையின் தூய்மைப் பணியாளர்கள். இவை இல்லையென்றால் சுற்றுப்புற மாசுபாட்டால் பல பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே, மற்ற உயிரினங்கள் போலவே சாண வண்டுகளையும் நாம் பாதுகாப்பது மிகவும் முக்கியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com