உலகில் உள்ள குப்பைகளை எரிமலைகளுக்குள் கொட்டினால் என்ன ஆகும் தெரியுமா? 

Dumped Our Trash into Volcanoes
What If We Dumped Our Trash into Volcanoes?
Published on

உலகத்தில் நாளுக்கு நாள் கழிவுகளின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதால், எதிர்காலத்தில் இதனால் எதுபோன்ற பாதிப்புகள் வரும் என எப்போதாவது யோசித்ததுண்டா? நிலப்பரப்புகளில் குப்பையை நிரப்புவது மற்றும் மறுசுழற்சி செய்வது சுற்றுச்சூழலை பெரிதளவில் பாதிக்கிறது என்பதால், அவற்றுக்கான மாற்று தீர்வுகளை நாம் கட்டாயம் கண்டறிய வேண்டும். 

ஆனால் எனது ஆர்வத்தை தூண்டிய ஒரு கற்பனையான யோசனை என்னவென்றால், நாம் ஏன் உலகில் உள்ள குப்பைகளை நெருப்புக் குழம்பு நிரம்பிய எரிமலைகளுக்குள் கொட்டக்கூடாது? என்பதுதான். நினைத்துப் பார்ப்பதற்கு இது சாத்தியமில்லாதது போல தோன்றினாலும், ஒருவேளை அப்படி செய்தால் எதுபோன்ற விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதை இப்பதிவில் பார்க்கலாம். 

முதலில் எரிமலைகள், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆற்றலைக் கொண்ட இயற்கையின் உருவமாகும். அவை வெடிப்புகளின்போது நீராவி, வாயுக்கள் மற்றும் எரிமலைக் குழம்புகளை வெளியிடுகின்றன. அதன் வெப்பம் சுமார் 1000 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். இந்த அதீத வெப்பம் நமது கழிவுகளை திறம்பட எரித்து அதன் அளவைக் குறைத்து முற்றிலுமாக காணாமல் போகச் செய்துவிடும். 

மேலும் எரிமலைகளில் கழிவுகளைக் கொட்டுவதால் நிலப்பரப்பில் உள்ள கழிவுகளின் அளவு குறையும். இதன் மூலமாக சுற்றுச்சூழல் பாதிப்புகள் கணிசமாகக் குறையும். எரிமலைக்குள் இருக்கும் அதீத வெப்பம், குப்பைகளில் உள்ள கரிமா பொருட்களை உடைத்து மீத்தேன் வாயு உருவாக்கத்தைக் குறைக்கும். 

இருப்பினும் இந்த யோசனையை எச்சரிக்கையுடன் அணுக வேண்டியது அவசியம். மேலும் இந்த செயல்முறையில் உள்ள குறைபாடுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எரிமலைகள் பூமியில் செயல்பாட்டில் உள்ள இயற்கையின் அம்சங்களாகும். அவற்றின் நடத்தையை நம்மால் கணிக்க முடியாது. எரிமலையில் அதிக அளவு கழிவுகளைக் கொட்டுவது அதன் சமநிலையை சீர்குலைத்து எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். 

உதாரணத்திற்கு ஒரு எரிமலையில் அதிகமாகக் கழிவுகளை கொட்டும்போது, அதிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியேறுதல் அல்லது எரிமலை வெடிப்பு சம்பவங்களுக்கு  வழிவகுத்து ஆபத்தானதாக மாறலாம். மேலும், எரிமலைகளுக்கு கழிவுகளை கொண்டு செல்வது சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்காகவே அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய இயந்திரங்கள், மனித செயல்பாடு போன்றவை தேவை.  இந்த செயல்முறையே நமது சுற்றுச்சூழலை பெரிதளவில் பாதிக்கும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
சருமத்தை பாதுகாக்கும் முருங்கைக்காய்! 
Dumped Our Trash into Volcanoes

எனவே, இப்படி செய்வது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக மாறிவிடலாம் என்பதால், இதை ஒரு நல்ல யோசனையாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. மேலோட்டமாக சிந்தித்துப் பார்த்தால் எரிமலைகளுக்குள் குப்பைகளைக் கொட்டுவது ஒரு நல்ல யோசனை போல தோன்றினாலும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவென்று நம்மால் கணிக்க முடியாது. ஒருவேளை நாம் இப்படி செய்து எரிமலை வெடிக்க நேர்ந்தால், குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகளை விட, பெரிய பாதிப்பை நாம் எதிர்கொள்ள நேரிடும். 

எனவே, இப்படியெல்லாம் வித்தியாசமாக யோசிக்காமல், மறுசுழற்சி, பயன்பாட்டை குறைத்தல், தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தல் போன்ற நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளில் நாம் கவனம் செலுத்துவது முக்கியமாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com