உங்கள் உடலைப் பற்றி உங்களுக்குகே தெரியாத 20 உண்மைகள்!

Human body with Heart
Human body with Heart
Published on

1. ஏழு முதல் பத்து வருடங்களில் உங்கள் உடலிலுள்ள மொத்த செல்களும் முழுமையாக மாற்றப்பட்டு விடும். இந்த மாற்றத்தை உங்களால் காண முடியாது, உணரவும் முடியாது.

2. நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளுள் ஒன்று நமது கைகளுக்குள் அடங்கக்கூடிய இதயம். ஒரு மனிதனை 500 அடி உயரம் தூக்குவதற்கு எவ்வளவு சக்தி செலவழியுமோ, அவ்வளவு வேலையை அது ஒவ்வொரு நாளும் செய்கிறது.

3. நமது மூளை 75 சதவீதம் நீரால் ஆனது. ஒவ்வொரு நிமிடமும் மூளைக்கு 750 மில்லி லிட்டர் இரத்தம் பாய்ச்சப்படுகிறது. இது உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தில் சுமார் 20 சதவீதம்.

4. ஒருவர் உடலிலிருந்து மண்ணீரலை எடுத்து விட்டாலும், கல்லீரலில் 75 சதவீதத்தையும், சிறு குடல் மற்றும் பெருங்குடலின் 80 சதவீதத்தை எடுத்து விட்டாலும் ஒரு மனிதனால் உயிர் வாழ முடியும். அதேபோல் ஒரு சிறுநீரகம், ஒரு நுரையீரல் இருந்தாலும் கூட ஒரு மனிதனால் உயிர் வாழ முடியும்.

5. நமது உடல் எடை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் உள்ள கொழுப்பு செல்கள் அழிவதில்லை. மாறாக அதன் வடிவத்தை மட்டுமே அது மாற்றிக் கொள்கிறது.

6. ஒவ்வொரு மனிதனும் ஒரு நடமாடும் உரக்கிடங்குதான். ஒரு வருடத்திற்கு ஒரு மனிதன் சராசரியாக 50 கிலோ மலத்தையும், 500 லிட்டர் சிறுநீரையும் வெளியேற்றுகிறான். இதிலிருந்து 4.5 கிலோ ஹைட்ரஜன், 0.55 கிலோ பாஸ்பரஸ், 1.28 கிலோ பொட்டாசியம் சத்துக்கள் கிடைக்கும்.

7. மன அழுத்தம் கொண்டவர்களுக்கு சராசரி மனிதர்களை விட 3 முதல் 4 முறை அதிகம் கனவுகள் வரும்.

8. பெண்களைக் காட்டிலும் ஆண்களால் மிகச் சிறிய எழுத்துக்களைக் கூட படிக்க முடியும். ஆண்களைக் காட்டிலும் பெண்களால் சிறிய ஒலிகளைக் கூட கூர்ந்து கேட்க முடியும்.

9. பிரியமானவற்றைக் காணும் பொழுது ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவீதம் அதிகமாக விரிவடைகின்றன.

10. நமக்கு நாமே ஏன் கிச்சுகிச்சு முட்டிக்கொள்ள முடியவில்லை? சருமத்தில் இருக்கும் நரம்பு முனைகள் தூண்டப்பெற்று மத்திய நரம்பு மண்டலத்தில் கிளர்ச்சி ஏற்படுகிறது. அதனால் நமக்குக் குறுகுறுப்பும் சிரிப்பும் உண்டாகிறது. நமக்கு நாமே கிச்சுகிச்சு மூட்டிக்கொள்ளும்போது அந்தக் குறுகுறுப்பு உண்டாவதில்லை.

11. எப்படி தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே விழித்துக் கொள்கிறோம்? மூளையில் இருக்கும் ஹைப்போதாலமஸ், அலாரம் போலச் செயல்படக்கூடிய ரசாயனப் பொருட்களையும், ஹார்மோன்களையும் வெளியிடுகிறது. அவை வழக்கமான நேரத்தில் நம்மை எழுப்பி விடுகின்றன.

12. பிறந்த 20 நாட்களிலிருந்து 2 வயது வரை அடிக்கடியும், 2 வயதிலிருந்து 5 வயது வரை அவ்வப்போதும், 5 வயதிலிருந்து 10 வயது வரை எப்போதாவது என குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். காரணம் வைரஸ் தாக்குதல்.

13. ஏதாவது ஒரு நிறத்தை சொல்லுங்கள் என்று கேட்டால், ஐந்து பேரில் மூன்று பேர் ‘சிவப்பு’ என்றே சொல்கிறார்கள்.

14. சராசரி மனிதனால் 150 நபர்களை மட்டுமே நன்றாக நினைவில் வைத்திருக்க முடியும்.

15. ஒரு மணி நேரத்தில் ஒரு மனிதனால் அதிகபட்சம் 21 கி.மீ. தூரம்தான் ஓட முடியும்.

இதையும் படியுங்கள்:
நகங்கள் உணர்த்தும் நோயின் அறிகுறிகளும் தீர்வுகளும்!
Human body with Heart

16. பொதுவாக, அனைவருக்கும் அடிக்கடி சருமம் உரியும். வாழ்நாள் முழுவதும் உடம்பிலிருந்து மொத்தமாக உரிந்து விழும் சருமத்தின் எடை கிட்டத்தட்ட 18 கிலோ.

17. மனித உடலில் வலியை உணர்வதில் மிகவும் சென்சிடிவான இரு பகுதிகள் விரல் நுனிகளும், நெற்றியும்தான்.

18. நமது மூளை அதிகமாக வேலை வாங்கும் உடல் பகுதி நம் கட்டை விரல்தான்.

19. ஒரு தும்மல் வரப் பார்க்கிறது. அதே நேரத்தில் எதிரே வரும் பஸ்ஸின் ஹெட்லைட் கண்களில் பளீரிடுகிறது. உடனே தும்மல் தடைப்படுகிறது. காரணம் பிரகாசமான ஒளியை பார்த்தால் தும்மல் வராது என்பதால்தான். இனிமேல் எதிர்பாராத விதமாக தும்மல் வந்து அதை தடுக்க நினைத்தால் உடனே ஏதாவது பிரகாசமான விளக்கை உற்றுப் பார்த்து விட்டுக் கண்களை மூடிக் கொள்ளுங்கள். தும்மல் போய்விடும்.

20. பெண்களின் முக அமைப்பை விட ஆண்களின் முக அமைப்பு வித்தியாசமானது என நாம் அறிவோம். இப்படி ஆண்களின் முக அமைப்பு வித்தியாசமாக அமைந்திருப்பதன் காரணம் எதிரியோடு சண்டையிடும் போது எதிர்பாராமல் வரும் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் விதமாக இயற்கையாகவே ஆண்களின் முகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com