
பொதுவாக ஜூன் மாதத்தில் நமது பூமி தனது அச்சில் இருந்து சூரியனின் வட துருவம் நோக்கி சாயும் இதனால்தான் நமக்கு அந்த நேரத்தில் அதிக வெப்பம் நிலவுகிறது. மாறாக இதே நேரத்தில் ஆஸ்திரேலியா, சிலி, அர்ஜென்டினா போன்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவும். பூமி சாய்வு இல்லாமல் இவையெல்லாம் சாத்தியமில்லை. மற்றும் பருவ நிலை மாற்றமும் நிகழாது. ஆனால் அந்த சாய்வு அளவோடு இருக்க வேண்டும். அதன் அளவு மாறும் போதுதான் பல பிரச்னைகள் ஏற்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நமது பூமி தனது அச்சில் இருந்து ஏற்கனவே 23.5 டிகிரி சாய்ந்த நிலையில் உள்ளது. தற்போது 17 ஆண்டுகளில் பூமி 1993 - 2010 ஆண்டுகளுக்கு இடையில் 80 செ.மீ. கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் அச்சு 31.5 அங்குலங்கள் (கிட்டத்தட்ட 80 சென்டிமீட்டர்கள்) சாய்ந்துள்ளது - என நமது கிரகத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஆய்வு செய்யும் ஒரு புதிய ஆராய்ச்சி அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
பூமியின் நிலத்தடி நீரை மனிதர்கள் உறிஞ்சுவதே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், இது கிரகத்தின் சுழற்சியை மாற்றுவது மட்டுமல்லாமல் கடல் மட்ட உயர்வையும் பாதிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் அவர்கள் கூறியிருப்பதாவது: நிலத்தடி நீர் குறைவு காரணமாக, பூமியின் துருவம் சுமார் 80 செ.மீ கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது. ஆராய்ச்சி மேற்கொண்ட காலத்தில் பூமியிலிருந்து 2,150 ஜிகாடன்கள் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது. இது 850 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நீரில் நிரப்புவதற்கு சமமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பூமியிலிருந்து நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட்டதால், கடல் மட்டமும் 0.24 அங்குலம் உயர்ந்து, பூமியின் நிறை விநியோகத்தில் மாற்றம் ஏற்பட்டு அதன் சுழற்சி அச்சு ஆண்டுக்கு 4.36 செ.மீ சாய்வதற்கு வழிவகுக்கிறது. தற்போது அது 31.5 அங்குலம் சாய்ந்துள்ளது. நிலத்தடி நீரை வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளில்தான் அதிகம் உறிஞ்சப்பட்டு உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பூமியின் அச்சில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால், வானிலையில் உடனடி பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், நீண்டகால பாதிப்பு ஏற்படலாம். பூமியின் துருவ இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், பருவநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால், நீடித்த நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள் .
சீனாவின் 3 கார்ஜியஸ் அணையின் நீரோற்றம் பூமியின் சுழற்றியில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்கிறார்கள். இது பூமியின் சுழற்சி வேகத்தை 60 பில்லியன்ஸ் செகண்ட்கள் அதிகப்படுத்துவது ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
பூமியின் அச்சு அதன் நிலையில் சாய்ந்து வருவது உலகில் பருவகாலத்தை மாற்றி விடாது. ஆனால் பருவ நிலையை மாற்றிவிடலாம் என்கிறார்கள். இந்த மாற்றங்கள் பூமியின் மேற்பரப்பில் உலகெங்கும் அதிக வெப்பத்தை அதிகரிக்கும் அல்லது குளிரை அதிகரிக்கும். இந்த பருவநிலை மாற்றங்கள் நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் சிஸ்டம் மற்றும் நெட்வொர்க் போன்றவற்றின் துல்லியமான நிலைக்கு சவாலாக மாறும்.
விமானங்கள் மற்றும் கப்பல்களில் பயன்படுத்தப்படும் GPS யின் திசைகாட்டும் துல்லியமான நிலைக்கு சிக்கலை ஏற்படுத்தும். மேலும் சர்வதேச நேர் மண்டலத்தை பாதிக்கும். ஷேர் மார்க்கெட் மற்றும் பல பைனான்ஸ் மார்கெட்டிங் சிஸ்டம்ஸ்களில் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
புவியியல் கால அளவுகளில், மனித அளவில் சாய்வு முக்கியமற்றதாகத் தோன்றினாலும், இத்தகைய மாற்றங்கள் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தலாம். உதாரணமாக, நீரின் மறுபகிர்வு கடல் மட்ட மாற்றங்களை வெவ்வேறு பகுதிகளில் பாதிக்கலாம். தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்வீச்சிலிருந்து நம்மைக் காக்கும் அதன் காந்தப்புலம் உட்பட கிரகத்தின் உள் அமைப்புகளையும் இது பாதிக்கிறது.