எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது? எப்படிக் கண்டுபிடிப்பது?

தண்ணீரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
தண்ணீரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள்https://tamilandvedas.com

ம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. ஆனால், அவை மண்ணுக்கு எத்தகைய கேடு என்பதை நாம் அறியாமல் இல்லை. இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்துள்ளது. இதை குறைக்கவே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தமிழக அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளது.

நாம் வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களால் கால்நடைகள் முதல் இந்த பூமி வரை எல்லாமே பாதிக்கப்படுகிறது. இன்று வெப்பமயம் அதிகமாகி விட்டது. அதற்குக் காரணமும் இந்த பிளாஸ்டிக் என்று கூட சொல்கிறார்கள் வல்லுனர்கள். மழை நாட்களில் பூமிக்குள் செல்ல வேண்டிய தண்ணீரை செல்லாமல் பிளாஸ்டிக் தடை செய்கிறது. இதனால் பூமி வெப்பமயமாகிறது என்று கூட ஒரு கருத்து உண்டு. அது முற்றிலும் உண்மைதானே.

‘அப்பப்பா… என்ன வெயில் இப்படிக் கொளுத்தி எடுக்கிறதே’ என்று நாம் ஆதங்கப்பட்டுக் கொள்வோம். ஆனால், நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால்தான் இதுபோன்ற நிகழ்வுகளை இயற்கை நிகழ்த்திக் காட்டுகிறது. வருங்காலத்தில் இப்படிச் செய்யாதீர்கள் என உணர்த்திக் காட்டுகிறது என்று கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

சரி, இந்த பிளாஸ்டிக் எப்படி உருவானது? அதிகம் தீங்கை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் எது? மறுபயன்பாடு செய்யப்படும் பிளாஸ்டிக்கை எப்படி வாங்குவது? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
ஜீரண மண்டல உறுப்புகளைக் குளிர்விக்கும் ஆறு  வகை பானங்கள்!
தண்ணீரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

குளோரொனைட் பிளாஸ்டிக் எனப்படும் பாலித்தின் ரசாயனப் பொருளால் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக், நியூசிலாந்தில் 1907ம் ஆண்டில்தான் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. சில வருடங்களில் படிப்படியாக உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடானது பரவத் தொடங்கியது. அதன்படி, 1957ம் ஆண்டில் இந்தியாவிற்குள் பிளாஸ்டிக் நுழைந்தது.

குளிர்பானம் மற்றும் குடிநீருக்காகப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகிக்கும் முன்பு பிளாஸ்டிக்கின் தர வகைகளை அறிந்து கொள்ள வேண்டும். RIC (Resin Identification Code) எனப்படும் குறியீடுகள் மூலம் நாம் அதனை கண்டறியலாம். பிளாஸ்டிக் பாட்டில்களில் முக்கோண வடிவிலான எண்கள் கொண்ட குறியீடுகள் பொறிக்கப் பட்டிருக்கும். அந்தக் குறியீடுகள் ஒன்று முதல் ஏழு வரை அமைந்திருக்கும். 1, 3, 6, 7 இதுபோன்ற எண்கள் பொறிக்கப்பட்டிருந்தால் அதனை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தக்கூடாது என்பதைக் குறிக்கும். இதுபோன்ற பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதன் மூலமாக கேன்சர் போன்ற கொடிய நோய்கள் நமக்கு வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 2, 4, 5 போன்ற எண்கள் பொறிக்கப்பட்டிருந்தால் அதனை நாம் குடிநீர் உட்பட அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

இனி, தண்ணீர் பாட்டில்கள் வாங்கும்பொழுது மிகவும் கவனமாக இருந்து பயன்படுத்தக்கூடிய நிலையில் தயார் செய்திருக்கும் பாட்டில்களை தேர்ந்தெடுங்கள். ஏனென்றால், நாம் காசு கொடுத்து வாங்குவது வாட்டர் பாட்டிலை மட்டுமல்ல, நம் வாழ்க்கையில் ஆரோக்கியத்தையும் சேர்த்துதான். சின்னச் சின்ன விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது, நம் ஆரோக்கியத்திற்கு நாமே வேட்டு வைக்கும் செயலாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com