வீட்டு வைத்தியத்தில் தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

Use of honey
Use of honeyhttps://tamil.boldsky.com

நாட்டு வைத்தியத்தில் தேனின் பங்கு மிகவும் பெரிது. வீட்டு கை வைத்தியத்திலும் தேனுக்கு பெரும் பங்கு உண்டு. அவை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

* ஒரு ஸ்பூன் துளசி சாறுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், தலைவலி, தொண்டை வலி பிரச்னைகள் வராது.

* வேப்பம்பூவை தேனில் ஊற வைத்து, தினமும் இரவு உறங்கச் செல்லமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து, உடல் பலம் பெறும்.

* குழந்தைகளுக்கு தினம் அரை ஸ்பூன் தேன் கொடுத்து வந்தால் பல், எலும்பு உறுதியாக இருக்கும்.

* உஷ்ணத்தினால் வயிற்று வலி ஏற்பட்டால், ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், வலி உடனடியாக நின்று விடும்.

* காலையிலும், மாலையிலும் பசும்பாலில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர, நரம்புகள் உறுதி பெறும்.

* இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் தீரும்.

* தேனில் சிறிது மாதுளம் பூக்களை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், தொண்டைப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

* சிறு காயங்களின் மீது தேன் தடவினால் விரைவில் ஆறிவிடும். வடு கூட ஏற்படாது.

* குழந்தைகளுக்கு தினமும் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிடக் கொடுத்தால், இரத்தம் சுத்தமாகும். தசைகள் உறுதி பெறும்.

* கரும்புச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகி வர, மலச்சிக்கல் தீரும்.

* தீக்காயங்களின் மீது தேனை தடவி வர சீக்கிரம் ஆறி விடும். எரிச்சலும் இருக்காது.

* குடல் புண், வாய்ப்புண் இவற்றுக்கு தேன் அருமருந்தாகும்.

* குழந்தை பெற்ற அன்னையர் தினமும் இரண்டு வேளை பசும்பாலில் தேன் மற்றும் 3 பூண்டு பற்கள் கலந்து பருகி வர, தாய்ப்பால் நிறைய சுரக்கும். குழந்தைக்கும் அஜீரணம், ஜலதோஷ பிரச்னைகள் வராது.

இதையும் படியுங்கள்:
தானம், தர்மம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
Use of honey

* காலையில் எழுந்ததும் கண்களை சுத்தம் செய்து விட்டு, மை தீட்டுவது போல கண்களில் தேன் தடவினால் பார்வை கூர்மை பெறும்.

* காலையில் மூன்று நான்கு ஸ்பூன் எலுமிச்சைச்சாறு, வெந்நீர் ஒரு கப், தேன் இரண்டு ஸ்பூன் கலந்து பருகி வர, இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

* வெதுவெதுப்பான பசும்பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகி வர ஜலதோஷம் தீரும். நிம்மதியான உறக்கமும் வரும்.

மாதாந்திர மளிகை பொருட்களுடன் தேனையும் வாங்கி வைத்தால் வீட்டிலேயே வைத்தியம் செய்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com