Light Pollution: ஒளி மாசுபாடும் அதன் சுற்றுச்சூழல் தாக்கங்களும்! 

Light Pollution
What is Light Pollution and Its Impacts on the Environment

ஒளி மாசுபாடு என்பது இரவு நேரத்தில் இயற்கையான இருளை சீர்குலைக்கும் அதிகப்படியான செயற்கை விளக்குகளின் பயன்பாட்டைக் குறிக்கிறது. குறிப்பாக தெரு விளக்குகள், கட்டிடங்கள் மற்றும் பிரகாசமான ஒளியை வெளியிடும் இடங்கள் போன்றவை இதில் அடங்கும். இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப்போகிறது என நீங்கள் நினைத்தாலும், ஒளி மாசுபாடு சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது. 

சுற்றுச்சூழல் அமைப்புகளில் சீர்குலைவு: தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் உட்பட பல உயிரினங்கள் அவற்றின் வாழ்க்கை சுழற்சிக்கு இயற்கை ஒளியை நம்பியுள்ளன. ஒளி மாசுபாடு இந்த இயற்கை வடிவங்களை சீர்குலைத்து பல்வேறு உயிரினங்களின் இனப்பெருக்கம், இடப்பெயர்வு உணவு மற்றும் தூக்கமுறைகளை பாதிக்கலாம். இது சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையை சீர்குலைத்து சில சந்தர்ப்பங்களில் அவற்றின் அழிவுக்கும் வழிவகுக்கின்றன. 

விலங்குகளின் மீதான தாக்கம்: பறவைகள், வவ்வால்கள் மற்றும் பூச்சிகள் போன்ற இரவு நேர விலங்குகள் ஒளி மாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றன. கட்டிடங்கள், செல்போன் டவர்கள் மற்றும் பிற கட்டமைப்புகளில் இருந்து வெளிவரும் செயற்கை ஒளிகள் அவற்றை திசைத்திருப்பி மோதல்களுக்கு வழிவகுக்கும். 

சுற்றுச்சூழல் அமைப்புகளின் மாற்றம்: ஒளி மாசுபாடு பல்வேறு உயிரினங்களுக்கு இடையே தொடர்புகளை பாதிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்புகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு பூச்சிகள் இரவு நேரத்தில் பூக்களுக்கு பதிலாக செயற்கை விளக்குகளை நோக்கி ஈர்க்கப்படுவதால், மகரந்தச் சேர்க்கை செயல்முறை சீர்குலையும். இதனால் தாவர இனப்பெருக்கம் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். 

ஆற்றல் இழப்பு: அதிகப்படியான செயற்கை விளக்குகளை பயன்படுத்துவதால் ஆற்றல் நுகர்வு மற்றும் விரயத்திற்கு வழிவகுக்கும். இது அதிக கார்பன் உமிழ்வுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், இயற்கை வளங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. 

உடல்நல பாதிப்புகள்: ஒளி மாசுபாடு மனித ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இரவில் அதிகப்படியான வெளிச்சத்தில் நாம் வெளிப்படும்போது அது இயற்கையான தூக்க முறைகளை பாதிக்கலாம். இதனால் தூக்கக் கோளாறுகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது அதிகரித்த மன அழுத்தத்திற்கு பங்களித்து ஒட்டுமொத்த நல்வாழ்வை சீர்குலைக்கும். 

இதையும் படியுங்கள்:
வீட்டு வைத்தியத்தில் தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
Light Pollution

எனவே இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க ஒளி மாசுபாட்டை நிவர்த்தி செய்ய கூடுதல் முயற்சிகள் தேவை. மேலும் அதன் தாக்கங்களைக் குறைக்கவும் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சுற்றுச்சூழலில் ஒளி மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைத்து பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com