வருமானத்தை பெருக்கித் தரும் வெள்ளைக் கடம்பு!


Flowers and pods in kadambu tree
White khadka tree
Published on

வெள்ளைக்கடம்பு மரத்தை அதிக பயன்தரும் மரமாகவும், குறைவில்லாத பணத்தை அள்ளித்தரும் வணிக மரமாகவும், அலங்கார மரமாகவும்,  சங்கப் பாடல்களில் முருகன், திருமாலுக்குரிய சிறந்த மரமாகவும் கூறுவது உண்டு. அவற்றைப் பற்றி இப்பதிவில் காண்போம்! 

"உடம்பை முறித்து கடம்பில் போடு" என்ற முதுமொழி உண்டு. ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும் சக்தி கடம்ப மரத்தின் பலகைகளுக்கு உண்டு என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். 

வெள்ளை கடம்பு மரமானது வேகமாகவும் , உயரமாகவும், வளரக்கூடிய மரமாகும். மரத்தின் விதானம் ஒரே சீராக அகன்று பெரிய அளவில் காணப்படுகின்றது .இது பெரும்பாலும் நேராக வளரக்கூடியது. இம்மரம் 45 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இம்மரத்தின் பட்டைகள் வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும். 

தட்பவெட்ப சூழல்கள்: இந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் 300 முதல் 800 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் பரவலாக காணப்படுகின்றது. வெள்ளை கடம்பு மரம் ஆயிரம் மில்லி மீட்டர் மழை அளவு உள்ள இடங்களில் நன்கு வளரும் தன்மை உடையது. நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் பகுதிகளில் செழித்து வளரும் தன்மை உடையது. மேலும் செம்மண் மற்றும் ஆற்றுப்படுகை ஓரங்களில் வளரும் தன்மையுடையது.

பூக்கள் மற்றும் காய்கள்: கொத்தாக பூக்கும் பூக்களை கொண்ட இம்மர பூக்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. இதனால் இதனை அலங்கார மரமாகவும் வளர்க்கின்றனர். இதன் காய்கள் உருண்டை வடிவத்தில் டென்னிஸ் பந்து போல் காணப்படுகிறது. நன்கு பழுத்த காய்களை சேகரித்து விதைகளை பிரித்து எடுத்து நிழலில் காயவைத்து ,வளர்ந்த விதைகளை நாற்றுகள் உற்பத்திக்கு பயன்படுத்தலாம். 

நாற்றங்கால் வளர்ப்பு முறைகள்: ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதங்களில் கிடைக்கக்கூடிய இளஞ் சிவப்பு வண்ண முதிர்ந்த பழங்களை சேகரித்து விதைகளை பிரித்து எடுக்க வேண்டும். பழங்களை 3, 4 நாட்கள் நீரில் நொதிக்கவிட்டு பின் கைகளில் பழங்களை நன்கு கசக்கி விதைகளை வெளியேற்ற வேண்டும் .பிறகு 0.5 மில்லி மீட்டர் சல்லடை கொண்டு நீரை வடிகட்டி விதைகளை பிரித்து எடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மரம் வளர்க்க விதை தேர்வு செய்யும் முறை!

Flowers and pods in kadambu tree

ஒரு கிலோ விதையில் 90 ஆயிரம் முதல் 2700 000 விதைகள் காணப்படுகின்றன.  அவ்வாறு பிரித்தெடுத்த விதைகள் 5 2% வரை முளைக்கும் தன்மை கொண்டிருக்கும். விதைகளை நிழல் பாத்திகளின் மேலாக தூவி உள்ளங்கைகளால் மெதுவாக தட்டி விட வேண்டும். 

பிறகு பூவாளியை கொண்டு லேசாக அடிக்கடி நீர் தெளிக்க வேண்டும். மூன்று வாரங்களில் விதைகள் முளைத்துவிடும். முளைப்புக்கு பின் நிழல் தேவையில்லை. நாலு முதல் ஐந்து மாதம் வளர்ந்த நாற்றுக்களை மழைக்காலத்தில் நனகு தயார் செய்யப்பட்ட வயல்வெளிகளில் நட வேண்டும்.

நிலத் தேர்வு: 

நடுவதற்கு முன்பு நிலத்தை முதல் சட்டி கலப்பை கொண்டும் பிறகு கொக்கி கலப்பை கொண்டும் உழ வேண்டும். கடம்ப மரங்களை ஒட்டுப் பலகை பயன்பாட்டிற்காக வளர்க்கும் பொழுது மரத்தின் இடைவெளி 5 ×5 மீட்டர் என்ற அளவிற்கு அதிகரிக்க வேண்டும்.

களைதல்:

அடர் நடவு முறையில் 2 ×2 மீ அல்லது 3 ×3 இடைவெளியில் நடப்பட்ட மரங்களை மூன்று ஆண்டு இடைவெளியில் ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்ற ரீதியில் களைதல் அவசியம். அவ்வாறு களையும் பொழுது மரம் நன்கு வளர்ந்து பலனைத் தரும். 

மரப்பண்புகள்:

வெள்ளைக் கடம்பு மரமானது ஒளி விரும்பும் மரமாகும். நாற்றுக்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது அவசியம். உலர் பனி, வறட்சி மற்றும் ஈரப்பதம் போன்றவைகளால் பாதிக்கப்படும் வெள்ளைக் கடம்பு மரமானது வேகமாக வளரும் அதனால் 6 முதல் 8 வருடங்களில் நன்கு வளர்ந்து பலனைக் கொடுக்க வல்லது. 

பயன்கள்:

தீவனம்: மரத்தின் இலைகள் அதிக புரதச் சத்தை 22% கொண்டு உள்ளதால் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக பயன்படுகின்றன. 

இதையும் படியுங்கள்:
ஜப்பான் கடலின் டிராகன் முக்கோணம்: மர்மங்களின் கடல்!

Flowers and pods in kadambu tree

மரக்கட்டைகள்:

மரத்தின் கட்டைகள் வெளிர்மஞ்சள் நிறத்தில் உள்ளன.கட்டையின் கன அடர்த்தி 290 முதல் 560கிலோ கிராம் .கன மரம் சார்ந்த சிறு பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு பயன்படுகின்றன.

எண்ணெய்:

மரத்தின் பூக்களிலிருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றது. 

மருந்து பொருட்கள்:

வெள்ளை கடம்பு மரத்திலிருந்து பெறப்படும் பட்டைகள் காய்ச்சலை குணப்படுத்துவதற்கு மருந்தாக பயன்படுகின்றன. 

வெள்ளைக் கடம்பு மரங்கள் தீக்குச்சி உற்பத்திக்கும், பென்சில் மற்றும் ஒட்டுப்பலகை தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. இதனால் வெள்ளை கடம்பு மரங்கள் நல்ல சந்தை வாய்ப்பு உடைய மரமாக எப்பொழுதும் கருதப்படுகிறது.

காகிதம், தீக்குச்சி, ஒட்டுப்பலகை மற்றும் பென்சில் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இம்மரத்தை தற்போதைய சந்தை நிலவரப்படி டன் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 3900 முதல் ரூபாய் 7500 வரை விலை கொடுத்து வாங்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com