நமது பூமியானது சூரியன் அளவுக்கு பெரியதாக மாறினால் என்ன ஆகும் என எப்போதாவது யோசித்ததுண்டா? சரி வாருங்கள், நமது கற்பனை குதிரையை கொஞ்சம் ஓட விட்டு அத்தகைய மாற்றம் நிகழ்ந்தால் நடக்கும் விளைவுகளைக் கொஞ்சம் ஆராய்வோம்.
முதலில் நாம் கவனிக்கும் முதல் மாற்றம் என்னவென்றால், வானம் பார்ப்பதற்கு முற்றிலும் புதுமையாக இருக்கும். பூமி பெரிதானால் சந்திரனின் அளவு மேலும் சிறிதாகத் தெரியும். இதன் காரணமாக வானத்தில் சந்திரன் ஒரு புள்ளியாக மட்டுமே நம் கண்களுக்குப் புலப்படும். அதேபோல ஒரு காலத்தில் சூரியக் குடும்பத்தில் பூமி ஒரு அங்கமாக இருந்தது போக, நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான நட்சத்திரங்களில் ஒன்றாக மட்டுமே சூரியன் இருக்கும்.
பூமியின் அளவு அதிகரித்தால் அதன் ஈர்ப்பு விசையில் பெரிய மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக பூமியில் நாம் செயல்படுவது முற்றிலும் கடினமாக இருக்கலாம். கொஞ்ச தூரம் பயணிக்க வேண்டுமென்றாலும், அதிக ஆற்றலும் முயற்சியும் தேவைப்படும். மேலும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள், தரையில் இருக்காமல் அந்தரத்தில் அங்கும் இங்குமாகப் பறந்து கொண்டிருக்கும்.
தீவிரமான ஈர்ப்பு விசை காரணமாக வளிமண்டலம் மேலும் அடர்த்தியானதாக மாறும். ஆதனால் அதிக காற்றழுத்தம் ஏற்பட்டு, பூமியில் வாழும் உயிரினங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். மேலும் ஆக்சிஜன் அளவு குறைந்து நாம் சுவாசிப்பதற்கு காற்று பற்றாக்குறை ஏற்படும். வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் அதிகப்படியான வெப்பம் பூமியில் சிக்க வைக்கப்பட்டு, உலகத்தின் வெப்பநிலை உயரும்.
சூரியன் அளவு பெரிய பூமியில் பெருங்கடல்கள் வித்தியாசமாக செயல்படும். அதிகப்படியான புவியீர்ப்பு விசை காரணமாக, பெரிய அலைகள் ஏற்பட்டு, பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படலாம். மேலும் கிரகத்தின் சுழற்சி வேகம் கணிசமாக மெதுவாகும். பகல் மற்றும் இரவுகள் மிக நீளமாகி, பல மாதங்களுக்கு நீடிக்கும்.
காலநிலை மாற்றம் மற்றும் மோசமான வளிமண்டல நிலைமைகள் காரணமாக பூமியில் வாழ்வது கடினமானதாக மாறலாம். இதனால் சுற்றுச்சூழல் அமைப்புகள் தீவிர மாற்றங்களைச் சந்தித்து பல இனங்கள் அழிவதற்கும், ஒரு சில புதிய உயிரினங்கள் உருவாவதற்கும் வாய்ப்புள்ளன.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் சூரியன் அளவுக்கு பூமி விரிவடைந்தால், உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக நிச்சயம் பூமி இருக்காது.