வெப்பத்தை குறைக்கும் வெள்ளை பெயிண்ட்!

White paint that reduces heat!
White paint that reduces heat!

வெப்பத்தை குறைக்கும் வெள்ளை பெயிண்ட் எனும் கூலிங் பெயிண்ட்.

பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் சூரிய வெப்பம் சுட்டெரிக்கிறது. அளவுக்கு அதிகமான வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த நிலையில் வெயிலை சமாளிக்க பலரும் ஏசி, ஏர் கூலர் போன்றவற்றை வீடுகளில் அதிகம் வாங்கி பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். ஆனால் இவைகள் வெளிப்படுத்தும் கார்பன் அலைகளும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கத்தால் 12,000 மக்கள் உயிர் இழக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் 2030 ஆம் ஆண்டு பிறகு ஒவ்வொரு ஆண்டும் 50,000 மக்கள் உயிரிழக்கக்கூடும் ஆபத்து ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

அதிக அளவு வெப்பத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. இப்படி பல்வேறு வகையான சிக்கல்களை தடுக்க, வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கூலிங் பெயிண்ட் எனப்படும் வெள்ளை பெயிண்டை வீடுகளின் மேற்புறத்திலும் மற்றும் சுற்றிலும் அடிக்கும் எளிய நடைமுறை இன்று உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் 6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் வீட்டிற்குள் நுழைவது தடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வெள்ளை நிற பெயிண்ட் சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கிறது. எதனால் சூரிய வெப்பம் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கப்படுகிறது. மற்ற வண்ண பெயிண்டுகள் சூரிய வெப்பத்தை உள்ளே இழுக்கும் தன்மை கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
பருவநிலை மாற்றமும்; தொற்று நோய்களும்!
White paint that reduces heat!

இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக தெலுங்கானா அரசு அலுவலகங்களில் கட்டாயம் வெள்ளை பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com