பறக்க முடியாத பறவைகளை காக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

(ஏப்ரல் 25, உலக பென்குயின் தினம்)
Penguins
Penguinshttps://ta.quora.com
Published on

லக பென்குயின் தினம் என்பது பறக்க முடியாத பறவைகளின் மகத்துவத்தை கொண்டாடுவது மற்றும் அவை காடுகளில் எதிர்கொள்ளும் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு வழியாகும். உலக பென்குயின் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று கொண்டாடப்படுகிறது.

உலக பென்குயின் தினம் ராஸ் தீவில் உள்ள McMurdo Station என்ற அமெரிக்க ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில்தான் அடேலி பென்குயின் இடம் பெயர்வதை இந்த நிலைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இடப்பெயர்வைக் கொண்டாடவும், காட்டு பென்குயின்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக பென்குயின் தினத்தை உருவாக்க முடிவு செய்தனர். காடுகளில் வாழும் 18 பென்குயின் இனங்களில் 10 இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.

பென்குயின்கள் தங்களின் உணவுப் பொருட்களுக்காக கடலை நம்பி, தங்கள் வாழ்நாளில் 75 சதவிகிதம் வரை தண்ணீரில் கழிக்கின்றன. மாசுபாடு மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் ஆகியவை பென்குயின்களை தொடர்ந்து அச்சுறுத்துகின்றன. பென்குயின் எண்ணிக்கை குறைவது மற்ற சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதிக்கிறது. புவி வெப்பமடைதல் காரணமாக அண்டார்டிக்கில் உள்ள பெங்குவின்கள் அவற்றின் சுற்றுச்சூழலைக் குறைத்து வருகின்றன. கடல் பனி சுருங்கி வருகிறது. இது உணவுக்கான அணுகல், குஞ்சு பொரிக்கும் நேரம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தின் அளவை பாதிக்கும்.

பென்குயின்களை காக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

1. ஒவ்வொரு ஆண்டும் உலக பெண்குயின் தினத்தை கொண்டாடுவது அவற்றின் வாழ்வை பாதுகாப்பதற்கான செயல்பாடுகள் ஆகும்.

2. நமது பூமியின் நலனுக்காகவும், வருங்கால சந்ததியினரின் நலனுக்காகவும் பென்குயின் மற்றும் பிற காட்டு கடல் உயிரினங்களை நாம் பாதுகாக்க வேண்டும். ஒரு பென்குயின் அல்லது கடல் உயிரினத் தொண்டு நிறுவனத்துடன் தன்னார்வத் தொண்டு செய்வது விலங்குகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரு சிறந்த வழியாகும்.

3. இணையத்தில் பென்குயின் இனத்தின் அவல நிலை பற்றிய பதிவுகளை போட்டு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

4. கடல் வாழ் உயிரினங்களை காப்பதற்கான முயற்சிகளை மனிதர்கள் எடுக்க வேண்டும். பள்ளியில் மாணவர்களுக்கு பென்குயின் பற்றிய பல அற்புதமான தகவல்களை கற்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் உடலைப் பற்றி உங்களுக்குகே தெரியாத 20 உண்மைகள்!
Penguins

5. கடலை நம்பி வாழும் இந்தப் பறக்காத பறவைகளை தொல்லை படுத்தாமல் அவற்றுக்கு தீங்கு விளைவிக்காமல் மனிதர்கள் இருக்க வேண்டும். கடலில் கொட்டப்படும் குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மருத்துவக் கழிவுகள் எல்லாம் பென்குயின்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன.

6. சிலர் பென்குவின் முட்டைகளை திருடுவதும் அபகரிப்பதுமான சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

7. அதிகப்படியான மீன் பிடித்தலை குறைக்கலாம். கடலை மாசுபடுத்துவதை நிறுத்தலாம்.

அழகான அற்புதமான இந்தப் பறவைகள் கடவுள் படைத்த இந்த உலகில் சுதந்திரமாக வாழ மனிதர்கள் வழி ஏற்படுத்தித் தர வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com