விவசாயிகளுக்கான MSP என்பது என்ன? அதன் நோக்கமும் பலனும் என்ன?

What is MSP for Farmers? What is its purpose and effect?
What is MSP for Farmers? What is its purpose and effect?USER

ற்போது மிகவும் பரபரப்பாக இருக்கும் நம் நாட்டு விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை MSP அதிகரிக்க வேண்டும் என்பதாக உள்ளது. MSP என்பது என்ன? அது விவசாயிகளுக்கு எப்படிப் பலன் தரும்? பார்ப்போம்...

விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை என்பது MSP தொடர்பான சட்டமொன்றை இயற்ற வேண்டும் என்பதுதான். MSP என்பது Minimum Support Price என்பதன் சுருக்கம். 

முக்கியமாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

MSP என்பது விவசாயப் பொருட்களை அரசு வாங்கக்கூடிய குறைந்தபட்ச விலையைக் குறிக்கிறது. இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் போராட்டம். 2021ல் விவசாயிகள் பெருமளவில் தங்கள் எதிர்ப்பைக் காட்டியபோது, MSP குறித்த சட்டப்படியான உத்தரவாதத்தை அரசு வழங்கும் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்பது இப்போதைய போராட்டத்தின் குரல்.

ஆனால், சமீபத்திய தற்காலிக பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயிகளை அன்னதாதா (உணவை அளிக்கும் வள்ளல்கள்) என்று கூறி சிறப்பித்துவிட்டு, ‘இவர்களது விளைச்சலுக்கான குறைந்தபட்ச விலை என்பது அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

MSP என்பது அரசு ஏஜென்சிகள் விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை வாங்கும் குறைந்தபட்ச விலை விகிதம். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கிறது. பொதுவாக, விளைச்சல் மிக அதிகமானால் அந்தப் பொருளின் விலை குறையும். அப்படி இல்லாமல் ஒரு அளவுக்கு மேல் அந்த விலை குறையாது என்பதற்கான உத்தரவாதத்தை MSP அளிக்கிறது.

MSP என்பது இதற்கென அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவின் (Commission for Agricultural Costs and Prices) பரிந்துரையின்படியே நிர்ணயிக்கப்படுகிறது.

விளைபொருளுக்குத் தேவையான ரசாயனப் பொருட்கள், உரங்கள், விதைகள் போன்றவற்​றின் விலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டுதான் இந்தக் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படுகிறது. விளைபொருள் வளர்ச்சிக்கும் அதன் பராமரிப்புக்கும் தேவைப்படும் விவசாயக் கூலியையும் இது கணக்கில் எடுத்துக்கொள்ளும். ஒரு ஹெக்டேருக்கு எந்த அளவுக்கு விளைவிக்க முடியும் என்பதையும் சந்தையில் இதற்கான விலை என்ன என்பதையும்கூட கணக்கில் எடுத்துக்கொண்டுதான் இந்த விலை தீர்மானிக்கப்படும். முக்கியமாக சமீப காலமாக அந்த விளைபொருளுக்கு எந்த அளவுக்கு தேவை இருக்கிறது என்பதையும் கணித்துவிட்டுதான் MSPஐ தீர்மானிப்பார்கள்.

இந்தக் குழு தனது பரிந்துரைகளை இந்தியப் பிரதமரை தலைவராகக் கொண்ட பொருளாதார விவரங்கள் தொடர்பான கேபினட் குழு (CCEA)வுக்கு அளிக்க, அந்த குழு MSPஐ தீர்மானிக்கும். இதில் விவசாயம் தொடர்பான அரசின் கொள்கையும் பிரதிபலிக்கும்.

இதையும் படியுங்கள்:
சுமைகளை சுகமாக மாற்றும் வழி தெரியுமா?
What is MSP for Farmers? What is its purpose and effect?

MSP ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும்போது விவசாயிகள் அதிக அளவில் விவசாய பொருட்களை உற்பத்தி செய்வார்கள். ஏனென்றால், குறைந்தபட்சம் தங்களுக்கான வருமானம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்துவிடும்.

இப்போதைக்கு அரசின் MSP தீர்மானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டாலும் அது சட்டபூர்வமாக்கப்படவில்லை. எனவே, அந்த விலையை விடக் குறைவான விலைக்கு அவர்கள் அடிக்கடி விற்க நேருகிறது. இதனால் நியாயமான லாபமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

அரசியல் காரணங்களும் உண்டு என்றாலும் MSP கோரிக்கையை விவசாயிகள் முன்வைப்பதில் அவர்களது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com