இன்றைய காலத்தில் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும் நிலையில், வணிகங்கள் அதை மாற்றுவதற்கான சில முயற்சிகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே தொழில் துறையில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் Green Marketing எனப்படும் பசுமை சந்தைப்படுத்துதல். இது பெருமளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதாக சொல்லப்படுகிறது.
Green Marketing என்றால் என்ன?
பசுமை சந்தைப்படுத்துதல் என்பது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தயாரிப்புகள், சேவைகள், மற்றும் பிராண்டுகளை ஊக்குவிக்கும் நடைமுறையாகும். கால காலமாக பின்பற்றப்பட்டு வரும் மார்க்கெட்டிங் முறையில் பல்வேறு விதமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் விதமாகவே கிரீன் மார்க்கெட்டிங் என்ற புதிய முறை கொண்டுவரப்பட்டது.
கிரீன் மார்க்கெட்டிங் யுக்திகள்:
தயாரிப்பு: சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை உருவாக்குவது அல்லது ஏற்கனவே உருவாக்கப்பட்டவற்றை சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மறு உருவாக்கம் செய்வது பசுமை சந்தைப்படுத்துதலின் முதல் யுக்தியாகும். இதன் மூலமாக ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது அதன் ஆற்றல் தேவை குறைகிறது. மேலும் உற்பத்தி செய்யப்படும் பொருள் மறுசுழற்சி செய்யக்கூடியதாகவும், மக்கும் தன்மை கொண்டதாகவும் இருந்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
பேக்கேஜிங்: கிரீன் மார்க்கெட்டிங்கில் பொருட்களை அடைத்து விநியோகம் செய்யும் பேக்கேஜிங் முக்கிய பங்கு வகிக்கிறது. பேக்கேஜிங் செய்வதற்கு மறுசுழற்சி செய்யப்படக்கூடிய அல்லது மக்கும் பொருட்களைப் பயன்படுத்த நிறுவனங்கள் முடிவு செய்யலாம். மேலும் அதிகப்படியான பேக்கேஜிங் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் தீர்வுகளைக் கொண்டு வரலாம்.
பசுமை மார்க்கெட்டிங்கின் நன்மைகள்:
ஒரு நிறுவனம் பசுமை சந்தைப்படுத்துதலை கையில் எடுக்கும் போது, போட்டியாளர்களிடமிருந்து தனித்து நின்று, சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாடிக்கையாளர்களை அவர்கள் பக்கம் ஈர்க்கலாம்.
பசுமை மார்க்கெட்டிங் சுற்றுச்சூழலில் ஒரு நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் மீது ஒரு நேர்மறையான எண்ணத்தை உருவாக்குகிறது. இது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட பொருளை வாங்க வலுவான தொடர்பை அதிகரிக்கிறது.
இதை முறையாக பின்பற்றினால் நீண்ட கால அடிப்படையில் செலவுகளை சேமிக்க முடியும். எளிதான உற்பத்தி செயல்முறை கழிவு குறைப்பு மற்றும் பழங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை சுற்றுச்சூழலுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், செலவுகளை குறைப்பதற்கும் பங்களிப்பதால், நிறுவனங்கள் இதன் மூலமாக லாபமடைகின்றன.
எனவே இந்த கிரீன் மார்க்கெட்டிங் யுத்தியால் சுற்றுச்சூழலுக்கும் நன்மை கிடைக்கிறது, அதே நேரம் இந்த முறையைக் கையில் எடுக்கும் நிறுவனங்களும், லாபத்தை அதிகரிக்கும் ஒரு வழியாகவும் அமைகிறது.