உலகளவில் இந்தியாவின் மிகவும் மோசமான நகரங்கள் எவை? எதனால்?

Pollution
Pollution

உலகம் முழுவதும் காற்று மாசுபாடு, பரவலான உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நெருக்கடியாக இருந்து கொண்டிருக்கிறது. உலகிலிருக்கும் பல நகரங்கள் காற்று மாசுபாட்டின் அபாயகரமான அளவை எட்டியிருக்கின்றன. உலகில் பல நகரங்கள், உலகச் சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு வரம்பான 5µg/m3 எனும் அளவை விட 15 மடங்கு அதிகமாகக் கொண்டிருக்கின்றன. இக்காற்று மாசுபாடானது, பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், இதய நோய் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படுத்துவதுடன், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருவதாக, காற்று மாசுபாடு தொடர்புடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகில் காற்று மாசுபாட்டால் மிகவும் மோசமான நகரங்கள் எனும் பட்டியலில் 25 நகரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நகரங்கள் மற்றும் காற்று மாசுபாட்டின் அளவும் கீழேத் தரப்பட்டிருக்கின்றன.

1. டாக்கா, வங்கதேசம் - 114.5 µg/m3

2. லாகூர், பாகிஸ்தான் – 95 µg/m3

3. பாட்னா, இந்தியா - 67.0 µg/m3

4. புதுடெல்லி, இந்தியா - 65.9 µg/m3

5. டெல்லி, இந்தியா – 64 µg/m3

6. உரும்கி, சீனா - 63.4 µg/m3

7. முசாபர் நகர், இந்தியா - 62.4 µg/m3

8. எக்சியான், சீனா - 57.9 µg/m3

9. எக்சுவாங், சீனா - 57.0 µg/m3

10. பெசாவர், பாகிஸ்தான் - 56.2 µg/m3

11. ஆன்யாங், சீனா - 54.6 µg/m3

12. துசான்பே, தஜிகிஸ்தான் – 53.8 µg/m3

13. காசியாபாத், இந்தியா – 53.5 µg/m3

14. ஜெங்சோகு, சீனா – 53.3 µg/m3

15. லக்னோ, இந்தியா – 53.1 µg/m3

16. எக்சினெக்சியாங், சீனா – 51.6 µg/m3

17. லான்சோகு, சீனா – 49.5 µg/m3

18. சிசியாசுவாங், சீனா – 48.6 µg/m3

19. காத்மண்டு, நேபாளம் – 48.5 µg/m3

20. துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – 47.8 µg/m3

21. விசாகப்பட்டினம், இந்தியா – 46.8 µg/m3

22. சண்டிகர், இந்தியா – 45.8 µg/m3

23. தையுவான், சீனா – 48.2 µg/m3

24. பாக்தாத், ஈராக் – 44.9 µg/m3

25. தியான்சின், சீனா – 44.9 µg/m3

இதையும் படியுங்கள்:
World Turtle Day 2024: பூமியின் பண்டைய பாதுகாவலர்கள்! 
Pollution

மேற்காணும் 25 நகரங்களின் பட்டியலில் சீனாவில் அதிக அளவாக 10 நகரங்கள் இருக்கின்றன. அதற்கடுத்து இந்தியாவில் எட்டு நகரங்கள் இருக்கின்றன.

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒன்பது நகரங்கள் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தன. தற்போது ஒரு நகரம் குறைந்திருக்கிறது. ஆனால், சீனா 4 நகரங்களிலிருந்து 10 எனும் எண்ணிக்கைக்கு உயர்ந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com