பூமிக்கு அடியில் என்ன இருக்கும்? அதை தெரிஞ்சுக்க முடிந்ததா!

Earth
Earth
Published on

இன்றைய நவீன உலகில் மனிதர்கள் விண்வெளியை பகுதிகளால் பிரித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே கடந்த காலத்தில் பூமிக்கு அடியில் என்ன இருக்கும் என்பதை தெரிஞ்சுக்க பல நாடுகள் போட்டியிட்டன. காரணம், உண்மையிலே சக்திவாய்ந்த நாடு எது என்பதை இந்த உலகிற்கு காட்டவே. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த ஆராய்ச்சிகள் படிப்படியாக கைவிடப்பட்டன. என்ன காரணமாக இருக்கும்? யார் யாரெல்லாம் முயற்சிசெய்தனர்? வாருங்கள் பார்ப்போம்.

கோலா சூப்பர் டீப் போர்ஹோல் (Kola Superdeep Borehole):

  • ரஷ்யாவில் உள்ள கோலா தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்த ஆழ்துளையானது பூமியில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளை மற்றும் ஆழமான செயற்கை புள்ளியாகும்.

  • இது 40,230 அடி (12.2 கிலோமீட்டர்) ஆழத்தை கொண்டது.

  • பனிப்போரின் போது சோவியத்துகள் இந்த ஆழ்துளை கிணற்றை உருவாக்கி, பூமியின் மைய பகுதியை அடைய முயற்சித்தனர்.

  • துரதிர்ஷ்டவசமாக, அன்றைய சோவியத் குழுமத்திற்குள் நடந்த குழப்பத்தின் காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

  • இன்று நரகத்தில் இருந்து சித்திரவதை செய்யப்பட்ட ஆன்மாக்களின் அலறல்களை இந்த ஆழ்துளை கிணற்றின் வழியாக நீங்கள் கேட்கலாம் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

ஆழமான நிலத்தடி ஆய்வகங்கள் (DULs):

  • இந்த பல்துறை ஆராய்ச்சி உள்கட்டமைப்புகள்(நிலத்தடி ஆய்வகங்கள்) உலகம் முழுவதும் அமைந்துள்ளன, சில நூறு மீட்டர்கள் முதல் பல கிலோமீட்டர்கள் வரை முற்றிலும் பாறை மேலடுக்குகளில் இதை அமைத்திருக்கார்கள்.

  • DULகள்( Deep underground Laboratory) போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சூழல்கள் நிரம்பிய பகுதிகளில், நியூட்ரினோக்கள்( neutrinos), இருண்ட பொருள் மற்றும் புவி இயற்பியல் போன்ற அறிவியல் ஆய்வுகள் நிறைந்த சோதனைகளுக்கு வழிவகை செய்கின்றன.

சீனாவின் 2,400-மீட்டர் ஆழமான இயற்பியல் ஆய்வகம்:

  • சிச்சுவான்( Sichuan ) மாகாணத்தில் செயல்படும் இந்த நிலத்தடி ஆய்வகம் உலகளவில் மிக ஆழமானது மற்றும் மிகப்பெரியது.

  • இருண்ட பொருள் எனப்படும் மழுப்பலான(elusive ) பொருளை ஆராய விஞ்ஞானிகள் இதைப் பயன்படுத்துகின்றனர்.

  • இந்த ஆய்வகம் காஸ்மிக் கதிர்கள் மற்றும் பிற குறுக்கீடுகளிலிருந்து விடுபட்டு பாதுகாக்கப்பட்ட சுத்தமான இடமாக இருப்பதால் இதை பயன்படுத்தினர்.

ஜப்பானின் லட்சிய திட்டம்:

  • ஜப்பானிய விஞ்ஞானிகள் பூமியின் மேலோட்டத்திற்கு அப்பால் என்ன உள்ளது என்பதையும் அதை அடையும் வழிமுறைகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

  • பூமிக்கு அடியில் பாறைகள்( earth crust ) சுமார் 25 மைல்கள் (40 கிலோமீட்டர்) தடிமனாக இருக்கும். அதை விட மேன்டில் (உருகிய பாறைகள் ) மிகவும் ஆழமாக உள்ளது. அதையும் தாண்டி சென்று அங்குள்ள மாதிரிகளை எடுக்க இன்னும் வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை! மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தாகும் மாசுபாடு! 
Earth

ரஷ்யா கைவிடுவதற்கான காரணங்கள்:

அதிகரிக்கும் வெப்பநிலை:

ஆழ்துளை பூமியில் ஆழமாக இறங்கும் போது, எதிர்பாராத விதமாக வெப்பநிலை உயர்ந்து கொண்டிருந்தது. அதன் ஆழமான புள்ளியில், வெப்பநிலை 356 டிகிரி பாரன்ஹீட்டை வரை எட்டியது. இந்த தீவிர வெப்பம் துளையிடும் உபகரணங்களை சேதப்படுத்தியது. இதனால் மேலும் முன்னேற கடினமாக இருந்தது.

பாறை அடர்த்தி மற்றும் தொழில்நுட்ப சவால்கள்:

ஆழ்துளையில் பல்வேறு அடர்த்தியான பாறைகள் இருந்தன, இது துளையிடும் செயல்பாடுகளை மேலும் சிக்கலாக்கியது. திட்டத்தின் தொழில்நுட்ப சிக்கல்களை சரி செய்ய நேரம் எடுத்ததால், இதை தொடர்ந்து துளையிடுவதற்கான சாத்தியத்தை பாதித்தது.

பின், ஏன் இந்த முயற்சிகள்? இந்த வகையான முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படுகின்றன?

ஒரு நாட்டின் பொறியியல் திறமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தி தாங்கள் யார் என்று இந்த உலகிற்கு காட்டவே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com